Archives
August 2026
July 2026
June 2026
May 2026
April 2026
March 2026
February 2026
January 2026
December 2025
November 2025
October 2025
September 2025
Categories
Uncategorized
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
செய்திகள்
நிகழ்ச்சிகள்
விளையாட்டு
Meta
Log in
Entries feed
Comments feed
WordPress.org
செய்திகள்
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
நிகழ்ச்சிகள்
வர்த்தகம்
விளையாட்டு
உலக செய்திகள்
Month:
July 2026
சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இரு கதவுகள் பூட்டப்பட்டது ஏன் மாவட்ட ஆட்சியர் விசாரணை செய்ய வேண்டும் இது தொடர்பாக கோயமுத்தூர் கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு செயலாளர் நா லோகு கூறும்பொழுது கோவை மாவட்டம் சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இரண்டு பெரிய இரும்பு கேட் கள் உள்ளன ஒன்றில் நான்கு சக்கர வாகனங்கள் உள்ளே வருவதற்கும் இரண்டாவது இரும்பு கேட் வாகனங்கள் வெளியே செல்வதற்காக ஆனால் இன்று காலை நான்கு சக்கர வாகனத்தில் வந்த பொதுமக்கள் இரண்டு இரும்பு கேட்டுகள் பூட்டப்பட்டது கண்டு உள்ளே செல்ல முடியாது நிலை ஏற்பட்டது இதனால் அதிர்ச்சி அடைந்து பொதுமக்கள் தங்கள் கார்களை சூலூர் செல்லும் சாலையில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது இது குறித்து விசாரித்து பொழுது இரண்டு இரும்பு கதவுகள் பழுதாகி உள்ளது என்று ஒரு பொய்யான தகவலை தெரிவித்தார்கள் இது குறித்து இரண்டு இரும்பு கதவுகளை ஆய்வு செய்தபோது இரண்டும் நல்ல நிலையில் உள்ளது அறிய முடிந்தது எதற்காக இரண்டு பெரிய கதவுகள் மூடப்பட்டு இருசக்கர வாகனம் நடந்து செல்வதற்கு மட்டும் ஒரு சிறிய கேட் திறக்கப்பட்டது என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு செயலாளர் நா. லோகு தெரிவித்தார்
செய்யாறில் வி.தி.லீடர்ஸ் கட்சியைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் ஏற்பாட்டில்போதை ஒழிப்பு விழிப்புணர்வுஉறுதிமொழி ஏற்பு!செய்யாறு, ஆக.1-செய்யாறில் வி. தி. லீடர்ஸ் கட்சி சார்பில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்புடன் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.செய்யாறு அடுத்த திருவத்திபுரம் எல்லையான செய்யாற்றங் கரையில் தொடங்கிய இந்த போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி, பெரியார் சிலை அருகே நிறைவடைந்தது. இந்த பேரணிக்கு வி. தி. லீடர்ஸ் கட்சியின் பொறுப்பாளரான வெங்கட்ராயன் பேட்டையைச் சேர்ந்த ஆ.சரவணன், தமிழ்ச்செல்வன் ஆகியோர் தலைமை வகித்தனர். சக்தி நாராயணன், யுவராஜ், சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். செய்யாறு அடுத்த வளர்புரம் கிராமத்தில் இயங்கி வரும் இந்தோ அமெரிக்கன் கல்லூரியைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் பங்கேற்று பொதுமக்களுக்கு போதை தடுப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.போதையினால் ஏற்படும் அழிவுகள் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் கையில் ஏந்தியபடி சென்று பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அரசு, தனியார் பஸ்களில் வந்த பயணிகளுக்கு போதை பொருள் குறித்த வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினர். போதை தடுப்பு குறித்த இந்த விழிப்புணர்வு பேரணி செய்யாறு பகுதியைச் சேர்ந்த வியாபாரிகளுக்கும், பொது மக்களுக்கும் பயனுள்ளதாக இருந்தது. இறுதியாக செய்யாறு பெரியார் சிலை அருகே கல்லூரி மாணவர்கள் வி. தி. லீடர்ஸ் கட்சியைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போதை தடுப்பு தடுப்பு உறுதி மொழியை ஏற்றனர்.இந்நிகழ்ச்சியில் வி. தி. லீடர்ஸ் கட்சியைச் சேர்ந்த பொறுப்பாளர்களான வெங்கடேசன், ரமேஷ், அன்பழகன், கோவிந்தராஜ், கார்த்தி, ஆஷாக், பரத், சுரேஷ், ஜெயராஜ், பூபதி மற்றும் தொண்டர்கள் என, ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், உணவுப் பாதுகாப்புத் துறையின் சார்பில் சுகாதாரமான மற்றும் தரமான உணவுப்பொருட்கள் பொதுமக்களுக்கு தொடர்ந்து வழங்கப்படுவதை உறுதிப்படுத்துவது தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி, தலைமையில் இன்று (31/07/2026) நடைபெற்றது.
