Archives
August 2026
July 2026
June 2026
May 2026
April 2026
March 2026
February 2026
January 2026
December 2025
November 2025
October 2025
September 2025
Categories
Uncategorized
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
செய்திகள்
நிகழ்ச்சிகள்
விளையாட்டு
Meta
Log in
Entries feed
Comments feed
WordPress.org
செய்திகள்
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
நிகழ்ச்சிகள்
வர்த்தகம்
விளையாட்டு
உலக செய்திகள்
அரியூர் காவல் சரக எல்லையில் விபச்சாரம் அதிகரிப்பு: கண்டு கொள்ளாத காவல் ஆய்வாளர் நாகராஜன்!வேலூர்,அக்.17-வேலூர் அரியூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் சில வீடுகள் குறிப்பாக சித்தேரி பகுதியில் 24 மணி நேரமும் விபச்சாரம் நடக்கின்றது. அரியூர் பகுதியில் உள்ள சில தங்கும் விடுதிகள் மற்றும் வீடுகளிலும், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் சில புரோக்கர்கள் பகல், இரவு என 24 மணி நேரமும் விபச்சார விடுதியாக மாற்றி தைரியமாக தொழில் நடத்தி வருகின்றனர். இதனால் கொள்ளை லாபம் பார்க்கின்றனர். இதில் வரும் லாபத்தில் மாதந்தோறும் ரூபாய் 1.50 லட்சம் வீதம் ஒவ்வொரு தங்கும் விடுதி மற்றும் இல்லங்களில் நடைபெறும் விபச்சார விடுதிகள் போன்றவற்றிற்கு கப்பமாக காவல் ஆய்வாளர் நாகராஜனிடம் பணம் செலுத்த வேண்டுமாம். இவ்வாறு எழுதப்படாத சட்டம் ஒன்று உள்ளது என்று அரியூர் காவல் சரக பகுதியில் கூறப்படுகிறது. இதற்கு அடித்தளம் இட்டவர் முன்னாள் துணை காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு என்று சொன்னால் அது மிகையாகாது. ஆய்வாளர் நாகராஜன் காட்டில் கனமழை பெய்ய ஆரம்பித்துவிட்டது என்றே சொல்லலாம். மழை என்றால் சாதாரண மழை அல்ல கன மழை என்றே சொல்லலாம். நீங்கள் எனது காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் எந்த குற்றங்களை வேண்டுமானாலும் நடத்திக் கொள்ளுங்கள். ஆனால் எனக்கு மாதந்தோறும் தவறாது பணம் வந்து கொட்ட வேண்டும் என்று ஒரு எழுதப்படாத சட்டத்தை அமல்படுத்தி வசூல் செய்து வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக இவரிடம் வருபவர்கள் புரோக்கர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் மட்டுமே வந்து மாமூலை செலுத்தி விட்டு சத்தம் இன்றி செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற களைகளை பறித்தெறிய வேண்டிய காவல்துறையின் கண்ணியமிகு அதிகாரி இப்படி ஒரு காவல்துறையில் கருப்பு ஆடு போல செயல்படுவது மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு இவரது செயல்பாடு மிகவும் மோசமாக உள்ளது என்கின்றனர் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும். அரியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா, கள்ளச்சாராயம், மணல் கடத்தல், விபச்சாரம் உள்ளிட்ட விரும்பத்தகாத சமூக விரோதச் செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவை கட்டுக்குள் கொண்டு வரப்படுமா? அல்லது இன்னும் அதிகமாகுமா? என்று தெரியவில்லை. ஆன்மீக தலமாக உள்ள பகுதியில் கள்ளச்சாராயம், கள்ள மது விற்பனை மற்றும் விபச்சாரம், விரும்பத்தகாத சமூக விரோதச் செயல்கள் தங்குதடையின்றி நடைபெற்ற வண்ணம் உள்ளது. நாகராஜன் சமூக விரோதிகளுக்கு