Archives
August 2026
July 2026
June 2026
May 2026
April 2026
March 2026
February 2026
January 2026
December 2025
November 2025
October 2025
September 2025
Categories
Uncategorized
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
செய்திகள்
நிகழ்ச்சிகள்
விளையாட்டு
Meta
Log in
Entries feed
Comments feed
WordPress.org
செய்திகள்
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
நிகழ்ச்சிகள்
வர்த்தகம்
விளையாட்டு
உலக செய்திகள்
Month:
July 2026
திருப்பத்தூர் மாவட்டம், அம்பலூர் காவல் நிலையத்தின் புதிய காவல் ஆய்வாளராக பேபி 23.07.2026 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
அரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சிக்குட்பட்ட அரியலூர் அரசு கலைக்கல்லூரி, அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் இரயில்வே நிலையம் செல்லும் சாலைகளில் சீரான பேருந்து சேவையினை மேம்படுத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி, அரசுப் பேருந்தில் பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தார்.
மேட்டுப்பாளையம் சிஐடியு பொது தொழிலாளர் சங்கத்தினர்ஏழை எளிய மக்களுக்குஇலவச வீட்டு மனை பட்டா கோரி காதில் பூ சுற்றி பாய் போட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் படுத்து உறங்கும் போராட்டம்நடைபெற்றது
காட்பாடியில் பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகள் வழங்கல்!வேலூர், ஜூலை 24-வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம். சுதாகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகளை வழங்கினார்.நிகழ்ச்சியில் துயர் துடைப்பு வட்டாட்சியர் சந்தோஷ், சிறப்பு தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சிவக்குமார், வட்ட வழங்கல் அலுவலர் லக்ஷ்மி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.மேலும், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டைகளை பெற்றுக் கொண்டனர்.
காட்பாடி ஆக்சிலியம் கல்லூரியில் முத்தமிழ் விழா கோலாகல கொண்டாட்டம்!வேலூர், ஜூலை 24-வேலூர் மாவட்டம்,காட்பாடி காந்தி நகரிலுள்ளஆக்சிலியம் மகளிர் கல்லூரியில்,முத்தமிழ் விழாவின் நிறைவு நாள் விழா நடைபெற்றது.அதில்,மாணவிகளுக்கிடையேஉரியடி, கயிறு இழுத்தல், மெதுவாக மிதிவண்டி ஓட்டும் போட்டி, பல்லாங்குழி,பம்பரம், கோணிப்பை ஓட்டம், குடுவையில் நீர் நிரப்புதல்போன்ற பலவகையான தமிழ் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளும், கோலாட்டம், ஒயிலாட்டம் கரகாட்டம், கும்மியடித்தல் போன்ற பாரம்பரிய நடன போட்டிகளும் நடத்தப்பட்டது.மேலும், தமிழ் பாரம்பரியஉடையணியவும், உணவு உண்ணவும் மாணவிகளுக்குவலியுறுத்தப்பட்டது.இவ்விழாவில் கல்லூரி செயல் முனைவர். ஆ.மேரி ஜோஸ்பின் ராணி கருத்துரை வழங்கினார். கல்லூரி முதல்வர். முனைவர். அ.ஆரோக்கிய ஜெய்சீலி வாழ்த்துரை வழங்கினார்.துணை முதல்வர்.முனைவர் அ.அமலா வளர்மதி, துணை முதல்வர்.முனைவர்.க.அபிபியூலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமிழ் துறை தலைவர். முனைவர். கோ.செந்தில் செல்வி, தமிழ் துறை மற்றும் பேராசிரியர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.மேலும், அக்கல்லூரி மாணவிகளும், ஆசிரியர்களும்கலந்து கொண்டு நிகழ்ச்சியைசிறப்பித்தனர்.’அலைப்பேசியை விடுப்போம் பாரம்பரியத்தை கையில் எடுப்போம்!’- என்ற வாசக தோரணத்துடன் விழாக்களம் கலை நயத்துடன் அலங்கரிக்கப்பட்டிருந்ததுபார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி இளநிலை மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா: ஆட்சியர் பங்கேற்பு! !