தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026 வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் தபால் வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வே.ரா. சுப்புலட்சுமி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடந்தது. இப் பயிற்சியில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் மா. சிவசுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் குணசேகரன் (பொது) ,பாஸ்கரன் (தேர்தல்), அருண் (நிலம்) தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மாறன் (காட்பாடி) ஏ. செந்தில்குமார் (வேலூர்), ஆர். குணசேகரன் (அணைக்கட்டு), எஸ். சரவணன் (கே. வி. குப்பம்), செல்வி எஸ். சுபலட்சுமி (குடியாத்தம்), தேர்தல் வட்டாட்சியர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சேர்க்காடு திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தில் 2026-2027 ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை தொடக்கம்!வேலூர், மே 1-வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தில் 2026-2027 ஆம் கல்வி ஆண்டிற்கான முதுநிலை, இளநிலை மற்றும் பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக சமர்ப்பிக்கலாம் என பல்கலைக்கழக பதிவாளர் செந்தில் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.கீழ்க்கண்ட துறைகளில் உள்ள முதுநிலை படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வுகள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். எம்.ஏ. (தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம்)எம்.காம், எம்.பி.ஏ,எம்.எஸ்.சி. (விலங்கியல், வேதியியல், கணிதவியல், உயிரி தொழில்நுட்பவியல், கணினி அறிவியல், இயற்பியல், சுற்றுச்சூழல் அறிவியல், நுண்ணுயிரியல்)முதுகலை நூலகம் மற்றும் தகவல் அறிவியல்நேரடிச் சேர்க்கை நடைபெறும் படிப்புகள்கீழ்க்காணும் படிப்புகளுக்கு நேரடிச் சேர்க்கை (Direct Admission) நடைபெறும்.5 ஆண்டு ஒருங்கிணைந்த முதுநிலைப் படிப்புகள் தமிழ், ஆங்கிலம், பயன்பாட்டு பொருளியல், எம்.காம், பயன்பாட்டு விலங்கியல், பயன்பாட்டு வேதியியல், கணிதவியல், தரவு அறிவியல் மற்றும் பெரிய தரவு பகுப்பாய்வு, தகவல் தொழில்நுட்பம், இயற்பியல் மற்றும் நுண்ணுயிரியல்.3 ஆண்டு இளநிலைப் படிப்புகள் பி.எஸ்.சி. கணினி அறிவியல் மற்றும் பி.எஸ்.சி. தரவு அறிவியல்.1 ஆண்டு முதுகலைப் பட்டயப் படிப்புகள் தொடர்பு வழி ஆங்கிலம், தொழிலக வேதியியல், டெக்ஸ்டைல் மற்றும் பாலிமர் வேதியியல், உயிர் உரத்தொழில் நுட்பவியல், நோய் அறிதல் நுட்பங்கள், தொழில் துறை பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் தணிக்கை.தகுதியுள்ள மாணவர்கள் பல்கலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tvu.edu.in வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தைப் பார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு திருவள்ளுவர் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் வேலை தள பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான உலக தினம் கொண்டாட்டம்!வேலூர்,ஏப்.30-வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி (சிஎம்சி) நிறுவனத்தின் தொழில்சார் ஆரோக்கிய பிரிவு சார்பில் கடந்த 28ஆம் தேதி வேலைத்தள பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான உலக தினத்தை நினைவு கூர்ந்தது. இந்த ஆண்டின் கருப்பொருள் ‘ஒலி அபாயம் :விழிப்புணர்வை தடுப்பு’ என்பதாகும். ஒளியின் பல்வேறு அம்சங்கள், அதன் மூலாதாரங்கள், கட்டுப்பாடு, உடல் நல பாதிப்புகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உரைகள் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக ஐ .சி. எம். ஆர். தெற்கு மண்டல தொழில்சார் சுகாதார மையத்தின் பொறுப்பாளர் டாக்டர் பி.ரவிச்சந்திரன், மற்றும் சிஎம்சி இயக்குநர் டாக்டர் பிஜு ஜார்ஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.நிறுவனத்தின் தொழில்சார் ஆரோக்கிய பிரிவால் எழுதப்பட்ட சுகாதார பணியாளர்களுக்கான தொழிலாளர் ஆரோக்கியத்தின் அடிப்படைகள் என்ற புத்தகம் இந்நிகழ்வில் வெளியிடப்பட்டது. பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கான தலைப்பு குறித்து போஸ்டர் மற்றும் வாசகம் எழுதும் போட்டிகள் நடத்தப்பட்டன. வேலை தொடர்பான மற்றும் வேலை தொடர்பற்ற சூழல்களில் ஒலியின் தீங்கான விளைவுகள் குறித்து பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் வாரம் முழுவதும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. வேலை தளத்தில் அதிகமாக காணப்படும் அபாயகரமான காரணிகளில் முக்கியமானது ஒலி ஆகும். ஒலியால் ஏற்படும் செவித்திறன் இழப்பு என்பது மிகவும் பொதுவான தொழில் சார்ந்த நோய்களில் ஒன்றாகும். சுகாதார சேவை அமைப்புகளில் ஒலி என்பது பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகும் தொழில் சார் அபாயம் ஆகும். மருத்துவமனைகளில் உள்ள பல செயல்களும், உபகரணங்களும் சுகாதாரப் பணியாளர்களை இந்த அபாயத்திற்கு உள்ளாக்குகின்றன. அதிக அளவிலான ஒலிக்கு உட்படுவது செவித்திறன் இழப்பை ஏற்படுத்துவதோடு இதய துடிப்பு அதிகரிப்பு, ரத்த அழுத்தம் உயர்வு போன்ற மன அழுத்தம், பதட்டம் மற்றும் தூக்கமின்மை போன்ற அறிகுறிகளும் ஏற்படலாம். உருவாக்கப்பட்டுள்ள இந்த விழிப்புணர்வு நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்களின் ஆரோக்கியமும், பாதுகாப்பும் மேம்பட உதவும் என நம்பப்படுகிறது. இவ்வாறு இந்த நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேலூர் சிஎம்சி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் துரை ஜாஸ்பர் செய்திருந்தார்.