கோவை மாவட்டம் சூலூர் வட்டாட்சியர் அலுவலகம் கடந்த நான்கு நாட்களாக, 28,29,30,31, நான்கு நாட்களாக சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வெளிப்புறம் உள்ள கதவுகள் மூடப்பட்டிருக்கிறது. ஒரு அரசு அலுவலகங்கள் வாயில் கதவு, அரசு விடுமுறை நாட்களைத் தவிர எப்பொழுதும் மூடக்கூடாது. ஆனால் சூலூரில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் எதற்காக மூடப்பட்டது என்பதை மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ளது. அலுவலக பகுதியில் உள்ளவர்களுடைய சில கருத்துக்கள் லஞ்ச ஒழிப்புத்துறை வர இருப்பதின் அடிப்படையில் இந்த கதவுகளை அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கூறுகிறார்கள். ஆனால் எது எப்படியோ ஒரு அரசு அலுவலகம் வேலை நாட்களில், கதவுகளை நான்கு நாட்களாக மூடி வைத்திருப்பதற்கு மாவட்ட ஆட்சியர் விசாரணை செய்ய வேண்டும். இன்று பொது மக்களுடைய மிகப்பெரிய கருத்துக்களாக வெளி வருகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா?
கோவை மாநகர் மின் பகிர்மான வட்டத்தில் விதிகளை மீறியும் வருவாய் இழப்பு ஏற்படும் வகையில் மின் இணைப்பு வழங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவதாக நுகர்வோர் அமைப்புகள் புகார் தெரிவித்தனர் கோவை டாடாபாதத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் தலைமை பொறியாளர் சுமதி தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் மாநகர் வடக்கு தெற்கு வட்ட மேற்பார்வை பொறியாளர்களும் செயல் பொறியாளர்களும் கலந்து கொண்டன இதில் கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு செயலாளர் நா லோகு கதிர் மதியோன் உள்ளிட்ட பல்வேறு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் இந்த கூட்டத்தில் கோவை மாநகர மாவட்டத்தில் கட்டிட நிறைவு சான்று பெறாமல் விதிகளை மீறி மின் இணைப்பு வழங்குவது அதிகரித்து வருகிறது என்றும் இது குறித்து புகார் தெரிவித்தால் விசாரணை அலுவலர் நியமனம் செய்யப்பட்டு அறிக்கை பெற்று நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர் மேலும் புதிய மின் இணைப்பு வேண்டி இணையதளத்தில் விண்ணப்பிக்கும் பொழுது மாதக்கணக்கில் மின் இணைப்பு வழங்காமல் இழுத்து காலதாமதம் செய்கின்றனர் சோலார் மின் இணைப்புகள் கட்டண குளறுபடிகள் ஏற்பட்டு அதிகமாக வசூலிக்கப்படுவதாகவும் ஏராளமான பகுதிகளில் முறையாக கணக்கெடுப்பு செய்யாமல் குறிப்பிட்ட நாட்களுக்குள் மின் கணக்கீடு செய்யப்படுவதில்லை இதனால் அதிகப்படியான கட்டணம் விதிக்கப்படுகிறது கோவை மாநகர வட்டத்தில் அனைத்து மின் மின் கம்பங்களிலும் அதிகப்படியான விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன அதுபோல மின் பெட்டியிலும் திறந்த நிலையில் பழுதான நிலையில் உள்ளது மாநகர் வட்டத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் மனுக்கள் அளிக்கும் போது தகவல் அளிக்காமல் ஒண்டிபுதூர் மையம் நகரியம் மாநகர் வட்ட பொது தகவல் அலுவலர்கள் வேண்டுமென்றே தவறான தகவல்களை அளித்து வருகிறார்கள் மையக்கோட்டம் லாலி ரோடு உள்ளிட்ட பல்வேறு பிரிவு அலுவலகத்தில் விதிகளை மீறி மின் இணைப்பு வழங்குவது அதிகரித்து வருகிறது இது போலவே நகரிய கோட்டத்திலும் நடைபெறுகிறது மேலும் பதவி உயர்வு பெற்ற அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அலுவலகத்தில் பணி