செங்கல் சூளை உரிமையாளர்களிடம் ரூ. 1 லட்சம் மாமூல் கேட்டு மிரட்டிய தவெக நிர்வாகி கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கம்!வேலூர் ,மே 27 -தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தமிழக வெற்றிக்கழகம் தலைமையிலான ஆட்சி அமைந்துள்ளது. தற்போது தமிழ்நாடு முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் அமைச்சர்கள் தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு மருத்துவமனைகள், கல்குவாரிகள், அம்மா உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் கட்சி நிர்வாகிகள் ஆய்வு நடத்த அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலையில் வேலூர் மாவட்டம், கணியம்பாடி தவெக கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார் தலைமையிலான நிர்வாகிகள் லோகேஷ், ஈஸ்வரன் உள்ளிட்டோர் செங்கல் சூளை உரிமையாளர்களை மிரட்டி மாதந்தோறும் ரூ.1 லட்சம் மாமூல் கேட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கடந்த 22ஆம் தேதி செங்கல் சூளை பகுதிக்குச் சென்றி ருந்த தவெக ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கும் செங்கல் சூளை உரிமையாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதமும் கைகலப்பும் ஏற்பட்டுள்ளது. அன்றைய தினமே தவெக நிர்வாகிகள் மீது செங்கல் சூளை உரிமையாளர்கள் வேலூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பதிலுக்கு தவெகவினர் இந்த பகுதிகளில் தொடர்ந்து கனிம வள கொள்ளை நடைபெறுகிறது. இதனை தடுக்கவே நாங்கள் சென்றோம். மாமூல் எதுவும் கேட்கவில்லை என புகார் அளித்தனர். இந்த சம்பவம் திடீர் சர்ச்சையை ஏற்படுத்தியது. செங்கல் சூளை உரிமையாளர்களிடம் ரூ.1 லட்சம் மாமூல் கேட்டும், மிரட்டல் விடுத்த விவகாரம் தொடர்பாக கணியம்பாடி தாலுகா கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அதிரடியாக நீக்கி தவெக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக தவெக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு விவகாரங்களில் தவெகவினர் தலையிடுதல் கூடாது. தங்களின் எல்லை என்ன என்பதை அறிந்து தவெகவினர் செயல்பட வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் அல்லாதோர் அரசு சார்ந்த விவகாரங்களில் தலையிடுதலோ, ஆய்வுகள் மேற்கொள்ளவோ கூடாது .பொது மக்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் எவ்வித இடையூறும் இன்றி கண்ணியத்துடன் செயல்பட வேண்டும் .கட்சியின் பெயரையோ அல்லது கட்சி பதவிகளையோ பயன்படுத்தி எவரும் தன்னிச்சையான அதிகார மையங்களாக செயல்படக்கூடாது. குறிப்பாக அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள் மற்றும் பொது இடங்களுக்கு செல்லும்போது கட்சியின் மாண்பை குறைக்கும் வகையில் எவ்வித செயல்பாடுகளிலும் ஈடுபடக்கூடாது என கட்சி தலைமை வலியுறுத்தியுள்ளது. இதற்கிடையே செங்கல் சூளை உரிமையாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள், செங்கல் சூளையில் பணிபுரிபவர்கள், பொதுமக்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் கணியம்பாடி பேருந்து நிறுத்தம் அருகே கடந்த 2 5 ஆம் தேதி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். இதையடுத்து வேலூர் கோட்டாட்சியர் செந்தில்குமார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதை தொடர்ந்து அவர்கள் அனைவரும் கலந்து சென்றனர் .இந்நிலையில் தவெக நிர்வாகி விஜயகுமார் மீது தவெக தலைமை அதிரடி நடவடிக்கை எடுத்து அவரை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குடியாத்தம் பிச்சனூர்பேட்டை கங்காதர சாமி நகராட்சி நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த கோரி புதிய நீதிக் கட்சி சார்பில் எம்எல்ஏவிடம் கோரிக்கை மனு அளிப்பு!