காட்ஃபாதர் போன்று செயல்படுகிறார். பணம் பணம் என்று அலைகிறார் என்று கூறப்படுகிறது. இரவு நேரங்களில் சமூக விரோத கும்பலிடமஇ இணக்கமான முறையில் பேசுவதை அன்றாட வழக்கமாக வைத்து கொண்டுள்ளார். இவற்றையெல்லாம் தடுத்து நிறுத்த வேண்டிய காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்த்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வேலூர் சரக காவல்துறை டிஐஜி மற்றும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமன் ஆகியோர் அரியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் சமூக விரோதச் செயல்களை தடுத்து நிறுத்துவார்களா? அல்லது அவர்களும் வேடிக்கை பார்ப்பார்களா என்று தெரியவில்லை. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் அரியூர் காவல் நிலையத்திற்கு நான் இடமாறுதல் கேட்டு மாற்றிக் கொண்டு வந்தது மாமூல் மழை பொழிகிறது என்று கேள்விப்பட்டது தான் என்கிறார் இந்த காவல் ஆய்வாளர் நாகராஜன் என்று சொன்னால் அது மிகையாகாது. இப்படி ஒரு கண்ணியமிகு காவல் துறை அதிகாரி இப்படி சமூக விரோதிகளிடம் வசூல் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். கிருஷ்ணமூர்த்தி என்ற ஆட்டோ ஓட்டுநர் பட்டப் பகலில் மட்டுமின்றி இரவு என 24 மணி நேரமும் தனது ஆட்டோ டி.என். 23 சிசி: 3321 என்ற பதிவு எண் கொண்ட வாகனத்தில் விபச்சார அழகிகளை அழைத்துக் கொண்டு செல்வது அவர்கள் வேலை முடிந்ததும் மீண்டும் அவர்களை புதிய பேருந்து நிலையம் ,பழைய பேருந்து நிலையம் என்று கொண்டு வந்து விடுவது என்று வழக்கமாக கொண்டுள்ளார். அவரை இதுநாள் வரையில் போலீசார் கைது செய்யவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவர் வேப்பங்குப்பத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது சித்தேரி பகுதியில் புதியதாக வீடு எடுத்து அதில் விபச்சாரத்தை அரங்கேற்றி வருவது தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி பலருக்கும் தெரிந்தது காவல்துறைக்கு எப்படி தெரியாமல் போனது என்பது தான் விந்தையிலும் விந்தையாக உள்ளது. இந்த ஆட்டோ ஓட்டுநர் கிருஷ்ணமூர்த்திக்கு நெருங்கிய நண்பராக அன்பு என்பவர் டி .என்.23 ஏ.கே.0261 என்ற ஆட்டோவில் விபச்சார அழகிகளை அவருடன் இணைந்து விபச்சார தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்த இரட்டையர்களை முறையாக காவல் துறை விசாரணை வளையத்துக்கள் கொண்டு வந்தால் உண்மை வெட்ட வெளிச்சத்துக்கு வரும். அத்துடன் இவர்களது செல்போன் எண்களை ஆய்வு செய்தால் அது விபச்சாரத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதா? இல்லையா? என்பதும், அந்த அழைப்புகள் மூலம் யார் யாருக்கு அவர்கள் பேசினார்கள் என்பதும், அவர்களை யார்? யார்? தொடர்பு கொண்டுள்ளனர் என்பதும் வெட்ட வெளிச்சத்திற்கு வரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.அரியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் சமூக விரோதச் செயல்கள் முடிவுக்கு கொண்டுவரப்படுமா? அல்லது தொடர்ந்து இப்படித்தான் நடைபெறும் என்று எழுதப்படாத சட்டம் ஒன்று ஏதாவது போடப்பட்டுள்ளதா? என்பது தெரியவில்லை. வடக்கு மண்டல ஐடியாக்கள் இருந்த அஸ்ராகார்க் மத்திய அரசு பணிக்கு சென்று விட்டதால் இதுபோன்ற கருப்பு ஆடுகள் துள்ளிக் குதிக்க ஆரம்பித்து விட்டது. இதே நாகராஜன் முன்னாள் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த பிரவேஷ்குமார் மீது புகார் அளித்தார். விசாரணை நடத்திய காவல் துறை உயரதிகாரிகள் நாகராஜன் மூக்கை அறுத்தது குறிப்பிடத்தக்கது. நாகராஜன் ஒரு காவல் ஆய்வாளர் போல நடந்து கொள்ளாமல் விபச்சார புரோக்கர்களிடம் இணக்கம் காட்டுகிறார், பரஸ்பரம் காட்டுகிறார், நெருங்கி பழகுகிறார். மதிய வேளைகளில் தங்கும் விடுதிகளில் இவர் ஓய்வெடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதில் பல சந்தேகங்கள் இருப்பதாக சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் இதை ஒரு புகாராகவே நீண்ட காலமாக கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. காவல்துறையின் நற்பெயருக்கு இவர் களங்கத்தை ஏற்படுத்தி வருவதாகவும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறுகின்றனர். இவர் காவல் துறை அதிகாரி போல் அல்லாமல் அனைவரையும் மிரட்டி வசூல் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இருசக்கர வாகன சோதனை கூட மிரட்டி பணம் வசூல் செய்வதை வழக்கமாக மாற்றி விட்டார் இந்த பஞ்சமாபாதகன் என்று சொன்னால் அது மிகையாகாது. இவர் காவல் துறையில் ஒரு வித்தியாசமான அதிகாரி என்று சொன்னால் அதுதான் நிதர்சன உண்மை. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இவரால் விசாரணை செய்ய முடியாத வழக்குகள் மற்றும் இவருக்கு விரும்பத்தகாதவர்கள் என்று அறிய வந்தால் அவர்கள் கொடுப்பது பொய் புகார் இது பொய் வழக்கு என்று சொல்லிவிட்டு இவர் நழுவி விடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதை சீர்தூக்கிப் பார்த்து காவல்துறை தலைவர் ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்களும், இந்த பகுதி வாழ் மக்களும். தமிழக காவல்துறை தலைவர் அரியூர் காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் மீது சாட்டையை சுழற்றுவாரா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
காட்பாடியில் முன்னாள் முப்படை ராணுவ வீரர்கள் அனைத்து சங்கங்கள் ஒருங்கிணைந்து கொண்டாடிய 80வது சுதந்திர தின விழா!வேலூர்,ஆக.17-வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் முன்னாள் முப்படை ராணுவ வீரர்களின் அனைத்து சங்கங்கள் ஒருங்கிணைந்து 80 வது சுதந்திர தின விழாவை வெகு விமரிசையாக கொண்டாடினர். இந்த விழாவிற்கு வேலூர் மாவட்ட சங்கத் தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பாஸ்கரன், ரவீந்திரன், ஜெகதீசன், கமலநாதன், ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளர் ஜம்புலிங்கம், வடிவேலன், குமார், முனுசாமி, சதீஷ்குமார், தங்கவேலு, வாசு, சேட்டு, வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த சங்கத்தின் நிறுவனரும், தலைவருமான கே. சிவக்குமார் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி விட்டு அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதையடுத்து அனைவருக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சங்கம் முன்னாள் ராணுவ வீரர்களுக்கும், இந்நாள் ராணுவ வீரர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் பல உதவிகளை அவசரகால உதவிகளை அறிந்து அவர்களுக்கு உதவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சங்கம் உருவான