மேட்டுப்பாளையம் – கோவை மெமோ ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க அமைச்சர் எல் முருகனிடம் சி ஐ டி யு பொதுத் தொழிலாளர் சங்கத்தினர் நேரில் கோரிக்கை மனு அளித்தனர்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் நடைபெறும் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்ய வருகை தந்திருந்த மத்திய இணை அமைச்சர் எல் முருகனிடம் மேட்டுப்பாளையம் சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் மேட்டுப்பாளையம் கோவை வழித்தடத்தில் இயங்கி வரும் மெமோ ரயிலில் கூடுதல் பெட்டிகள் கேட்டு பல்வேறு அமைப்புகள் ரயில் பயணிகளின் கோரிக்கைகளை ஏற்று கடந்த இரண்டாம் மாதம் அறிவித்த கூடுதல் ரயில் பெட்டிகளை பொதுமக்கள் நலன் கருதி விரைவாக இணைக்க வேண்டும்
மேட்டுப்பாளையம் ரயில் நிலைய மேம்படுத்தும் பணியை விரைவு படுத்த வேண்டும் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை வரை இரு வழி ரயில் பாதை பணியை துரிதப்படுத்த வேண்டும்

மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை சென்று வரும் மெமோ ரயிலில் பயணிகளின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு பயணிகளில் நீண்ட நாள் கோரிக்கையான கூடுதல் பெட்டி கோரிக்கையை ஏற்று கடந்த 12.02.2026 அன்று ரயில்வே நிர்வாகம் கூடுதலாக நான்கு பெட்டிகளை இணைப்பதாக அறிவிப்பு வெளியிட்டார்கள் ஆனால் தற்போது வரை நான்கு பெட்டிகள் இணைக்காமல் இருப்பதால் பொதுமக்கள் மாணவ மாணவிகள் படியில் நின்ற ஆபத்தான வகையில் பயணம் செய்து வருகிறார்கள் ஆகவே அசம்பாவித சம்பவங்கள் நிகழும் முன் ரயில்வே நிர்வாகம் அறிவித்த கூடுதல் நான்கு பெட்டிகளை இணைத்து பயணிகளை பாதுகாக்க வேண்டும்
மேட்டுப்பாளையம் நகர் பகுதியில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க
சாந்தி நகர் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும்
மேட்டுப்பாளையம்- ராமேஸ்வரம் (தினசரி, புதிய ரயில்) மேட்டுப்பாளையம் – கோவை – போத்தனுார் – சென்னை வந்தே பாரத் (வாரத்தில் புதன் தவிர மற்ற 6 நாளும்)
மேட்டுப்பாளையம் – கோவை – போத்தனுார் – மங்களூரு (தினசரி)
மேட்டுப்பாளையம் – கோவை – போத்தனுார் – மதுரை (தினசரி)
மேட்டுப்பாளையம் – கோவை – போத்தனுார் – கண்ணனுார் (தினசரி)
மேட்டுப்பாளையம் – கோவை – போத்தனுார் – மங்களூருஒரு புதிய ரயில் இயக்கவும், கோவை வரும் 5 ரயில்களை மேட்டுப்பாளையம் வரை நீட்டிக்கவும் ரயில்வே நிர்வாகம் பரிந்துரை செய்து வருகின்ற
ஆகஸ்ட் முதல் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டதாக ரயில்வே நிர்வாகத்தால் அறிவிப்பு வெளியானது மேலும் இந்த ரயில்கள் தவிர, கோவை – ஷொர்ணுார் ரயில், கோவை – பாலக்காடு டவுன் ஆகிய ரயில்களையும் மேட்டுப்பாளையம் வரை நீட்டிக்கலாம் என்று ரயில்வே சார்பில் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அறிகிறோம் எதற்காக ரயில்வே நிர்வாகத்திற்கும் இதற்கு உதவிய அனைவருக்கும் நன்றி கூறிக் கொள்கிறோம்
மேலும் அறிவித்த ரயில்களை கூடிய விரைவில் இயக்கிட நடவடிக்கை எடுக்கவும் வேண்டியும்

மேட்டுப்பாளையம் ரெயில் நிலையம் கடந்த 1873-ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் பயன்பாட்டிற்கு வந்தது. 31.8.1873-ம் ஆண்டு முதன் முதலாக மேட்டுப்பாளையம் – கோவை இடையே பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது
மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னை நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலும், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு 2005-ம் ஆண்டு யுனெஸ்கோ நிறுவன உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்த மலை ரெயிலும் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் மேட்டுப்பாளையத்தில் இருந்து தினசரி மெமோ பேசஞ்சர் ரயில் ஐந்து முறையும் திருநெல்வேலி வாராந்திர ரயிலும் இயக்கப்பட்டு
150 ஆண்டுகள் பழமையான ரயில் நிலையத்தை
அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தி வரும் ரயில்வே நிர்வாகத்திற்கு நன்றியை தெரிவித்ததோடு இந்த பணிகளை விரைவு படுத்தவும் வேண்டியும் மேலும் பல்வேறு ரயில்வே சம்பந்தமான கோரிக்கைகளை மனுவாக
பொதுச் தொழிலாளர் சங்க நிர்வாகிகள்
முகமது அலி ஜின்னா
குணசேகரன்
லூயிஸ் உள்ளிட்டோர்
மத்திய இணை அமைச்சரிடம் நேரில் மனு கொடுத்து கோரிக்கையை வலியுறுத்தினர் கோரிக்கையை கேட்டுக் கொண்ட மத்திய அமைச்சர் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளது கூடிய விரைவில் கோரிக்கையில் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று கூறினார்
முன்னதாக பொதுமக்களுக்கானகோரிக்கை மனுவை சேலம் கோட்டம் ரயில்வே மேலாளர்
பன்னா லால் அவர்களிடம் கொடுத்த பொழுது மனுவை பெறாமல் அவரது உதவியாளரிடம் கொடுக்குமாறு கூறினார் அவரது உதவியாளரும் வேண்டா வெறுப்பாக காதில் கைபேசியை வைத்துக்கொண்டு யாரிடமும் பேசிக்கொண்டு ஏதோ பெயரளவுக்கு பொதுமக்களுக்கான கோரிக்கை மனுவை
பெற்றுச் சென்றார்
இதனை மாண்புமிகு மத்திய இணை அமைச்சரிடம் தொழிற்சங்க நிர்வாகிகள் புகாராக தெரிவித்தனர் புகாரை
கேட்டுக்கொண்ட மத்திய அமைச்சர் வருங்காலங்களில் இது போன்று நிகழாதவாறு பார்த்துக் கொள்வதாக கூறினார்