அசனமாப்பேட்டையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரிசெய்யாறு ‘வி தி லீடர்ஸ்’ கட்சியினர் சப் – கலெக்டரிடம் புகார் மனு !செய்யாறு, ஜூலை 21 -செய்யாறு அடுத்த அசனமாப் பேட்டையில் பொதுமக்களுக்கும் – கிராம மக்களுக்கும் இடையூறாக இருந்து வரும் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி வி தி லீடர்ஸ் கட்சியினர் செய்யாறு சப் – கலெக்டரிடம் புகார் மனுவை கொடுத்தனர்.செய்யாறு சட்டசபை தொகுதிக்கு உட்பட்டது ‘தி வி லீடர்ஸ்’ கட்சியைச் சேர்ந்த பொறுப்பாளர்களான வெங்கடேசன், ரமேஷ், சரவணன், சக்தி நாராயணன், அருள், ஏ.சி.கே.பிரபாகர் ஆகியோர் ஒன்றிணைந்து செய்யாறு சப் – கலெக்டர் அம்பிகா ஜெயினிடம் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது;’செய்யாறு அடுத்த அசனமாப் பேட்டை கிராமம். இங்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மேல்நிலைப் பள்ளி, காய்கனி, பழக்கடைகள் ஆகியவை இங்குள்ள அசனமாப் பேட்டை கூட்டு சாலையில் தினமும் 1000க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்து செல்லும் பகுதியாக இருந்து வருகிறது. காஞ்சிபுரம், செய்யாறு, வேலூர், ஆற்காடு, கலவை ஆகிய வழித் தடங்களில் இயக்கப்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் அனைத்தும் மேற்கண்ட கூட்டுச் சாலையில் நின்று செல்கின்றன.இதனால், அசனமாப்பேட்டை கூட்டு சாலை எந்த நேரமும் ‘பிசியாகவே’ இருந்து வருகிறது. ஆரம்ப சுகாதாரத்திற்கு வரும் நோயாளிகள் பள்ளிக்கு செல்லும் மாணவ – மாணவிகள் இந்தக் கூட்டு சாடையை தான் தினமும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த கூட்டு சாலையின் அருகிலேயே அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இரண்டு கட்டடங்களில் இயங்கி வரும் இந்த டாஸ்மாக் கடையில் நண்பகல் 12 மணி முதல் – இரவு வரை குடிமகன்கள் மது பாட்டிலை வாங்க முந்திச் செல்லும் நிலை தொடர்கிறது.இந்த குடிமகன்கள் அங்குள்ள நெடுஞ்சாலையின் அருகாமையிலும், புளிய மரத்தின் கீழே அமர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மதுவை அருந்துகின்றனர். பள்ளி மாணவர்கள், பொதுமக்கள், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் இந்த டாஸ்மாக் கடையை கடந்து செல்ல மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.போலீசாரும் இந்தப் பக்கம் வருவதே கிடையாது. எனவே, அசனமாப்பேட்டையில் பொது மக்களுக்கு இடையூறாக இருந்து வரும் டாஸ்மாக் கடையை அகற்ற உத்தரவிட வேண்டும்’ இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.’வி தி லீடர்ஸ்’ கட்சியைச் சேர்ந்த துளசி ராஜன், கோவிந்தராஜ், சந்திசேகர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் மனு அளித்தவர் களுடன் உடனிருந்தனர்.