ஏற்பு செய்யாமல் தற்காலிக பணி மாறுதல் என்ற பெயரில் மாநகர் வட்டத்தில் விதிகளை மீறி அதே அலுவலகத்தில் பணிபுரிய மேற்பார்வை பொறியாளர் மற்றும் செயல் பொறியாளர்களால் அனுமதிக்கப்படுகின்றனர் இதற்கு மேற்பார்வை பொறியாளர் செயற் பொறியாளர் உடந்தையாக உள்ளனர் மேலும் மின்வாரிய தலைவர் மற்றும் இயக்குனர் ஆகியோரின் சுற்றறிக்கைகளை கோவை மின் பகிர்மானத்தில் நடைமுறைப்படுத்துவதில்லை இதனால் பொதுமக்கள் கோவை மின்வாரியம் தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் உள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர் மேலும் கோவையில் தலைமை பொறியாளர் அலுவலகம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் பல வருடங்களாக உள்ள உதவி செயற்பொறியாளர்கள் உதவி மின் பொறியாளர்களை இயக்குதல் பேணுதல் பிரிவுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் ஒப்பந்ததாரர்கள் மூலம் செய்யப்படும் பணிகளுக்கு விதிகளை மீறி தொகை அளிக்கப்படுவது குறித்து லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர் இது குறித்து சம்பந்தப்பட்ட மேற்பார்வை பொறியாளர்கள் பதில் அளிக்குமாறு தலைமை பொறியாளர் கேட்டுக் கொண்டும் எந்த அலுவலரும் முறையாக பதில் சொல்லாமல் மௌனம் காத்தனர் இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது
கோவை மாவட்ட காவல்துறையின் சார்பாக கோவை பொதுமக்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட QR Scanner “நிழல்” செயலியை இன்று ஆலந்துறை காவல் நிலைய ஆய்வாளர் திரு. முத்துக்குமார் அவர்கள் நாதேகவுண்டன்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், பயிலும் மாணவ மாணவிகளுக்கு நிழல் செயலியை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்… இந்நிகழ்ச்சியில் அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்….
தனக்கு நியாயம் கோரி கடந்த 8 ஆண்டுகளாக காவல்துறையிடம் தொடர்ந்து மனு கொடுத்து வரும் ஆட்டோ ஓட்டுநர்: இவருக்கு இந்த ஆண்டிலாவது நியாயம் கிடைக்குமா?வேலூர், ஜூலை 29-ஆட்டோ ஓட்டுநர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் ரூ. 2 லட்சம் தராமல் கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ந்து சக ஆட்டோ ஓட்டுநரை இழுத்தடித்து வருகிறார். இதனால் பணத்தை இழந்த மற்றொரு ஆட்டோ ஓட்டுநர் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார். இவருக்கு இந்த ஆண்டிலாவது காவல்துறையிடம் இருந்து நியாயம் கிடைக்குமா? என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளார்.வேலூர் மாவட்டம், வேலூர் பிஷப் டேவிட் நகரைச் சேர்ந்தவர் மைக்கேல். இவரது மகன் தேவ சகாயம் (51). ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவர் தன்னுடன் பணிபுரியும் சக ஆட்டோ ஓட்டுநரான கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள தனது ஆட்டோவை கிருஷ்ணமூர்த்தியின் சொந்த தேவைக்காக கொடுத்துள்ளார். அந்த ஆட்டோ மற்றும் அவரது வீட்டு பத்திரத்தை வைத்து ரூபாய் 2 லட்சத்தை புரட்டி எடுத்துக்கொண்ட கிருஷ்ணமூர்த்தி தற்போது ஹாயாக வலம் வந்து கொண்டுள்ளார். பாதிக்கப்பட்ட தேவசகாயம் தனது பணம் ரூ. 