பிறகு கோவிட் 19 மக்களுக்கும் எந்தவித அச்சமின்றி உதவிகளை செய்து கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்த சங்கம் அதற்காக காவலர் செய்தி மூலம் பாராட்டும், பதக்கங்களும் வென்ற சரித்திரமும் இந்த சங்கத்திற்கு உண்டு. மேலும் ராணுவ வீரர்களுக்கும், பொது மக்களுக்கும் உதவிகளை செய்ய தயக்கமின்றி செயல்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சங்கம் கடந்த 2021 முதல் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
குடியரசுத் தலைவர் திரௌபதி மர்மு நடத்திய ‘அட் ஹோம்’ வரவேற்பு நிகழ்ச்சியில் சிஎம்சி முன்னாள் இயக்குநர் டாக்டர் விக்ரம் மேத்யூஸ் பங்கேற்பு!வேலூர், ஆக. 17-வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் முன்னாள் இயக்குநரும், மருத்துவ ரத்தவியல் முதுநிலைப் பேராசிரியருமான டாக்டர் விக்ரம் மேத்யூஸ் இந்தியாவின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 15, 2026 அன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவர்களால் நடத்தப்பட்ட மதிப்புமிக்க ‘அட் ஹோம்’ வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் என்பதை வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறது. இவ்வாறு வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியின் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் துரை ஜாஸ்பர் விடுத்துள்ள பத்திரிகை செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இவர் பெயர் அப்துல் பதக் உக்கடம் பிரிவு உதவி மின் பொறியாளர் இவர் மீது ஏற்கனவே வெள்ளலூர் ஈச்சனாரி ஆகிய இடங்களில் பணிபுரிந்த போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அதன் பின்பு நகர பிரிவு அலுவலகத்தில் பணிபுரிந்த போது தினகரன் அலுவலகத்திற்கு எதிரே உள்ள ஒரு கட்டிடத்திற்கு விதிகளை மீறி மின்புத்திய இடமாற்றம் செய்யப்பட்டு தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது அது தவிர மேலும் இரண்டு புகார்கள் பீளமேடு உதவி செயற்பொறியாளரால் விசாரணை நடைபெற்றிருக்கும் வேளையில் இவருக்கு விருது
நறுவீ மருத்துவமனையில் 80வது சுதந்திர தினவிழா கொண்டாட்டம்!வேலூர்,ஆக.17-வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நறுவீ மருத்துவமனையில் இந்தியாவின் 80வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு அதன் தலைவர் டாக்டர் சம்பத் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். இதில் மருத்துவ அதிகாரிகள், மருத்துவர்கள் அனைவரும் பங்கேற்றனர்.
தமிழியக்கம் சார்பில் “ஞானம்பாடி” விருது வழங்கி கவுரவிப்பு!தமிழ் மொழியை எங்கும் விட்டு கொடுக்க வேண்டாம்:கவிஞர் வைரமுத்து வலியுறுத்தல்!வேலூர், ஆக. 16-தமிழ் மொழியை எங்கும் விட்டு கொடுக்க வேண்டாம்; படைப்பாளியைப் பார்க்காமல், படைப்புகளை பாருங்கள் என்று ஞானபீட விருதாளர் கவிஞர் வைரமுத்து பேசினார்.விஐடி பல்கலைக்கழகத்தில் தமிழியக்கம் சார்பில் ஞானபீட விருது பெற்ற கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான வைரமுத்துவுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.விழாவில் தமிழியக்கம் சார்பில் கவிஞர் வைரமுத்துவுக்கு, “ஞானம்பாடி” விருதை, தமிழியக்க நிறுவனரும், விஐடி வேந்தருமான கோ.