வேலூர், ஜூலை 23-வேலூர் மாவட்டம்,அடுக்கம்பாறை பகுதியிலுள்ளஅரசு வேலூர் மருத்துவக் கல்லூரி கலையரங்கில் ஜூலை.22-அன்று 16-வது இளநிலை மருத்துவ பட்டப்படிப்பு முடித்த மாணவ,மாணவிகளுக்குபட்டமளிப்பு விழா நடைபெற்றது.அதில், மாவட்ட ஆட்சியர்.பி.எஸ்.லீலா அலெக்ஸ் கலந்து கொண்டு மாணவ,மாணவிகளுக்கு பட்டம் மற்றும் சான்றிதழ்களைஅளித்து வாழ்த்தினார்.அதில், சட்டமன்ற உறுப்பினர்கள் த.வேலழகன்(அணைக்கட்டு), மரு.ம.சுதாகர்(காட்பாடி), ஏ.தென்றல்குமார்(கீ.வ.குப்பம்), க.சிந்து(குடியாத்தம்), எம்.சுகுமார்(ஆற்காடு) ஆகியோரும், அரசு வேலூர் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர்.எம்.ரோகிணிதேவி, துணை முதல்வர்.கௌரிவெலிகண்டலா, மருத்துவ கண்காணிப்பாளர்.ந.ரதிதிலகம், குடியிருப்பு மருத்துவர் துரை.ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பட்டப்பகலில் செம்பராயநல்லூர் ஏரியில் மொரம்பு மண் கடத்தல்!வேலூர், ஜூலை 22-வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த சமத்துவபுரம் எதிரில் உள்ள செம்பராயநல்லூர் ஏரியில் கடந்த 16.7,2026 அன்று மொரம்பு மண் பட்டப் பகலில் மண் மாஃபியாக்கள் எடுத்துக் கொண்டிருந்தனர். இதுதொடர்பாக திருவலம் வருவாய் ஆய்வாளர் ராம்குமாரிடம் கேட்ட போது நானும் தாசில்தாரும் நேரில் சென்று ஆய்வு செய்தோம் என்று கூறினார். அதன் பிறகு தொலைபேசி வாயிலாக கேட்டபோது எங்களுக்கு சரியாக தெரியவில்லை என்றும், நாங்கள் நேரில் சென்று பார்க்கின்றோம் என்றும் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறுகிறார். இதில் எது உண்மை என்று தெரியவில்லை. இதை சம்பந்தப்பட்ட கனிம வள அலுவலர்கள் இந்த பகுதியில் நேரில் சென்று கள ஆய்வு செய்ய வேண்டும். அப்போது உண்மை வெட்ட வெளிச்சத்துக்கு வரும். இந்த மண் மாஃபியாக்கள் பின்புலமாக இருப்பது யார்? யார்?. இங்கு எடுக்கும் மொரம்பு மண் யாருக்கு சப்ளை செய்யப்படுகிறது என்ற விவரம் கிடைக்கவில்லை. யார் யாருக்கு இதில் பங்கு போகிறது என்று தெரியவில்லை. திரை மறைவில் என்ன நடக்கின்றது என்று புவியியல் மற்றும் சுரங்கங்கள் துறை வெளிக்கொண்டு வரவேண்டும். அப்போது தவறு செய்தவர்கள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு முன் வரவேண்டும். இந்த மண் கடத்தலுக்கு துணை போன கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையை எடுத்தாக வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் திடீர் போர்க் கொடி தூக்கியுள்ள னர். தமிழ்நாடு அரசு மற்றும் வேலூர் மாவட்ட நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
குடியாத்தம் பிரம்மாஸ் பள்ளியில் மாற்றுச் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்று வழங்க மறுப்பதாக பாதிக்கப்பட்ட மாணவன் ஆட்சியரிடம் புகார்! வேலூர், ஜூலை 21-வேலூர் மாவட்டம், குடியாத்தம் அக்ராபவரம் புதுமனை எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மகன் லோகேஷ். இவர் எளிமையான குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் குடியாத்தம் ஆர். எஸ். ரோட்டில் உள்ள பிரம்மாஸ் பள்ளியில் கடந்த ஆண்டு அதாவது 2025- 2026 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் ஒன்பதாம் வகுப்பு ஆங்கில வழியில் பயின்று வந்தார். பள்ளியில் சேர கல்வி கட்டணம் ரூபாய் 50,000 செலுத்த வேண்டும் என நிர்பந்தம் செய்துள்ளனர். இந்நிலையில் ரூபாய் 25 ஆயிரம் செலுத்தியுள்ளார் சதீஷ்குமார்.