2 லட்சத்தை திருப்பி தருமாறு கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டு வருகிறார். ஆனால் அவரோ விசிக பிரமுகர்கள் சிலர் உதவியுடன் தப்பித்து கொண்டு வலம் வந்து கொண்டுள்ளார். போதாத குறைக்கு காவல் துறையைச் சார்ந்த சிலர் கிருஷ்ணமூர்த்தியிடம் இணக்கமான முறையில் நடந்து கொண்டு மறைமுகமாக உதவி புரிகின்றனர். தனியார் நிதி நிறுவனம் தன்னிடம் வாங்கிய தொகையை கிருஷ்ணமூர்த்தி செலுத்தாததாலும், தேவசகாயம் ஜாமீன் கையெழுத்து போட்டதாலும், தேவசகாயத்துக்கு சொந்தமான ஆட்டோ மற்றும் வீட்டு பத்திரத்தை ஜப்தி செய்து கொண்டு சென்று விட்டனர். இதனால் கடந்த 8 ஆண்டுகளாக வாடகைக்கு ஆட்டோ ஓட்டி பிழைத்து கொண்டுள்ளார் தேவசகாயம். பணத்தை திரும்ப தருமாறு கேட்டு வந்த தேவசகாயத்தை கடந்த 2019ல் ஆட்களை அனுப்பி தாக்குதல் நடத்தியுள்ளார் கிருஷ்ணமூர்த்தி. கிருஷ்ணமூர்த்தி இதனால் வரை தேவசகாயத்தை தாக்கியது தொடர்பாக 7 மருத்துவ அறிக்கைகள் நிலுவையில் உள்ளன. இதுதொடர்பாக தேவ சகாயம் கொடுக்கும் புகார்களை வேலூர் தெற்கு காவல் நிலையத்திலும் ,வேலூர் பாகாயம் காவல் நிலையத்திலும் அப்படியே கிடப்பில் போட்டுவிடுகின்றனர். ஒரு விசாரணை கூட நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது காவல் ஆய்வாளர்களாக இருந்த சுபா மற்றும் தற்போது அணைக்கட்டு டிஎஸ்பியாக உள்ள நந்தகுமாரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவிட்டனர். சுபா மற்றும் டிஎஸ்பி நந்தகுமார் ஆகியவர்களிடம் இது குறித்து விசாரித்தால் இந்த வழக்குக்கு தேவையான ஆதாரங்கள் கிடைக்கும்.இதனால் கிருஷ்ணமூர்த்தி காவல்துறையின் செல்லப் பிள்ளையாக வலம் வந்து கொண்டுள்ளார். விபச்சார அழகிகளை வைத்து தங்கும் விடுதிகளில் மற்றும் சில தனியார் இல்லங்களிலும் விபச்சாரத் தொழிலை செய்து வருகிறார் கிருஷ்ணமூர்த்தி. விபச்சார அழகிகளை ஏற்றிச் செல்ல இந்த ஆட்டோ பயன்படுத்தப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் கதை கதையாக கூறப்படுகிறது. இவரை நேரில் பார்த்தால் அனைவரும் இவரை பற்றிய தகவல்களை தெளிவாக விவரிப்பார்கள்.அதேபோன்று கிருஷ்ணமூர்த்தியின் கைங்கரியத்தால் தேவசகாயத்தின் சித்தி சின்னம்மாள் (75) என்பவரை பேபி ஓட்டல் அருகில் குறி வைத்து தாக்கியுள்ளது ஒரு மாஃபியா கும்பல். இதுதொடர்பாக புகார் கொடுத்தும் தெற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யாமல் இந்த கொடூர தாக்குதலையும் கண்டு கொள்ளவில்லை. இந்த சம்பவம் கடந்த 2020ல் அரங்கேற்றினார் ஆட்டோ ஓட்டுநர் கிருஷ்ணமூர்த்தி என்று சொன்னால் அது மிகையாகாது. இவ்வாறு தொடர்ந்து அட்டூழியங்களை செய்த வண்ணம் உள்ளார் 8 ஆண்டுகளாக கிருஷ்ணமூர்த்தி என்று சொன்னால் அதுதான் நிதர்சன உண்மை. ஆனால் காவல்துறையோ அவர் மீது இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. கிருஷ்ணமூர்த்தி தேவசகாயத்திற்கு தர வேண்டிய பணத்தை காவல்துறையும் இதுநாள் வரை பெற்று தரவில்லை. தொடர்ந்து புகார் மேல் புகார் கொடுத்து வருகிறார் தேவசகாயம். கடந்த எட்டு ஆண்டுகளாக அவரது புகாரின் மேல் காவல்துறை எந்த கரிசனமும் காட்டவில்லை. அப்போது நடந்த பிரச்சனை என்பதால் தற்போது நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று தற்போது கூறியுள்ளனர் தெற்கு காவல் நிலைய போலீசார். இதனால் போலீசாரை நம்பி தொடர்ந்து கடந்த எட்டு ஆண்டுகளாக புகார் மனுக்களை கொடுத்து கொடுத்து வேதாளம் முருங்கை மரத்தின் மீது ஏறியது போல மீண்டும் மீண்டும் மனம் தளராமல் புகாரை கொடுத்து வருகிறார் தேவசகாயம். ஆனால் பழைய வழக்கு 