கே.வி.குப்பம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்உலக மக்கள் தொகை தின விழா!வேலூர், ஜூலை 27-வேலூர் மாவட்டம்,கே.வி.குப்பம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், வேலூர் மாவட்ட குடும்ப நலச் செயலகத்தின் சார்பில்,’உலக மக்கள் தொகைதினம்’ (ஜூலை.11- ஆம் தேதி ) ஜூலை.24-அன்று கொண்டாடப்பட்டது.இந்நிகழ்ச்சிக்குகல்லூரி முதல்வர். பி.பிரபுகாந்தன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைந்தவேலூர் மாவட்ட குடும்ப நலச் செயலக துணை இயக்குநர்.மரு.கோ.மணிமேகலை,வேலூர் மாவட்ட விரிவாக்க கல்வியியலாளர்.சாதனா,வேலூர் மாவட்ட குடும்ப நலச் செயலக வட்டார சுகாதார புள்ளியியலாளர் ஜே.ரகுநாத், வடுகந்தாங்கல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார சுகாதார புள்ளியியலாளர்எஸ். நவச்சக்கரவர்த்தி,கே.வி.குப்பம் வட்டாரசுகாதார மேற்பார்வையாளர்,கே.வி.குப்பம் சுகாதார ஆய்வாளர், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும்அரசு அலுவலர்கள்,சமூக நல மையம் (சிஎச்சி), வடுகந்தாங்கல் ஆகியோர்கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில்,” குழந்தைகளுக்கு இடையே சரியான இடைவெளி இருக்கும்போதுதான் குடும்பங்கள் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் மாறும்”- என்கிற கருத்தை வலியுறுத்தி முழக்கமிட்டனர்!அதன் கருப்பொருள்,”தாய் மற்றும் குழந்தையின் நலனுக்காகவும்,திட்டமிடப்படாத கர்ப்பங்களைதடுப்பதற்காகவும்,கர்ப்பங்களுக்கிடையே ஆரோக்கியமான கால இடைவெளியினை பேணுவோம்”- என்பதாகும்.மேலும்,”ஒவ்வொரு வட்டாரத்திலும், உயர் வரிசை பிறப்பினை குறைத்தல்,பெண் திருமண வயதை உயர்த்துதல், பெண் கல்வியை ஊக்குவித்தல்,இரு குழந்தைகளுக்குஇடையிலான பிறப்பு இடைவெளி குறைந்தது மூன்று ஆண்டுகள் என்பதை உறுதி செய்தல் மற்றும்பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகளைத் தடுத்தல் சம்பந்தமாக தகுந்த பணியாளர்களைக் கொண்டுவிழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்”- என்று அறிவுறுத்தப்பட்டது.மேலும், நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு கட்டுரைப் போட்டி நடத்தி அதில்வெற்றி பெற்றவர்களுக்குபரிசுகள் வழங்கப்பட்டது.வேலூர், கே.வி.குப்பம்,வடுகந்தாங்கல் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில்மரக்கன்றுகள் நடப்பட்டது.