விசுவநாதன் வழங்கி சிறப்பித்தார்.ஞானபீட விருதாளர் கவிஞர் வைரமுத்து ஏற்புரையாற்றி பேசியதாவது:எனக்கு மார்ச் 14-ல் ஞானபீட விருது அறிவிக்கப்பட்டது. முதலில் வந்து பாராட்டு விழாவுக்கு அழைத்தவர் விஐடி வேந்தர் கோ.விசுவநாதன்.இந்தியாவில் அங்கீரிக்கப்பட்ட 22 மொழிகளின் எழுத்தாளர்களுக்கு ஞானபீட விருது மோட்சம்; உச்சம். இந்தியாவில் இலக்கியத்துக்கு வழங்கப்படும் நோபல் பரிசு ஞான பீட விருதாகும்.இன்றைய சூழலில் ஒரு கவிஞன், இன்னொரு கவிஞனை அங்கீகரிப்பது இல்லை.ஞானபீட விருது தேர்வுக்குழுவில் 11 பேர் வெவ்வேறு மொழிகளை சேர்ந்தவர்கள். இதுவரை தமிழர் கூட ஞானபீட உறுப்பினராக இல்லை. தமிழ் மீது வடபுலத்தில் சிறிய எதிர்ப்பு இருக்கிறது.தமிழின் ஆழம், இலக்கியம், இலக்கணம் ஆகியவற்றை அவர்கள் முற்றிலும் அறிந்திருக்கவில்லை. மகாகவி ரவீந்திரநாத் தாகூர் படத்தை நாங்கள் வைத்து இருக்கிறோம்.வடக்கிற்கும், தெற்கிற்கும் பாலமாக இருக்கும் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம் என்று சொன்ன பாரதியை அறியாமல் இருக்கிறார்கள். தமிழ் படைப்பாளிகள் மூன்று ஞான பீட விருதுகளை பெற்றுள்ளனர்.தமிழ் படைப்புகளை வடபுலம் அறியவில்லை. தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, வங்காளத்தில், ஸ்பெயின் மான்டரின், ரஷ்யா, பிரெஞ்ச் மொழிகளில் மொழி பெயர்த்தால் தான் , தமிழ் உலகிற்கு சென்று செல்லும்.இந்தி 12 முறையும், கன்னடம் 8 முறையும், வங்காளம், மலையாளம் 6 முறையும், உருது மொழி 5 முறையும் ஞான பீட விருதை பெற்றுள்ளன.மேலும் பல்கலைக்கழங்கள், தொண்டு நிறுவனங்கள், பேராசிரியர்கள், மொழி பெயர்ப்பாளர்கள் படைப்பாளியைப் பார்க்காமல், அவர்களின் படைப்புகளை பாருங்கள். படைப்புகளை பார்த்து மொழி பெயர்ப்பு செய்யுங்கள். படைப்பாளியைக் கழித்துவிட்டு படைப்பைப் பாருங்கள். குறைகளை களைந்து படைப்புகளின் நன்மையை மட்டும் பாருங்கள்.தமிழ் மொழியை எங்கும் விட்டு கொடுக்க வேண்டாம். தமிழ் இந்தியை விட சிறந்த மொழி. இந்த பெருமை என்னுடையது அல்ல. அது புலவர்களின் நாவில் பட்டு, உமிழ் நீர் பட்டு, எழுத்தாணி பட்டு, உச்சரிப்பில், திளைப்பில் காலம்காலமாக கடத்தப்பட்டு வந்ததே தமிழ். அது என்னுடையை பெருமை அல்ல.இங்கே எழுத்தாளர்கள், கவிஞர்கள், விமர்சர்கள் உருவாக வேண்டும்.அவர்கள் மொழியை முன்னிறுத்தி செல்ல வேண்டும்.ஜென் ஸீ தலைமுறையின் புதிய குரல் கேட்கிறது. அவர்களை வெறுக்க மாட்டேன், மறுக்க மாட்டேன். அவர்களிடம் பத்திரிகையைக் கொடுத்து தடையில்லாமல் படி என்று சொல்லி பாருங்கள். தமிழ் படிக்க தெரியாத தலைமுறைக்கு ஜென் ஸீ பெயரா? தமிழ் எழுத வராத ஒரு தலைமுறைக்கு ஜென் ஸீ பெயரா?இந்த தலைமுறையை மீட்டெடுக்க வேண்டியதும், இனிவரும் தலைமுறை தமிழை தாண்டி போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும் இந்த பல்கலைக்கழகங்களின் பொறுப்பு என்று சொல்ல விரும்புகிறேன்.விருதுகளினால் மொழி , இனம் வளருகிறது என்பதை அளவுகோலாக பார்க்க வேண்டும்.உலகில் அதிகமாக 149 கோடி பேர் ஆங்கில மொழி பேசுகின்றனர். 118 கோடி பேர் சீன மொழி பேசுகின்றன்ர. 61 கோடி பேர் இந்தி பேசுகின்றனர். தமிழ் 24-ம் இடத்தில் உள்ளது.எந்த இனம் தாய்மொழியை சரியாகப் பேசுகிறதோ அதை வைத்து உலக மொழி தரவரிசை உருவாக்கப்படுகிறது. எனவே தமிழர்கள் குடும்ப எண்ணிக்கையைப் பெருக வேண்டும்.