
காட்பாடி தாராபடவேடு மண்டல அலுவலகத்தில் வேலூர் மாநகராட்சி ஆணையர் திடீர் ஆய்வு!வேலூர், மே 31-வேலூர் மாநகராட்சி காட்பாடி மண்டலம் 1, தாராபடவேடு மண்டல அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் இரா. லட்சுமணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தூய்மை பணியாளர்களின் வருகை பதிவேட்டை ஆய்வு செய்தார். அத்துடன் வீடு வீடாகச் செல்லும் தூய்மை பணியாளர்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் என தனித்தனியாக தரம் பிரித்து வாங்கும் பணியையும் அவர் ஆய்வு செய்தார். பொதுமக்களிடமிருந்து புகார் வராத வகையில் தூய்மைப் பணியாளர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும் எனவும் அவர் அப்போது அறிவுறுத்தினார். இந்த திடீர் ஆய்வின் போது காட்பாடி 1வது மண்டல சுகாதார அலுவலர் டாக்டர் சிவக்குமார் உடன் இருந்தார்.










Leave a Reply