தவெக சார்பில் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேனர்கள் அப்புறப்படுத்தப்படுமா?வேலூர், ஜூலை 27-வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் ஜனநாயகன் திரைப்படத்திற்காக வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர்கள் பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக உள்ளது. இந்த பேனர்கள் வைத்ததால் பொதுமக்கள் சாலையை கடந்து செல்ல முடியாமல் தவிக்கின்றனர். குறிப்பாக சாலை வழியாக தரை மார்க்கத்தில் எதிர் திசையில் வரும் வாகனங்கள் சரிவர கண்களுக்கு தெரியவில்லை. இதனால் விபத்துகள் ஏற்படும் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்ந்து நிலவி வருகிறது.காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் சுதாகர் இதுபோன்ற விரும்பத்தகாத செயல்களை செய்து கொண்டிருக்கிறார் என்று பொதுமக்கள் புலம்ப ஆரம்பித்து விட்டது குறிப்பிடத்தக்கது. ஒரு புதிய திரைப்படம் வெளியானால் அந்த திரையரங்கு எங்குள்ளதோ அந்த பகுதியில் பேனர்கள் வைத்து ரசிகர்கள் அழகு பார்ப்பது கடந்த காலங்களில் நடைமுறையில் இருந்தது. ஆனால் தவெக கண்ட இடத்தில் குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் இடத்தில் இப்படி பேனர்கள் வைத்து அவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியிருப்பது வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சித்தூர் பேருந்து நிலையம் மிகவும் குறுகலான பகுதி. குறிப்பாக அந்தப் பகுதி பெரும் பரபரப்பாக காணப்படுவது வழக்கம். அந்தப் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக வைத்திருக்கும் இதுபோன்ற பேனர்களை உடனடியாக வேலூர் மாநகராட்சி 1வது மண்டல நிர்வாகம் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் திடீர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அதாவது வேலூர் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பேனர்கள் வைக்க வேண்டும் என்றால் முறையாக மாநகராட்சி நிர்வாகத்திடம் ரூபாய் 300 செலுத்தி அதற்குண்டான சான்றிதழ்களையும் பேனரில் அச்சடித்து பின்னர் பேனர்களை நிறுவ வேண்டும் என்பது விதி. ஆனால் இந்த விதிகளை காற்றிலே பிறக்க விட்டு விட்டு தங்கள் விருப்பம் போல் கண்ட கண்ட இடங்களில் பேனர்களை வைத்து நகரை அசுத்தப்படுத்தி வருகின்றது தவெக. தவெக மட்டுமல்ல பல அரசியல் கட்சிகளும் இதே நிலையை பின்பற்றி வருவது நகருக்கு ஆரோக்கியமானது அல்ல. குறிப்பாக பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இந்த பேனர்கள் அமைந்து விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது. பேனர்கள் சரிந்து சாலையில் நடந்து செல்வோர் ,வாகனங்களில் செல்வோர் மீது விழுந்து விபத்துக்களை ஏற்படுத்தி வருவதை நாம் கடந்த காலங்களில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் தற்போது வந்துள்ள தவெகவும் அதே நிலையை பின்பற்றி தொடர்ந்து பேனர்கள் வைத்து வருவது பொதுமக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சித்தூர் பேருந்து நிலையத்தில் எந்த கட்சியோ அல்லது பல நிறுவனங்கள் மற்றும் இயக்கங்கள் நடத்தும் எந்தவித கூட்டமும், எந்த விழாக்களோ நடத்துவதற்கு இந்த இடத்தை இனிவரும் காலங்களில் காவல்துறை வழங்கக்கூடாது என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். காவல்துறை வேறு ஏதாவது ஒரு ஒதுக்குப்புறமான இடத்தை தேர்வு செய்து கூட்டங்கள் மற்றும் விழாக்களை நடத்திக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்பது