வேலூர், மே 27-வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரம், பிச்சனூர்பேட்டை கங்காதர சாமி நகராட்சி நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தக் கோரி குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிந்துவிடம் புதிய நீதி கட்சியின் நகரச் செயலாளர் மற்றும் கைத்தறி காவலன் எஸ். ரமேஷ், பள்ளி கல்விக் குழு முன்னாள் துணைத் தலைவர் கோ. ஜெயவேலு ஆகியோர் மரியாதை நிமித்தமாக சால்வை அணிவித்து விட்டு கோரிக்கை மனு அளித்தனர். இந்தப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்திக் கோரி பல்வேறு போராட்டங்கள், பல அரசியல் தலைவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்து வருகின்றார் புதிய நிதி கட்சியின் நகர செயலாளர் கைத்தறி காவலன் எஸ் ரமேஷ். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் அவர் இந்த பள்ளியை தரம் உயர்த்தாமல் ஓய மாட்டேன் என்பதில் உறுதியோடும் பொதுமக்களுக்கு ஏதாவது தன்னால் இயன்றது செய்ய வேண்டும் என்றும் பணியாற்றி வருகிறார். கல்விக் கண்ணை திறந்த கர்ம வீரர் காமராஜர் போட்டியிட்ட இந்த தொகுதியில் மேலும் ஒரு பள்ளியை தரம் உயர்த்துவதற்காக தொடர்ந்து போராடி வருகிறார் இந்த போராளி எஸ் ரமேஷ் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது தொடர் முயற்சி தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் நிறைவேறும் என்பது திண்ணம். இம்முறை பள்ளியை தரம் உயர்த்தியே தீருவோம் என்ற கொள்கையுடனும், லட்சியத்துடனும் அவர் செயல்பட்டு வருகிறார். இம்முறை அவரது எண்ணம் ஈடேறும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என்றே சொல்லலாம். தற்போது குடியாத்தம் தொகுதி எம்எல்ஏவிடம் மனு அளித்த போது ரமேஷூடன் குடியாத்தம் சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர், தமிழக வெற்றி கழக நகர செயலாளர் இளங்கோ மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மது அருந்தியதை மனைவி கண்டித்ததால் சோகம்: ராணுவ வீரர் தூக்கு மாட்டி தற்கொலை!வேலூர், மே 27-காட்பாடி அடுத்தபொன்னை மாதா கோயில் தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ் குமார் ( 30). இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வந்த இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கிருத்திகா என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.விடுப்பில் ஊருக்கு வந்த விக்னேஷ்குமார்மது அருந்திவிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து விக்னேஷ் குமார் மது அருந்தியதால் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.இதனால் மனமுடைந்து காணப்பட்ட விக்னேஷ்குமார் வீட்டின் படுக்கையறைக்குச் சென்று கதவை தாழிட்டு கொண்டு தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைக் கண்ட அவருடைய தாய்உடனடியாக உறவினர்களின் உதவியுடன் அவரை மீட்டு பொன்னை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் விக்னேஷ்குமார் ஏற்கனவே வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.இச்சம்பவம் குறித்து பொன்னை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விக்னேஷ் குமார் உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கே. வி. குப்பம் அடுத்த காவனூரில் பாதாள கால்வாய் அமைப்பதை தடுத்து நிறுத்த கோரி பொதுமக்கள் திடீர் முற்றுகை போராட்டம்!வேலூர், மே 26-வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த காவனூர் பகுதியில் பாண்டியன் மதகு கால்வாயில் நீரை விடுவதற்கு ஏரியிலிருந்து பாதாள கால்வாய் அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. இந்த புதிய கால்வாய் தெருவின் மத்தியில் செல்கிறது. இதனால் அருகில் உள்ள வீடுகள் சேதம் அடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது போக்குவரத்து, குடிநீர் ஆகியவற்றுக்கு கடும் இடையூறு ஏற்படும் என ஊர் மக்கள் கருதுகின்றனர். இதனால் பாதாளத்தில் கால்வாய் அமைக்கும் பணியை நிபந்தனைகள் இல்லாமல் நிறுத்த வேண்டும் என கிராம பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனையும் மீறி பணிகள் நடைபெற்று வந்தது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நீர்வளத்துறை அலுவலர்கள் மற்றும் வருவாய் துறை அலுவலர்களை திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.