வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி இளநிலை மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா: ஆட்சியர் பங்கேற்பு! !வேலூர், ஜூலை 23-வேலூர் மாவட்டம்,அடுக்கம்பாறை பகுதியிலுள்ளஅரசு வேலூர் மருத்துவக் கல்லூரி கலையரங்கில் ஜூலை.22-அன்று 16-வது இளநிலை மருத்துவ பட்டப்படிப்பு முடித்த மாணவ,மாணவிகளுக்குபட்டமளிப்பு விழா நடைபெற்றது.அதில், மாவட்ட ஆட்சியர்.பி.எஸ்.லீலா அலெக்ஸ் கலந்து கொண்டு மாணவ,மாணவிகளுக்கு பட்டம் மற்றும் சான்றிதழ்களைஅளித்து வாழ்த்தினார்.அதில், சட்டமன்ற உறுப்பினர்கள் த.வேலழகன்(அணைக்கட்டு), மரு.ம.சுதாகர்(காட்பாடி), ஏ.தென்றல்குமார்(கீ.வ.குப்பம்), க.சிந்து(குடியாத்தம்), எம்.சுகுமார்(ஆற்காடு) ஆகியோரும், அரசு வேலூர் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர்.எம்.ரோகிணிதேவி, துணை முதல்வர்.கௌரிவெலிகண்டலா, மருத்துவ கண்காணிப்பாளர்.ந.ரதிதிலகம், குடியிருப்பு மருத்துவர் துரை.ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.