பொதுமக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக மாறி உள்ளது. சித்தூர் பேருந்து நிலையம் ஒரு குறுகலான பகுதியில் அமைந்துள்ளதால் இங்கு விழாக்கள் மற்றும் கூட்டங்கள் நடத்துவதால் பொதுமக்கள சொல்லொனா துயரத்திற்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சட்டமன்ற உறுப்பினர் என்பவர் முன் உதாரணமாக திகழ வேண்டும். அதை விடுத்து இவ்வாறு சாதாரண மனிதர்களைப் போல நடந்து கொள்வது பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. நகரை தூய்மையாகவும், சுத்தமாகவும் எவ்வித விபத்துகளும் ஏற்படாமல் வைத்து பாதுகாக்க வேண்டியது ஒரு சட்டமன்ற உறுப்பினரின் தலையாயக் கடமையாகும். அவரே இது போன்று பேனர்களை வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இனிவரும் காலங்களில் இது போன்ற நடவடிக்கைகளில் எந்தவித அரசியல் கட்சிளும் ஈடுபட வேண்டாம் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பொதுமக்களின் நன்மையை கருதி அரசியல் கட்சிகள் இதனை பின்பற்றி நடந்து கொள்வார்களா? அல்லது வழக்கம்போல் பேனர்களை வைத்து நகரை நாறடிப்பார்களா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கே.வி.குப்பம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்உலக மக்கள் தொகை தின விழா!வேலூர், ஜூலை 27-வேலூர் மாவட்டம்,கே.வி.குப்பம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், வேலூர் மாவட்ட குடும்ப நலச் செயலகத்தின் சார்பில்,’உலக மக்கள் தொகைதினம்’ (ஜூலை.11- ஆம் தேதி ) ஜூலை.24-அன்று கொண்டாடப்பட்டது.இந்நிகழ்ச்சிக்குகல்லூரி முதல்வர். பி.பிரபுகாந்தன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைந்தவேலூர் மாவட்ட குடும்ப நலச் செயலக துணை இயக்குநர்.மரு.கோ.மணிமேகலை,வேலூர் மாவட்ட விரிவாக்க கல்வியியலாளர்.சாதனா,வேலூர் மாவட்ட குடும்ப நலச் செயலக வட்டார சுகாதார புள்ளியியலாளர் ஜே.ரகுநாத், வடுகந்தாங்கல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார சுகாதார புள்ளியியலாளர்எஸ். நவச்சக்கரவர்த்தி,கே.வி.குப்பம் வட்டாரசுகாதார மேற்பார்வையாளர்,கே.வி.குப்பம் சுகாதார ஆய்வாளர், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும்அரசு அலுவலர்கள்,சமூக நல மையம் (சிஎச்சி), வடுகந்தாங்கல் ஆகியோர்கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில்,” குழந்தைகளுக்கு இடையே சரியான இடைவெளி இருக்கும்போதுதான் குடும்பங்கள் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் மாறும்”- என்கிற கருத்தை வலியுறுத்தி முழக்கமிட்டனர்!அதன் கருப்பொருள்,”தாய் மற்றும் குழந்தையின் நலனுக்காகவும்,திட்டமிடப்படாத கர்ப்பங்களைதடுப்பதற்காகவும்,கர்ப்பங்களுக்கிடையே ஆரோக்கியமான கால இடைவெளியினை பேணுவோம்”- என்பதாகும்.மேலும்,”ஒவ்வொரு வட்டாரத்திலும், உயர் வரிசை பிறப்பினை குறைத்தல்,பெண் திருமண வயதை உயர்த்துதல், பெண் கல்வியை ஊக்குவித்தல்,இரு குழந்தைகளுக்குஇடையிலான பிறப்பு இடைவெளி குறைந்தது மூன்று ஆண்டுகள் என்பதை உறுதி செய்தல் மற்றும்பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகளைத் தடுத்தல் சம்பந்தமாக தகுந்த பணியாளர்களைக் கொண்டுவிழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்”- என்று அறிவுறுத்தப்பட்டது.மேலும், நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு கட்டுரைப் போட்டி நடத்தி அதில்வெற்றி பெற்றவர்களுக்குபரிசுகள் வழங்கப்பட்டது.வேலூர், கே.வி.குப்பம்,வடுகந்தாங்கல் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில்மரக்கன்றுகள் நடப்பட்டது.