இதனால் அந்த பகுதியில் திடீரென பதட்டம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கே. வி. குப்பம் தொகுதி எம்எல்ஏ தென்றல் குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் அமைதியாக பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போகச் செய்ததுடன் பாதாள கால்வாய் அமைக்கும் பணியை தடைபடாது நடைபெற ஏற்பாடுகளை செய்தார். இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் திடீர் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்!வேலூர்,மே 26-வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் வே. ரா. சுப்புலட்சுமி தலைமை வகித்தார். அவர் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உடனடியாக மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். இந்த குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியருடன், மாவட்ட வருவாய் அலுவலர் மா. சிவசுப்பிரமணியன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பூ. காஞ்சனா, துணை ஆட்சியர் (பயிற்சி) கணேஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திருமால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கணியம்பாடியில் தவெக நிர்வாகியை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டம்!வேலூர்,மே 26-வேலூர் மாவட்டம், கணியம்பாடியில் செங்கல் சூளை உரிமையாளர்களிடம் லஞ்சம் கேட்டு மிரட்டியதாக தவெக ஒன்றிய செயலாளர் விஜயகுமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கணியம்பாடி பேருந்து நிறுத்தம் அருகே பொதுமக்கள் மற்றும் செங்கல் சூளை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கோட்டாட்சியர் செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அதில் சமரசம் அடையாத செங்கல் சூளை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் ,பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில கோட்டாட்சியரிடம் ஈடுபட்டனர். இதையடுத்து காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து தவெக ஒன்றிய செயலாளர் விஜயகுமார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் சுமார் 2 மணி நேரம் பேச்சு வார்த்தைக்கு பிறகு பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் கணியம்பாடி பகுதியில் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதும், திடீர் பரபரப்பு ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

கே. வி. குப்பம் அடுத்த காவனூரில் பாதாள கால்வாய் அமைப்பதை தடுத்து நிறுத்த கோரி பொதுமக்கள் திடீர் முற்றுகை போராட்டம்!வேலூர், மே 26-வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த காவனூர் பகுதியில் பாண்டியன் மதகு கால்வாயில் நீரை விடுவதற்கு ஏரியிலிருந்து பாதாள கால்வாய் அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. இந்த புதிய கால்வாய் தெருவின் மத்தியில் செல்கிறது. இதனால் அருகில் உள்ள வீடுகள் சேதம் அடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது போக்குவரத்து, குடிநீர் ஆகியவற்றுக்கு கடும் இடையூறு ஏற்படும் என ஊர் மக்கள் கருதுகின்றனர். இதனால் பாதாளத்தில் கால்வாய் அமைக்கும் பணியை நிபந்தனைகள் இல்லாமல் நிறுத்த வேண்டும் என கிராம பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனையும் மீறி பணிகள் நடைபெற்று வந்தது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நீர்வளத்துறை அலுவலர்கள் மற்றும் வருவாய் துறை அலுவலர்களை திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.இதனால் அந்த பகுதியில் திடீரென பதட்டம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கே. வி. குப்பம் தொகுதி எம்எல்ஏ தென்றல் குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் அமைதியாக பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போகச் செய்ததுடன் பாதாள கால்வாய் அமைக்கும் பணியை தடைபடாது நடைபெற ஏற்பாடுகளை செய்தார். இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் திடீர் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் பணத்தை மோசடி செய்து ஏமாற்றிய ஐ ஃப் எஸ் மற்றும் எம் ஏ ஆர் சி நிதி நிறுவனங்களின் இயக்குநர்களை கைது செய்ய தயங்கும் காவல்துறை!