2022-ல் பாகாயம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக இருந்த சுபா, கிருஷ்ணமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த தேவசகாயத்தை கைது செய்து சிறைக்கு அனுப்பினார். இப்படி நாட்டில் நியாயம் தர்மம் என்று ஒன்று இருந்தால் தேவசகாயத்துக்கு நீதி கிடைக்கும். காவல்துறையின் மீது அவர் வைத்துள்ள அதீத நம்பிக்கையால் தொடர்ந்து புகார் மனுவை அளித்து வருகிறார் தேவ சகாயம். எனக்கு நீதி கிடைக்க வேண்டும் நியாயம் கிடைக்க வேண்டும் எனது பணத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும் என்று கடந்த ஜூலை 4ம் தேதி புகார் மனு கொடுத்துள்ளார் தேவசகாயம் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில். அந்த புகார் மனு வேலூர் தெற்கு காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை விசாரிக்கும் உதவி ஆய்வாளர் இது பழைய வழக்கு இதை தற்போது நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. ஏதாவது ஆதாரம் உள்ளதா என்று கேட்டு வருவதாக தெரிகிறது .ஆதலால் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக இந்த விசாரணையில் ஈடுபட்டு உண்மை என்ன பொய் என்ன என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு பாதிக்கப்பட்டுள்ள தேவசகாயத்திற்கு நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று அவர் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளார். காவல்துறையின் மீது தேவசகாயம் வைத்துள்ள நம்பிக்கை நிறைவேறுமா? அல்லது நிறைவேறாமல் போகுமா? என்பது வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நடவடிக்கையில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற உண்மையான விசாரணை நடந்தால் மட்டுமே பாதிக்கப்பட்டவருக்கு நியாயம் கிடைக்கும் .அதுவரை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
காட்பாடியில் ‘ஸ்லாம்’ லைஃப் ஸ்டைல் அண்ட் ஃபிட்னஸ் ஸ்டுடியோ ஜிம் திறப்பு விழா: வேலூர் திரைப்பட நடிகை டாக்டர் ரேச்சல் ரெபேக்கா திறந்து வைப்பு!வேலூர், ஜூலை 28-வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, பழைய காட்பாடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ‘ஸ்லாம்’ லைஃப் ஸ்டைல் அண்ட் ஃபிட்னஸ் ஸ்டுடியோ SLAM Lifestyle and Fitness Studio ஜிம் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் திரைப்பட நடிகை டாக்டர். ரேச்சல் ரெபேக்கா கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி ஜிம்மை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார். பின்னர், அவருக்கு நினைவுப் பரிசு வழங்கி விழா ஏற்பாட்டாளர்கள் கௌரவித்தனர். இவ்விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் காட்பாடி சட்டமன்றத் தொகுதி மாவட்ட செயலாளர் வேலூர் ஃபிலிப், தொழிலதிபர்கள், உடற்பயிற்சி பயிற்சியாளர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். விழாவின் நிறைவாக, கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி, நிர்வாகத்தின் சார்பில் நன்றியுரை நிகழ்த்தி திறப்பு விழா நிறைவு பெற்றது.
சர்வதேச தொழிலாளர் அமைப்பு ILO சார்பில் பெண் தொழிற்சங்க தலைமைத்துவ பயிற்சி கொச்சியில் தொடக்கம்
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
1
2
…
11
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.