தவிர மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது பாலியல் வழக்கு!ராணிப்பேட்டை, ஜூலை 26-தமிழக வெற்றி கழகத்தின் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட கழக செயலாளர் விஜய் மோகன், மற்றும் நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் ஜான் பிரிட்டோ என்பவர்கள் மீது நான்கு பிரிவுகளின் கீழ் பெண் பாலியல் புகார் தொடர்பாக ஆற்காடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.ராணிப்பேட்டை மாவட்டம் ,ஆற்காடு, கண்ணமங்கலம் கூட்டுரோடு, மாசாபேட்டை, அண்ணா நகர், பகுதியைச் சேர்ந்தவர் பவ்யலட்சுமி. இவர் கடந்த பத்து மாதங்களுக்கு முன்பாக தவெக மாவட்ட செயலாளர் விஜய் மோகன் தனக்கு கட்சியில் பதவி வழங்குவதாக தன்னை ஆசைக்கு இறையாக்கி ஆபாச வீடியோக்கள் எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டுவதாகவும், மேலும் தன்னை ஆசைக்கிணங்க வற்புறுத்தி மீண்டும் மீண்டும் தொல்லைக் கொடுத்து, கொலை மிரட்டல் விடுத்து வருவதாக பெண் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.சென்னை தலைமை டிஜிபி காவல் நிலையம் மற்றும் தமிழக முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகம், போன்ற அலுவலகங்களில் பாலியல் தொடர்பான புகார் அளித்துள்ள நிலையில் அப்பெண் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் ஆற்காடு நகர காவல் நிலையத்திலும் அந்த பெண் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் ஆற்காடு நகர காவல் நிலையத்தில் ராணிப்பேட்டை தமிழக வெற்றி கழகத்தின் மேற்கு மாவட்ட செயலாளர் விஜய் மோகன் மற்றும் அவருடன் செய்தியாளர் ஜான் பிரிட்டோ ஆகிய இருவர் மீதும் ஆற்காடு நகர காவல் துறையினர் நான்கு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.புகார் எண் Cr.No.266/2026,U/s 75,76,77,351(2)BNS on23.07.2026 பிரிவின் கீழ் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.குறிப்பு :- விஜய் மோகன் தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர் மற்றும் இரண்டாவது நபராக வழக்கு பதிவு செய்யப்பட்டவர் ராணிப்பேட்டை மாவட்டம் நியூஸ் 7 செய்தியாளர் ஜான் பிரிட்டோ என்பதாகும்.

பயணிகள் நிழற்கூடம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுவது எப்போது?வேலூர், ஜூலை 26-வேலூர் கிழக்கு மாவட்டம், காட்பாடி சட்டமன்றத் தொகுதி த.வெ.க .கட்சி அலுவலகம் எதிரில் அமைந்துள்ள பயணிகள் நிழற்கூடம் கடந்த 06. 09. 2019ல் துரைமுருகன் எம். எல். ஏ.வால் தொடங்கப்பட்டது. இந்த பயணிகள் நிழற்கூடம் தற்போது பயன்பாடு இல்லாமல் அசுத்தமான நிலையில் உருமாறி உள்ளது. மின்விசிறிகள் உண்டு. ஆனால் மின் இணைப்பு இல்லை. பயன்பாடு இல்லாத இந்த நிழற்கூடத்தை த.வெ.க.சட்டமன்ற உறுப்பினர் சுதாகர் கடந்த 3 மாதங்களாகியும் த.வெ.க. கட்சி அலுவலகம் எதிரே உள்ள இந்த கட்டடம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு உகந்ததாக இல்லாமல் இருக்கும் நிலையை கண்டறிந்தார். ஆதலால் குறிப்பாக இந்த பயணிகள் நிழற்கூடத்தை கண்டும் காணாமல் இருந்து வருகிறார். ரீல்ஸ் மோகத்தில் உள்ளார். ஏன் கோடையில் கடும் வெப்பத்தில் பயணிகள் மின் விசிறி இருந்தும் மின் இணைப்பு இல்லாமல் அவதியுடன் நாட்களை கழித்து வருகின்றனர். இந்த நிலையில் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் ஏனோ பாராமுகத்தில் உள்ளார் என பொதுமக்கள் கேள்வி எழுப்பிய வண்ணம் உள்ளனர். இந்த அலுவலகம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படுமா? என்பது பொதுமக்களின் விடை தெரியாத கேள்வியாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