வேலூர், மே 25-2026ல் திமுக தேர்தலில் தோல்விக்கு காரணமே வேலூர் சார்ந்த ஐஎஃப்எஸ் நிதி நிறுவனம் மற்றுமொரு எம்ஏஆர்சி நிறுவனம். இந்த நிறுவனங்கள் வேலூர், காஞ்சிபுரம், அரக்கோணம், சென்னை சுற்றுவட்டாரத்தை சேர்ந்தது. தமிழ்நாட்டில் சில மாவட்டங்கள் போன்று பல மாவட்டங்களில் பொதுமக்கள் பணம் ரூ. 50000 கோடி பணத்தை (ரூ. ஐம்பதாயிரம் கோடி) நிதி மோசடி செய்ததுஇந்த நிறுவனத்தைச் சேர்ந்த இயக்குநர்கள் வேலூரில் உள்ளனர். இவர்கள் லட்சுமி நாராயணன், வேத நாராயணன், ஜனார்த்தனன், மோகன் பாபு. இந்த முக்கிய குற்றவாளிகளை காவல் துறை இன்னமும் கைது செய்யவில்லை. முக்கிய குற்றவாளிகள் கைது செய்யாமல் இருக்க காவல்துறைக்கு லஞ்சம் வழங்கப்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது. இதில் முக்கியமான நபர் விபச்சார தொழில் செய்து வந்த லக்ஷ்மி நாராயணன். வேலூரில் பிரபலமாக விபச்சார தொழில் செய்து வந்த இவரை இன்னும் கைது செய்யாமல் விட்டு விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளது மாவட்ட காவல்துறை. அதல பாதாளம் வரை பல பேருக்கு லஞ்சம் தாராளமாக வாரி வழங்கப்பட்டுள்ளது. மோசடியை அவர்கள் திமுக ஆட்சி காலத்தில் ஆளுங்கட்சியாக இருக்கும் போது சேகர்பாபு அமைச்சர் மற்றும் தயாநிதி மாறன் எம். பி .,போன்றவர்களை வரவழைத்து இந்த நிறுவனத்தை நிறுவி திறப்பு விழா நடத்தி உள்ளனர். பொதுமக்களிடம் இந்த நிறுவன இயக்குநர்கள் ஆளுங்கட்சி அமைச்சர்,எம்.பி., திறந்து வைத்த கம்பெனி என்றும், நம்பிக்கையான கம்பெனி என்றும் சொல்லி பொதுமக்களிடம் ரூ. 50000 கோடி பணத்தை தைரியமாக கொள்ளையடித்துள்ளனர்.இந்த பணத்தை வைத்துக் கொண்டு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றனர். நான்காண்டுக்குப் பிறகு அதில் மூன்று இயக்குநர்கள் கைது செய்யப்பட்டனர். மிக முக்கிய புள்ளியான லக்ஷ்மணன் இன்னும் கைது செய்யப்படவில்லை. இந்த விரக்தியில் பொதுமக்கள் உள்ளனர். இதில் முதலீடு செய்த ஐந்து லட்சம் குடும்பம், ஏழை, நடுத்தர மக்கள் தங்களது பிள்ளைகள் திருமணத்துக்காக சேர்த்து வைத்த பணம். கல்விக்காக சேர்த்து வைத்த பணம். வீடு கட்டுவதற்காக சேர்த்த பணம். இப்படி ஏழை, எளிய மக்களை ஏமாற்றிய ஐ எஃப் எஸ், மார்க் நிதி நிறுவனங்களால்5 லட்சம் குடும்பங்கள் பாதிப்பு அடைந்துள்ளது. 200க்கும் மேற்பட்ட நபர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.இரண்டு லட்சம் குடும்பம் மனநோய் போன்ற இன்னல்களை சந்தித்து வருகின்றனர் .அரக்கோணம் மாவட்டம், நெமிலி கிராமத்தைச் சேர்ந்த ஜெகன், இந்த நிதி நிறுவனத்தில் மிகப்பெரிய மையப்புள்ளி. தற்போது புழல் சிறையில் உள்ளார். சமீபத்தில் ஜாமினில் வெளிவந்த இவர் திமுக ஆட்சிக்கு வந்தால் பணம் கிடைக்காது என்று ஒரு வதந்தியை பரப்பி விட்டுச் சென்று விட்டார். தற்போது மீண்டும் சிறைக்குச் சென்று விட்டார்.இதன் அடிப்படையில் தான் சென்னையைச் சுற்றியுள்ள அனைத்து வட மாவட்டங்களிலும் திமுக படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.பொதுமக்கள் நலனை கருதி இதில் சம்பந்தமுள்ள இயக்குநர்கள் மற்றும் இரண்டாம் நிலையில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும். சில லீடர்கள் இதுநாள் வரை கைது செய்யப்படவில்லை. முக்கியமானவர்கள் தலைமறைவாக உள்ளனர். அவர்களை கைது செய்யாமல் இருக்க லஞ்சம் கொடுக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வேகமாக பரவி வருகிறது.இதுபோன்ற மோசடி நபர்களை அமைச்சர் மற்றும் எம். பி., அடையாளம் காண வேண்டும். இல்லையென்றால் பொதுமக்கள் இப்படி தாங்கள் வியர்வை நீரை சிந்தி சம்பாதித்த பணம் மோசடி நபர்களால் பறிக்கப்படும். பொதுமக்களும் நடுவீதியில் நிற்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்படுவார்கள் ஆதலால் இது போன்ற தனியார் நிதி நிறுவனங்களை நம்பி முதலீடு செய்யாமல் அரசு வங்கிகளில் முதலீடு செய்து தங்களது பணத்துக்கு உத்தரவாதத்துடன் சேமிப்பை தொடங்க வேண்டும் என்பது அனைவரது ஆவலாக உள்ளது.