Archives
July 2026
June 2026
May 2026
April 2026
March 2026
February 2026
January 2026
December 2025
November 2025
October 2025
September 2025
Categories
Uncategorized
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
செய்திகள்
நிகழ்ச்சிகள்
விளையாட்டு
Meta
Log in
Entries feed
Comments feed
WordPress.org
செய்திகள்
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
நிகழ்ச்சிகள்
வர்த்தகம்
விளையாட்டு
உலக செய்திகள்
Month:
May 2026
பொறுப்பேற்பு!வேலூர்,ஜூன் 1-வேலூர் மாவட்ட ஆட்சியராக பி. எஸ். லீலா அலெக்ஸ் 31. 5 .2026 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
பேரணாம்பட்டு ஏ.சி.என். திருச்சபையில் புதிய பாடல் சி. டி. வெளியீட்டு விழா!வேலூர், ஜூன் 1 -வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு கண்கார்டியா மேல்நிலைப்பள்ளி பின்புறம் உள்ள ஏ. சி. எம். திருச்சபையில் சபை போதகர் ஜி.ஹட்சனின் பாடல் சி. டி. வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு சபை போதகர் ஜி. ஹட்சன் தலைமை தாங்கினார். இதில் பெங்களூருவைச் சேர்ந்த போதகர்.அன்பு ஜோனத்தான், பிரபல பல் மருத்துவர் ஜெயகந்தன் ஜனனி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூட்டில் மாணவ- மாணவி களுக்கான பிளாக் பெல்ட் நிகழ்வானது நடைபெற்றது.வேலூர், மே 31-கன்னியாகுமரி மாவட்டம், முளகுமூட்டில் Shaolin kungfu wusu leo lee karate school of shotokan federation நடத்திய கருப்பு பட்டை வழங்கும் விழாவானது சனிக்கிழமை காலை 10 மணி அளவில் நிகழ்ச்சியானது நடை பெற்றது. இந்த நிகழ்வில் மாணவ, மாணவிகளின் பல்வேறு வகையான படைப்பாற்றலை வெளிப்படுத்தினர். கராத்தே, சிலம்பம், நிஞ்ஜா கட்டா டபுள் ஸ்டிக் டிரிபிள் ஸ்டிக், ஒற்றை கம்பு, வாள் யோகா என பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் மாணவ மாணவிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் இன்றைய தலைமுறையினர் கண்டிப்பாக தங்களை தற்காத்துக் கொள்ள கராத்தே மிகவும் அவசியம் என்றும் தினமும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சத்தாண உணவுகளை உட்கொண்டு தினமும் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். பயிற்சி ஒன்று தான் சிறப்பான மாணவ மாணவியரை ஊக்குவிக்கும் உந்து சக்தியாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார். தற்காப்பு கலையின் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார்.இந்த கராத்தே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர்கள் x dan black Belt sijo. Master. L.fransis, master. Selvasingh5th dan black Belt chief insector and controller, master. Sensivinothraj, 3th dan black Belt master. Selva jayakumar. 2nd dan black Belt master. Sensi rajesh ஆவர்.சிறப்பு விருந்தினராக father. Gilbert lingson, மற்றும் dr. Karthick மரியம் மருத்துவமனை டீன், வர்த்தக அணி தலைவர் சிவகுமார், ex. Army 5th dan black Belt ajikumar , John bright tiruvalur sount indian secretary, ex. Chairman lenin மற்றும் மாணவ மாணவியரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். மேலும் முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் மாணவ மாணவியருக்கு black Belt certificate மற்றும் கோப்பை வழங்கி கௌரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காட்பாடி கெங்கையம்மன் கோயில் திருவிழாவில் டிஜே இசை நிகழ்ச்சிக்கு காவல்துறை தடை விதிப்பு: ஆத்திரமடைந்த இளைஞர்கள் திடீர் சாலை மறியல்!வேலூர், மே 31-வேலூர் மாவட்டம், காட்பாடி தாராபடவேடு கெங்கையம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு டிஜே இசை நிகழ்ச்சிக்கு காவல் துறை அனுமதி தராததால் ஊர் பொதுமக்கள் அனைவரும் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காட்பாடி போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட இளைஞர்களை அடித்து விரட்டினர். இதையடுத்து தடைபட்ட போக்குவரத்தை சரி செய்வதற்கு சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் ஆனது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சித்தூர் -கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் திணறியவாறு வாகனங்களை இயக்க வேண்டி இருந்தது குறிப்பிடத்தக்கது. இது போன்ற கோவில் நிகழ்ச்சிகள் என்ற பெயரில் கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை வைத்து பாடல்களை அதிக சத்தத்துடன் ஒளிபரப்புவதால் நோயாளிகள், வயதானவர்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது .இதனையும் காவல்துறை கண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கையாக விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதை காட்பாடி காவல் நிலையத்தில் உள்ள போலீசார் செய்கிறார்களோ இல்லையோ, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமன் இதற்காக தனி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்குமா? இல்லை கண்டும் காணாமல் விட்டு விடுமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
50 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா!வேலூர், மே 31-கடந்த தேர்தலில் காட்பாடி சட்டமன்ற உறுப்பினராக தவெக கட்சியின் வேட்பாளர் டாக்டர் சுதாகர் வெற்றி பெற்றார். இந்நிலையில் காட்பாடி சட்டமன்ற அலுவலகம் புனரமைக்கப்பட்டது. கடந்த 50 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் பூட்டிய நிலையில் பயன் பாடின்றி கிடந்தது. இந்த அலுவலகத்தை சீரமைப்பு செய்து கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ் தலைமை வகித்து திறந்து வைத்தார். இந்த திறப்பு விழாவில் எம் எல் ஏக்கள் காட்பாடி டாக்டர் சுதாகர், வேலூர் ராஜேஷ் கண்ணன், குடியாத்தம் சிந்து, கே. வி. குப்பம் தென்றல் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மாவட்ட செயலாளர்கள் மேற்கு வேல்முருகன், கிழக்கு நவீன் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அமைச்சர் காந்திராஜ் ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கேற்றியும் திறந்து வைத்தார். இவ்விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு இனிப்பு மற்றும் தேநீர் விருந்து அளித்து உபசரிக்கப்பட்டது.
வேலூரில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டத்தை புறக்கணித்து தரையில் புரண்டு ஆர்ப்பாட்டம்!வேலூர் மே 31-தவெக சார்பில் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டத்தை தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் புறக்கணிப்பு செய்து தரையில் உருண்டு புரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு நிலவியது. இந்நிலையில் அங்கு இருந்த சில விவசாயிகள் தரையில் உருண்டு புரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த விவசாயிகளை சக விவசாயிகளே தூக்கி எழுப்பி தண்ணீர் கொடுத்தனர். இதையடுத்து அந்த பகுதியில் திடீர் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தப் போராட்டம் நடந்த போது விவசாயிகளை மாவட்ட நிர்வாகமும், மற்ற அரசு அலுவலர்களும் யாரும் ஒரு பெரிய பொருட்டாகவே கருதவில்லை என்பது வேதனைக்குரிய விஷயமாகும். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் போராட்டம் நடத்திய விவசாயிகளை யாரும் மனிதர்களாகவே மதிக்கவில்லை என்பது வெட்கப்பட வேண்டிய வேதனைக்குரியதாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.
காட்பாடி தாராபடவேடு மண்டல அலுவலகத்தில் வேலூர் மாநகராட்சி ஆணையர் திடீர் ஆய்வு!வேலூர், மே 31-வேலூர் மாநகராட்சி காட்பாடி மண்டலம் 1, தாராபடவேடு மண்டல அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் இரா. லட்சுமணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தூய்மை பணியாளர்களின் வருகை பதிவேட்டை ஆய்வு செய்தார். அத்துடன் வீடு வீடாகச் செல்லும் தூய்மை பணியாளர்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் என தனித்தனியாக தரம் பிரித்து வாங்கும் பணியையும் அவர் ஆய்வு செய்தார். பொதுமக்களிடமிருந்து புகார் வராத வகையில் தூய்மைப் பணியாளர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும் எனவும் அவர் அப்போது அறிவுறுத்தினார். இந்த திடீர் ஆய்வின் போது காட்பாடி 1வது மண்டல சுகாதார அலுவலர் டாக்டர் சிவக்குமார் உடன் இருந்தார்.