வேலூரில் சன்பீம் சி.பி.எஸ்.இ., தொடக்கப் பள்ளியின் ஆண்டு விளையாட்டு விழா : டி.எஸ்.பி., விஜிகுமார் பரிசுகள் வழங்கி சிறப்புரை!!வேலூர், ஜூலை 27-வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, கடலூர்–சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மெட்டுக்குளம் பகுதியில் செயல்பட்டு வரும் சன்பீம் சி.பி.எஸ்.இ., தொடக்கப் பள்ளியின் 2026-ஆம் ஆண்டுக்கான ஆண்டு விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு சன்பீம் பள்ளிகளின் தலைவர் ஹரிகோபாலன் தலைமை வகித்தார். அவர் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி வரவேற்புரையாற்றினார். பள்ளி மாணவர்கள் தலைவி ரித்திமா ரூஹல் வரவேற்புரை வழங்கினார். தொடர்ந்து, பள்ளியின் ஆண்டு விளையாட்டு அறிக்கை காணொளி வடிவில் திரையிடப்பட்டது.இதில் சிறப்பு விருந்தினராக காட்பாடி துணைக் காவல் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) விஜிகுமார் கலந்து கொண்டார். அவருக்கு பள்ளியின் தாளாளர் தங்க பிரகாஷ் நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார். பின்னர், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற நேரு அணிக்கு கோப்பை வழங்கிய டி.எஸ்.பி. விஜிகுமார், பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 250 மாணவ, மாணவிகளுக்கும், சிறப்பாகப் பணியாற்றிய 13 ஆசிரியர்களுக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்து தெரிவித்து பாராட்டி கௌரவித்தனர். இதன் தொடர்ச்சியாக அவர் பேசியதாவது: “பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு தேவையில்லாமல் கைப்பேசி பயன்படுத்தும் பழக்கத்தை ஏற்படுத்தாமல், விளையாட்டில் ஈடுபட ஊக்குவிக்க வேண்டும். பெற்றோர்களும் கைப்பேசி பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ள வேண்டும். விளையாட்டு மட்டுமே குழந்தைகளுக்கு உடல் ஆரோக்கியம், மனவலிமை மற்றும் ஒழுக்கத்தை வளர்க்கும். குழந்தைகளின் தனித்திறமையை அறிந்து, அவர்களுக்கு ஏற்ற விளையாட்டில் ஈடுபடுத்துவது பெற்றோர்களின் முக்கியப் பொறுப்பாகும். மாணவர்களை திறமையான விளையாட்டு வீரர்களாக உருவாக்குவதில் உடற்கல்வி ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது. மாணவர்களின் ஒழுக்கம், பண்பு மற்றும் தன்னம்பிக்கையை வளர்க்கும் அவர்களின் சேவையை ஒருபோதும் மறக்கக் கூடாது,” என்றார். இதனைத் தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.இந்த ஆண்டு விளையாட்டு நிகழ்ச்சி விழாவில் 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இறுதியாக, பள்ளி மாணவர் தலைவர் ரோஹித் ராம் நன்றியுரையாற்ற ஆண்டு விளையாட்டு விழா நிறைவுபெற்றது.

