குடியாத்தம் பிரம்மாஸ் பள்ளியில் மாற்றுச் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்று வழங்க மறுப்பதாக பாதிக்கப்பட்ட மாணவன் ஆட்சியரிடம் புகார்! வேலூர், ஜூலை 21-வேலூர் மாவட்டம், குடியாத்தம் அக்ராபவரம் புதுமனை எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மகன் லோகேஷ். இவர் எளிமையான குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் குடியாத்தம் ஆர். எஸ். ரோட்டில் உள்ள பிரம்மாஸ் பள்ளியில் கடந்த ஆண்டு அதாவது 2025- 2026 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் ஒன்பதாம் வகுப்பு ஆங்கில வழியில் பயின்று வந்தார். பள்ளியில் சேர கல்வி கட்டணம் ரூபாய் 50,000 செலுத்த வேண்டும் என நிர்பந்தம் செய்துள்ளனர். இந்நிலையில் ரூபாய் 25 ஆயிரம் செலுத்தியுள்ளார் சதீஷ்குமார்.மீதி பணத்தை மூன்று மாதங்கள் கழித்து தருவதாக கூறியுள்ளார். இதையடுத்து அவரை வகுப்பில் சேர அனுமதி அளித்துள்ளனர். மூன்று மாதம் கழிந்த நிலையில் பின்பு செப்டம்பர் 2025 ஆம் ஆண்டு பள்ளியின் சேர்மன் செந்தில் மற்றும் அவரது மனைவி ஹேமா ஆகிய இருவரும் மீதி பணத்தை செலுத்த வேண்டும் என வற்புறுத்தி உள்ளனர். அதற்கு நாங்கள் எனது அப்பாவிற்கு காரில் செல்லும்போது விபத்து ஏற்பட்டு கால் உடைந்து வீட்டில் உள்ளார். அவர் குணமடைந்த பிறகு இரண்டு மாதங்கள் கழித்து நவம்பர் 2025 ல் மீதி பணம் கட்டுகிறோம் என மாணவனின் தாய் கூறியுள்ளார். அதற்கு பள்ளியின் தாளாளர் ஹேமா லோகேஷை ஒருமையில் பேசி பணம் இல்லை என்றால் ஏன்டா பள்ளிக்கு வந்து உயிரை வாங்குகிறாய் சனியனே என பல மாணவர்கள் முன்பு லோகேஷை திட்டி அவமானப்படுத்தியுள்ளார். இந்நிலையில் மிகுந்த மன வேதனையோடு வீட்டிற்கு வந்து விட்டார் லோகேஷ். இதையடுத்து தனது தந்தையின் கால் உடைந்து வீட்டிலேயே உள்ளார். லோகேஷூம், அவரது தாயும் மேஸ்திரி கூலி வேலைக்குச் சென்று இரண்டு மாதமாக சேர்த்து வைத்து ரூபாய் 25,000ஐ எடுத்துக் கொண்டு போனதற்கு பள்ளியில் உனக்கு அனுமதி இல்லை, அடையாள அட்டை இல்லை, அரையாண்டு தேர்வுக்கும் உனக்கு அனுமதி இல்லை என்று சொல்லிவிட்டு ரூ.ஒரு லட்சத்து 19 ஆயிரம் பணம் கட்ட வேண்டும் என லோகேஷிடம் பள்ளியின் நிர்வாகி ஹேமா சொல்லி பள்ளிக்குள் செல்ல விடாமல் திருப்பி அனுப்பிவிட்டார். இதனால் கடந்த ஆண்டு பள்ளிக்கு போகாமல் வீட்டிலேயே இருந்து விட்டார் லோகேஷ். இந்நிலையில் அவரை தேர்வு எழுத கூட அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பள்ளி நிர்வாகமானது பல மாணவர்களை இப்படி அவர்களின் கல்வியை பாழ்படுத்தி அவர்களது வாழ்க்கையை சூனியம் ஆக்கி உள்ளதும் குறிப்பிடத்தக்கது. சரி எங்களது டிசி மற்றும் மதிப்பெண் சான்றிதழ்களையாவது திரும்ப வழங்குமாறு கேட்டும் அதற்கும் பள்ளி நிர்வாகம் தர மறுத்து இழுத்தடித்து வருகின்றது. இதனால் பொறுத்து பொறுத்து பார்த்த லோகேஷ் தனது தந்தை சதீஷ்குமார் மற்றும் தாய் மற்றும் உறவினர்களுடன் வேலூர் மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸிடம் நேரில் சென்று புகார் மனுவை அளித்துள்ளார். இந்த புகார் மனுவை பெற்றுக் கொண்ட வேலூர் மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ உரிய விசாரணை நடத்தி லோகேஷூக்கு சேர வேண்டிய மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றை பெற்று தருவதாக உறுதி அளித்துள்ளார். இப்படி கல்வியை பாழ் செய்யும் கல்வி நிறுவனங்கள் மீது கல்வித் துறை உரிய சட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பது பாதிக்கப்பட்டவர்களின் எதிர்பார்ப்பாக மாறி உள்ளது. குறிப்பாக ஓராண்டு என்பது ஒரு வயது போகிறது, ஒரு கல்வியாண்டும் வீணாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு பிரம்மாஸ் பள்ளி நிர்வாகம் உரிய முறையில் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட மாணவன் லோகேஷ் குடும்பத்தினரின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறியுள்ளது. இதுபோன்று மற்ற எந்த மாணவ, மாணவிக்கும் இது போன்ற பாதிப்புகள் நடைபெறக்கூடாது என்பதற்காக இது ஒரு முன்னுதாரணமாக அமைய வேண்டும் என்பதே அவர்களது ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறியுள்ளது. பிரம்மாஸ் பள்ளி மீது வேலூர் மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசு கல்வித்துறையும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது நடவடிக்கையை அரசு எடுக்குமா? மாவட்ட நிர்வாகம் எடுக்குமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Leave a Reply