ரயில் தண்டவாளம் அருகே உள்ள கால்வாயில் விழுந்து கிடந்த அடையாளம் தெரியாத நபர்: அவரை மீட்டு காட்பாடி ரயில்வே போலீசார் விசாரணை!வேலூர், மே 31-வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த சேவூர் ரயில் நிலையத்திற்கும், திருவலம் ரயில் நிலையத்திற்கும் இடையில் உள்ள Upline பகுதியில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் அங்குள்ள கால்வாயில் பலத்த காயங்களுடன் மயக்க நிலையில் விழுந்து கிடந்தார்.இதனைப் பார்த்த ரயில்வே ஊழியர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள், உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேர்க்காடு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் மயங்கிய நிலையிலேயே இருந்தார். இதனால் அவருடைய பெயர் மற்றும் விலாசம் குறித்த விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை.இச்சம்பவம் குறித்து காட்பாடி ரயில்வே போலீசார் விபத்து வழக்குப் பதிவு செய்து காயமடைந்த நபர் ரயிலில் இருந்து தவறி விழுந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? மற்றும் அவர் யார்? , எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து தீவிர புலன் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் சேர்க்காடு அரசு மருத்துவமனையில் இருந்து அவர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி அலுவலகம் திறப்பு விழா கோலாகலம்!வேலூர், மே 30-வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி அமைந்துள்ளது. இந்த அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி கடந்த காலத்தில் திமுக வசம் இருந்தது. இந்நிலையில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வசம் இருந்த அணைக்கட்டு தொகுதி அதிமுக கைக்கு மாறியது. இதையடுத்து இந்த அலுவலகத்தின் மொத்த பொறுப்பும் அதிமுகவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதை தொடர்ந்து அந்த அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் மு. க .ஸ்டாலினின் உருவப்படம் அகற்றப்பட்டது. இதையடுத்து அந்த அலுவலகத்தை தூய்மைப்படுத்தி மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர்களான எம் .ஜி.ராமச்சந்திரன் மற்றும் ஜெ. ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்கள் வைக்கப்பட்டு மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த அலுவலகத்தின் திறப்பு விழா 29.5.2026 வெள்ளிக்கிழமை அன்று நடந்தது. இந்த அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதியின் அலுவலகத்தை வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் வேலழகன் தனது திருக்கரங்களால் திறந்து வைத்து பொதுமக்களுக்கு அர்ப்பணித்தார். பொதுமக்கள் எப்பொழுது வேண்டுமானாலும் இந்த அலுவலகத்தை தொடர்பு கொண்டு தங்களது குறைகளை மனுக்களாகவோ அல்லது இந்த அலுவலகத்தில் பணியில் உள்ள ஊழியர்களிடமோ வழங்கி தங்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை கேட்டு பெறலாம் என்று அப்போது அவர் தெரிவித்தார். பொதுமக்களுக்கு சேவை செய்வதே அதிமுகவின் தலையாய கடமையாகும். இதனையே எங்களது முன்னாள் தமிழக முதல்வர்கள் மறைந்த எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் செய்து கொண்டிருந்தனர். இதையடுத்து அவரது வழியை பின்பற்றி தற்போது பொதுச்செயலாளராக அதிமுகவை நிர்வகித்து வரும் எடப்பாடி பழனிச்சாமி வழியில் குறைகளை பொதுமக்களுக்கு இல்லாமல் செய்வதே அதிமுகவின் தலையாய கடமை ஆகும். அதனையே இந்த அணைக்கட்டு தொகுதியில் நாங்கள் செய்து வருகிறோம் என்று பெருமிதத்துடன் அதிமுக எம்எல்ஏ வேலழகன் தெரிவித்தார். இந்த திறப்பு விழாவில் ரிப்பன் வெட்டியும் ,மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியும் தனது பணியை முறைப்படி சட்டமன்ற அலுவலகத்தில் தொடங்கியுள்ளார் அதிமுக எம்எல்ஏ வேலழகன். எம் எல் ஏ வேலழகன் பணி சிறக்க அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர். அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி அலுவலகத் திறப்பு விழாவை முன்னிட்டு நடந்த இந்த எளிய விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. அத்துடன் தேநீர் விருந்தும் அளித்து உபசரிக்கப்பட்டது. பொதுமக்கள் இந்த அலுவலகத்தை பயன்படுத்தி தங்களது குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு அதிமுக எம்எல்ஏ வேலழகன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ள வந்தனா கார்க் ஐஏஎஸ்.
1
2
…
12
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.