காட்பாடியில் கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சிறப்பு முகாம்!வேலூர், ஜூலை 27-வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, பழைய காட்பாடி பாலாஜி நகரில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில், புதிய பாரதம் அமைப்புசாரா மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் நல மாநில சங்கத்தின் சார்பில் மாபெரும் சிறப்பு முகாம் நடைபெற்றது.இம்முகாமிற்கு மாநிலத் தலைவர் எம்.டி. வேல்முருகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மாநில அமைப்புச் செயலாளரும், 6-வது வார்டு மாமன்ற உறுப்பினருமான கே.ஜி. சீனிவாசன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இம்முகாமில் புதிய உறுப்பினர்கள் சேர்த்தல், உறுப்பினர் அடையாள அட்டைகள் புதுப்பித்தல், புதிய தொழிலாளர்களை சங்கத்தில் பதிவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.‌ இதனைத்தொடர்ந்து, புதியதாக சங்கத்தில் இணைந்த உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவியாக இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் மற்றும் ஏராளமான உறுப்பினர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

வேலூர் மாவட்ட ஆட்சியருடன்அரசு மாதிரி பள்ளி மாணவர்கள் கலந்துரையாடிய’காபி வித் கலெக்டர்’ நிகழ்ச்சி!வேலூர், ஜூலை 25-வேலூர் மாவட்டம், பிள்ளையார்குப்பம் பகுதியில் உள்ள அரசு மாதிரி பள்ளியில் 2026-2027-ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவ, மாணவியர் பிரதிநிதிக்கான தேர்தல்ஜூலை.18-அன்றுநடைபெற்றது.இத்தேர்தலில்தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும்மாணவ, மாணவிகள் தங்கள் வாக்குகளை பதிவு செய்து,பல்வேறு துறைகளுக்கான பிரதிநிதிகளை தேர்வு செய்தனர்.தேர்ந்தெடுக்கப்பட்டமாணவ பிரதிநிதிகள் தமிழ்நாடு மாதிரி பள்ளியின்உறுப்பினர், செயலரின் செயல்முறைப்படி,ஜூலை.24 வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர்.பி.எஸ்.லீலா அலெக்ஸூடன்’காபி வித் கலெக்டர்!’- என்றநிகழ்ச்சியின் மூலம்கலந்துரையாடினர்.இக்கலந்துரையாடலின்போது மாவட்ட ஆட்சியர் பேசியதாவது,”மாணவ,மாணவிகள்போட்டித் தேர்வுகளை சந்திக்க தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.தமிழ்நாடு அரசு மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதனை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தினசரி நாளிதழ்களை படிக்க வேண்டும். மாணவர்கள்சிறு சிறு குழுக்களாக தங்களுக்குள்ளேயேபோட்டித்தேர்வு நடத்திபொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.என்னால் முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.கணினி பயன்பாடு,செயற்கை நுண்ணறிவு போன்றவற்றில் ஆக்கப்பூர்வமான,அறிவுப்பூர்வமான தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும்.அதிக மனக்குழப்பங்களை தவிர்த்து,படிப்பில் மட்டுமில்லாமல் விளையாட்டிலும் ஆர்வம் செலுத்த வேண்டும்.உங்களது வெற்றியை மட்டும் நினைத்து முயற்சியுடன்நன்கு கவனமுடன் படிக்க வேண்டும். தினசரி நூலகம் சென்று நல்ல புத்தகங்களை படிப்பதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும்.நீங்களே சமுதாயத்தின் எதிர்காலம். அதனால் அதிக பொறுப்பும் உங்களுக்கு உண்டு. மாணவர்கள் தாங்கள் பயிலும்10,11,12 ஆகிய வகுப்பு பாடங்களில் கவனத்துடன் பயின்றால் மத்திய, மாநில அரசு நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கேற்க பயனுள்ளதாக இருக்கும். மேலும் மாணவர்களுக்குமிகப்பெரிய சொத்துகல்வி ஒன்று தான்.நல்ல பழக்க வழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். தேவையில்லாதவற்றை தவிர்க்க வேண்டும்.உங்கள் பள்ளி அருகேபோதை இல்லாத பழக்க வழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.அனைத்து மாணவர்களும்100 சதவீத தேர்ச்சி பெற்று கல்வியில் சிறந்து விளங்கி சமுதாயத்தில் உயர்நிலையை அடைய வேண்டும்!” – எனஅறிவுரைகள் வழங்கினார்.இந்நிகழ்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆர்.பிரேமலதா, பள்ளி தலைமையாசிரியர் ஏ.தமிழ்பிரியா, ஆங்கில ஆசிரியை எஸ்.ஸ்ரீதேவி,பள்ளி எப்ஐஎஸ்.,வெ.சவேதா,மற்றும் கி.வெங்கடேஷ்உட்பட பலர் உடனிருந்தனர்.