மீதி பணத்தை மூன்று மாதங்கள் கழித்து தருவதாக கூறியுள்ளார். இதையடுத்து அவரை வகுப்பில் சேர அனுமதி அளித்துள்ளனர். மூன்று மாதம் கழிந்த நிலையில் பின்பு செப்டம்பர் 2025 ஆம் ஆண்டு பள்ளியின் சேர்மன் செந்தில் மற்றும் அவரது மனைவி ஹேமா ஆகிய இருவரும் மீதி பணத்தை செலுத்த வேண்டும் என வற்புறுத்தி உள்ளனர். அதற்கு நாங்கள் எனது அப்பாவிற்கு காரில் செல்லும்போது விபத்து ஏற்பட்டு கால் உடைந்து வீட்டில் உள்ளார். அவர் குணமடைந்த பிறகு இரண்டு மாதங்கள் கழித்து நவம்பர் 2025 ல் மீதி பணம் கட்டுகிறோம் என மாணவனின் தாய் கூறியுள்ளார். அதற்கு பள்ளியின் தாளாளர் ஹேமா லோகேஷை ஒருமையில் பேசி பணம் இல்லை என்றால் ஏன்டா பள்ளிக்கு வந்து உயிரை வாங்குகிறாய் சனியனே என பல மாணவர்கள் முன்பு லோகேஷை திட்டி அவமானப்படுத்தியுள்ளார். இந்நிலையில் மிகுந்த மன வேதனையோடு வீட்டிற்கு வந்து விட்டார் லோகேஷ். இதையடுத்து தனது தந்தையின் கால் உடைந்து வீட்டிலேயே உள்ளார். லோகேஷூம், அவரது தாயும் மேஸ்திரி கூலி வேலைக்குச் சென்று இரண்டு மாதமாக சேர்த்து வைத்து ரூபாய் 25,000ஐ எடுத்துக் கொண்டு போனதற்கு பள்ளியில் உனக்கு அனுமதி இல்லை, அடையாள அட்டை இல்லை, அரையாண்டு தேர்வுக்கும் உனக்கு அனுமதி இல்லை என்று சொல்லிவிட்டு ரூ.ஒரு லட்சத்து 19 ஆயிரம் பணம் கட்ட வேண்டும் என லோகேஷிடம் பள்ளியின் நிர்வாகி ஹேமா சொல்லி பள்ளிக்குள் செல்ல விடாமல் திருப்பி அனுப்பிவிட்டார். இதனால் கடந்த ஆண்டு பள்ளிக்கு போகாமல் வீட்டிலேயே இருந்து விட்டார் லோகேஷ். இந்நிலையில் அவரை தேர்வு எழுத கூட அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பள்ளி நிர்வாகமானது பல மாணவர்களை இப்படி அவர்களின் கல்வியை பாழ்படுத்தி அவர்களது வாழ்க்கையை சூனியம் ஆக்கி உள்ளதும் குறிப்பிடத்தக்கது. சரி எங்களது டிசி மற்றும் மதிப்பெண் சான்றிதழ்களையாவது திரும்ப வழங்குமாறு கேட்டும் அதற்கும் பள்ளி நிர்வாகம் தர மறுத்து இழுத்தடித்து வருகின்றது. இதனால் பொறுத்து பொறுத்து பார்த்த லோகேஷ் தனது தந்தை சதீஷ்குமார் மற்றும் தாய் மற்றும் உறவினர்களுடன் வேலூர் மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸிடம் நேரில் சென்று புகார் மனுவை அளித்துள்ளார். இந்த புகார் மனுவை பெற்றுக் கொண்ட வேலூர் மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ உரிய விசாரணை நடத்தி லோகேஷூக்கு சேர வேண்டிய மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றை பெற்று தருவதாக உறுதி அளித்துள்ளார். இப்படி கல்வியை பாழ் செய்யும் கல்வி நிறுவனங்கள் மீது கல்வித் துறை உரிய சட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பது பாதிக்கப்பட்டவர்களின் எதிர்பார்ப்பாக மாறி உள்ளது. குறிப்பாக ஓராண்டு என்பது ஒரு வயது போகிறது, ஒரு கல்வியாண்டும் வீணாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு பிரம்மாஸ் பள்ளி நிர்வாகம் உரிய முறையில் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட மாணவன் லோகேஷ் குடும்பத்தினரின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறியுள்ளது. இதுபோன்று மற்ற எந்த மாணவ, மாணவிக்கும் இது போன்ற பாதிப்புகள் நடைபெறக்கூடாது என்பதற்காக இது ஒரு முன்னுதாரணமாக அமைய வேண்டும் என்பதே அவர்களது ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறியுள்ளது. பிரம்மாஸ் பள்ளி மீது வேலூர் மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசு கல்வித்துறையும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது நடவடிக்கையை அரசு எடுக்குமா? மாவட்ட நிர்வாகம் எடுக்குமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
1
2
3
4
…
11
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.