சீனா, ஐரோப்பிய நாடுகளில் குழந்தைகளை பெற்றெடுக்க மானியம் தரும் சூழல் உள்ளது. தமிழர்களுக்கு அப்படி ஒரு சூழல் வர கூடாது.இவ்வாறு அவர் பேசினார்.விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் பேசியதாவது:24 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்துக்கு ஒரு மரியாதை கிடைத்திருக்கிறது. அகிலன், ஜெயகாந்தனுக்குப் பின்னர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது கிடைத்துள்ளது. தமிழர்களுக்கு, தமிழ்நாட்டுக்கும் கிடைத்த பெருமையாகக் கருதுகிறேன்.வைரமுத்து குறுகிய காலத்தில் மக்களின் கவனத்தை ஈர்த்தவர். 1980-களில் திரைப்பட பாடல்கள் எழுத ஆரம்பித்து 40 ஆண்டுகளில் 7500-க்கும் மேற்பட்ட பாடல், கவிதைகளை எழுதி உள்ளார்.இவர் 7 முறை தேசிய விருதுகளை பெற்றுள்ளார். இவர் 40 நூல்களை எழுதியுள்ளார். 26 லட்சம் நூல்கள் விற்பனையாகி உள்ளன. இவரின் படைப்புகள் ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், ரஷ்ய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.பாரதிதாசன், கண்ணதாசனுக்குப் பிறகு மக்களை ஈர்த்தவர் வைரமுத்து. இந்தியா சாதி, மதம், கட்சிகளின் பெயரால் பிரிக்கப்பட்டிருக்கிற நாடு. இவை எல்லாவற்றையும் கடந்து அவரை போற்ற வேண்டும். ஞானபீட விருது பெற்ற வைரமுத்துவுக்கு நாடு முழுவதும் பாராட்டு விழாக்கள் எடுக்க வேண்டும்.தமிழ்நாட்டுக்கு இருக்கும் பெருமையே கல்வி தான். ஆனால், 17 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமிக்கப்படவில்லை. உயர்கல்வியில் மொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தில் நாட்டில் முதலிடத்தில் உள்ள தமிழகம் கல்வித்தரத்தில் கீழே போய்விடுமோ என்ற அச்சம் உள்ளது.எனவே, கல்வியைப் பொருத்தவரை கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, பிரச்சினைகளை விட்டு மத்திய, மாநில அரசுகள் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும். வெளிநாடுகளில் இருப்பதைப் போல தமிழ்நாட்டிலும் கல்வி விவகாரத்தில் ஒன்றாக அமர்ந்து பேசி தீர்வு காண வேண்டும்” என்றார்.முதன்மை விருந்தினராக உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள மாநில முன்னாள் ஆளுநருமான ப.சதாசிவம் பேசுகையில், “இந்தியாவில் 15 மொழிகளில் சிறந்த எழுத்தாளர்களுக்கு ஞானபீட விருது வழங்கப்பட்டுள்ளது. 1982 வரை ஓர் எழுத்தாளரின் படைப்பை பாராட்டி ஞானபீட விருது வழங்கப்பட்டது. ஓர் எழுத்தாளரின் வாழ்நாளில் இலக்கியப் பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் விருது வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 7 பெண் கவிஞர்கள் ஞானபீட விருதைப் பெற்றுள்ளனர். கவிஞர் வைரமுத்து தனது பாடல்களால் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை வென்றுள்ளார்” என்றார்.முன்னதாக தமிழியக்கத்தின் செயலாளர் மு.சுகுமார் வரவேற்றார். பொதுச் செயலாளர் அப்துல்காதர் வாழ்த்துப்பா வாசித்தார். பொருளாளர் வே.பதுமனார் மற்றும் கவிதைப்பித்தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வேலூர் மாவட்டம் காட்பாடி 4வது வட்டம் சார் பில் செங்குட்டை கராத்தே மாஸ்டர் அமுதா அச்சுதன் கலந்து கொண்டார். தமிழியக்கத்தின் மாவட்ட செயலாளர் பா.சம்பத்குமார் நன்றி கூறினார்.
காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 80வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்!வேலூர், ஆக.16-வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 80வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சுதந்திர தின விழாவை முன்னிட்டு வட்டாட்சியர் அலுவலக முகப்பு பகுதியில் உள்ள கொடிக்கம்பம் அருகே வண்ண வண்ண வண்ண காகிதங்களால் கோடிகள் கட்டப்பட்டு கொடிக்கம்பம் அலங்கரிக்கப்பட்டது அதை அடுத்து காட்பாடி வட்டாட்சியர் மகேஸ்வரி என்பதாவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து கொடி வணக்கம் செலுத்தினார் இதைத்தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது இந்த 80வது சுதந்திர தின விழாவில் துணை வட்டாட்சியர் சிவக்குமார், வருவாய் ஆய்வாளர் தமிழ்ச்செல்வன், கிராம நிர்வாக அலுவலர்கள் வஞ்சூர் அன்பரசன், வண்டறந்தாங்கல் இளங்கோவன், விநாயகம், ரேகா, சர்வேயர் பிரசன்னா மற்றும் வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள், பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டு சுதந்திர தின விழாவை சிறப்பித்தனர். இந்த 80வது சுதந்திர தின விழாவில் சுதந்திர தின வரலாறு பற்றியோ, தேசத் தலைவர்கள் பற்றியோ எவ்வித விளக்கமும் இல்லாமல் தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவு பெற்றது.
புதிய பாரதம் அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நல மாநில சங்கத்தின் சார்பில் கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!வேலூர், ஆக. 16-வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், திருப்பாக்குட்டை என்.எம்.திருமண மண்டபத்தில் புதிய பாரதம் அமைப்பு சாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நல மாநில சங்கத்தின் சார்பில் 80வது சுதந்திர தின விழா மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வெகு விமரிசையாக நடந்தது. இந்த விழாவுக்கு மாநில தலைவர் எம் .டி.வேல்முருகன் ,செயலாளர் வே. கயல்விழி, துணைத் தலைவர் என். முருகன், துணைச் செயலாளர் சி. சிவானந்தம், துணை செயலாளர் கே. ஜி. சீனிவாசன் ,மாநில மகளிர் அணி செயலாளர் இ.கிருஷ்ணவேணி, மாநில மகளிர் அணி செயலாளர் சி .சரளா தேவி தலைமை வகித்தனர். மாநில பொருளாளர் பி. சீதா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் எம்.டி .வேல்முருகன் கலந்துகொண்டு சிறப்பித்தார். மாவட்ட தலைவர் கே. ரோஸ், வேலூர் மாவட்ட தலைவர் ஜீவா, ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் கே .பார்த்திபன், வேலூர் மாவட்ட அமைப்பு தலைவர் வில்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய பொறுப்பாளர்கள் மைதிலி, கோகிலா, தேவி ,கிளை பொறுப்பாளர்கள் சுஜாதா, தரணி, ஹேமா லக்ஷ்மி ,அருள் ,சந்திரா, சண்முகம் ,விஜயலட்சுமி, துளசி, நந்தினி ,விஜயா ,மோகனா ,சங்கீதா ,தனலட்சுமி ,கீதா, கருணாகரன், சுமதி, ஆறுமுகம் வாழ்த்துரை வழங்கினர் .இதையடுத்து 80வது சுதந்திர தின விழா மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா விமரிசையாக நடந்தது .இந்த விழாவில் சுமார் 500க்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் ரூபாய் 1200 லிருந்து ரூபாய் 5000 ஆக உயர்த்தி வழங்க வேண்டுமென தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம் .60 வயதுக்கு பின்பும் நல வாரியத்தில் பதிவு பெற்ற வயது முதிர்வு திருமணம் செய்யும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி ,திருமண உதவித்தொகை வழங்க வழிவகை செய்து தருமாறு அரசை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறது. பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு 60 வயதுக்கு பின்பும் இறந்தாலும் இயற்கை மரணம் உதவித்தொகை ரூபாய் ஒரு லட்சத்தை வழங்கிட வேண்டுமென அரசை கேட்டுக் கொள்வது, கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு என தனி வங்கி தொடங்கி அதன் மூலம் தொழிலாளர்களுக்கு பணப்பயன்கள் எளிதில் சென்றடைய வழிவகை செய்து தர வேண்டும் என சங்கத்தின் சார்பில் அரசை கேட்டுக் கொள்வது, கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் அனைத்து துறைகளிலும் தனி இட ஒதுக்கீடு செய்து தருமாறு சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்வது, கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலன் காத்திட மத்திய அரசிலும், மாநில அரசிலும் நிதி ஆதாரத்துடன் தனி இலாகா தனி அமைச்சகம் அமைத்து தர எங்கள் சங்கத்தின் சார்பில் அரசை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம் .கட்டுமானத்திற்கு தேவையான பொருட்களான மணல் ,ஜல்லி, கம்பி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளது. எனவே மத்திய ,மாநில அரசுகள் தலையிட்டு விலை உயர்வை கட்டுப்படுத்த வழிவகை செய்து தர இச்சங்கத்தின் சார்பில் அரசை கேட்டுக்கொள்கிறோம் .அனைத்து தொழிலாளர்களின் பெண் பிள்ளைகளுக்கும் கல்வி பயிலும்போது கல்வி உதவித்தொகை வழங்குவது போன்று ஆண் பிள்ளைகளுக்கும் வழங்க வழிவகை செய்து தர வேண்டும் என்று அரசை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது .இறுதியாக மாநில அமைப்பு செயலாளர் கே. ஜி. சீனிவாசன் நன்றி கூறினார். இதையடுத்து இந்த இருபெரும் விழாவில் கலந்து கொண்ட கட்டுமானத் தொழிலாளர்கள் அனைவருக்கும் மதிய உணவு அளித்தும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
செம்பராயநல்லூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்!வேலூர், ஆக. 16-வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், செம்பராயநல்லூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலக மேல் தளத்தில் சுதந்திர தின சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற தலைவி ஜீவிதா ரமேஷ் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் செம்பராயநல்லூர் கிராம பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த கிராம சபை கூட்டத்தில் செம்பராயநல்லூர் கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து விரிவாக ஆலோசித்து முடிவெடுக்கப்பட்டது. கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் தேநீர் விருந்து அளித்து உபசரிக்கப்பட்டது.
அழிவிடைதாங்கி அரசு மேல்நிலைப் பள்ளியில் 80வது ஆண்டு சுதந்திர தின விழா: விளையாட்டு வீரர்களுக்கு பரிசு வழங்கி கௌரவித்தஜே.சி.கே.சீனுவாசன்!செய்யாறு, ஆக. 16 -திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த அழிவிடைதாங்கி அரசு மேல்நிலைப் பள்ளியில் 80வது ஆண்டு சுதந்திர தின விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.வெம்பாக்கம் தி.மு.க., மத்திய ஒன்றிய செயலாளர் ஜே.சி.கே. சீனுவாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.செய்யாறு அடுத்துள்ளது அழிவிடைதாங்கி கிராமம். இங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று 80வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தலைமை ஆசிரியர் குமரவேல் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். வெம்பாக்கம் தி.மு.க., மத்திய ஒன்றிய ஒன்றிய செயலாளர் ஜே.சி.கே.சீனிவாசன், பள்ளிகளுக்கு இடையே வட்ட அளவில் நடந்த பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பை, பரிசு, விளையாட்டு சீருடைகளை வழங்கி கௌரவித்தார். இதைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட முன்னாள் ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனுவாசன், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஆறுமுகம், உடற்கல்வி ஆசிரியர்கள் சேகர், மணிகண்டன், கிளைக் கழக செயலாளர் நரசிம்மன், பன்னீர் மற்றும் மாணவர்களின் பெற்றோர் கலந்து கொண்டு சுதந்திர விழாவினை சிறப்பித்தனர்.
1
2
…
128
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.