காட்பாடி திருவலம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப சேமிப்பு கிடங்கில் 6 பாமாயில் பெட்டிகள் திருடப்பட்டதாக டிரைவர்கள் சூப்பிரண்டிடம் வாக்குவாதம்!வேலூர், ஏப். 30-வேலூர் மாவட்டம் ,காட்பாடி வட்டம், திருவலத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப சேமிப்பு கிடங்கு உள்ளது. இந்த கிடங்கில் அவ்வப்போது புதிய சூப்பிரண்டுகள் பணியமர்த்தப்பட்டு பணியாற்றி வருகின்றனர். ஆனால் இவர்கள் இந்த சேமிப்பு கிடங்கில் இருந்து ரேஷன் கடைகளுக்குச் செல்லும் பொருட்களை திருடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர் என்று டிரைவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. லாரி டிரைவர்கள் லோடு ஏற்றிக்கொண்டு செல்லும்போது துவரம் பருப்பு, சர்க்கரை, அரிசி மற்றும் பாமாயில் எடை குறைவாகவும், எண்ணிக்கை குறைவாகவும் (பாமாயில் பெட்டிகள்) மாயமாவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு லாரியில் ஏற்றப்பட்ட லோடில் 6 பாமாயில் பெட்டிகள் மாயமானதாக டிரைவர்கள் சூப்பிரண்டிடம் கடும் வாக்குவாதத்தில் நேற்று பிற்பகல் 2 மணி அளவில் ஈடுபட்டனர். அப்பொழுது இதெல்லாம் சர்வ சாதாரணமாக நடந்து கொண்டுதான் உள்ளது. இதை யாரும் தடுக்க முடியாது என்று சூப்பிரண்டென்ட் லாரி டிரைவர்களிடம் கூறுகிறார். இதை கேட்ட லாரி டிரைவர்கள் ரேஷன் கடை விற்பனையாளர்கள் எங்களிடம் இருப்பு குறைவாக உள்ளது என்று அவர்கள் எங்களை கேவலமாக திட்டுகின்றனர் என்று கூறினார். இதில் இருந்தே கடும் வாக்குவாதம் தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. இதற்கு பிறகு நிலைமை விபரீதம் ஆவதை உணர்ந்த சூப்பிரண்டென்ட் பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று அனைவரையும் அனுப்பிவிட்டு ஒன்றும் அறியாத நபர் போல தனது இருக்கையில் திருதிருவென அமர்ந்து கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி அரசு ஏழை ,எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு வழங்க அளிக்கும் ரேஷன் பொருட்களை திருடி விற்பனை செய்து இவர்கள் பிழைப்பு நடத்தி வருவது வெட்ட வெளிச்சமாக தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆக மொத்தத்தில் இந்த திருவலம் கிடங்கில் இருந்து அனுப்பப்படும் உணவு பொருள்கள் திருடப்படுவது உறுதிபட தெரியவந்துள்ளது. ஆதலால் லாரி டிரைவர்களை உரிய முறையில் விசாரித்தால் இந்த உண்மை வெளிச்சத்திற்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. இதை மாவட்ட நிர்வாகம் உடனடியாக மேற்கொண்டு தவறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது போல இவர்களது திரை மறைவு வேலைகள் இன்று முச்சந்திக்கு வந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. ஆக மொத்தத்தில் தவறு செய்பவர்கள் தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் .அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் ஓட்டுமொத்த எதிர்பார்ப்பாகும். மாவட்ட நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

“தனியார் பள்ளிக்கூடத்திற்கு, அங்கீகாரத்தைப் புதுப்பித்து சான்றிதழ் வழங்க, ரூ.25,000/- லஞ்சம் பெற்ற, மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளர் கைது!வேலூர், ஏப். 30-வேலுார் மாவட்டம், காட்பாடி, விருதம்பட்டில், தனியார் பள்ளிக்கூடங்களுக்கான மாவட்ட கல்வி அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு, வேலூர் தொரப்பாடியைச் சேர்ந்த செந்தில்குமார்(வயது 56), என்பவர், அலுவலக கண்காணிப்பாளராக பணியாற்றினார். இவர், தற்போது லஞ்சக்கையூட்டுப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் DVAC – Directorate of Vigilance and Anti-Corruption ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கே.வி. குப்பம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உள்ளடங்கிய பரதராமி பகுதியிலுள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தின் தாளாளரிடம், பள்ளிக்கான அங்கீகாரச் சான்றிதழ் (License Recognition Certificate) புதுப்பித்து வழங்க, 1.லட்சம் ரூபாய் லஞ்சக்கையூட்டுக் கேட்டுள்ளார்.

கோவை மாவட்டம் ஸ்மார்ட் சிட்டியாக மாற்றப்பட்டு தற்போது உலகெங்கும் வியந்து பார்க்கும் ஒரு நகரமாக கோவை விளங்குகிறது இதில் பந்தய சாலை முக்கிய அங்கம் வகிக்கிறது இப்பகுதியில் பல்லாயிரம் மக்கள் தினந்தோறும் நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள் அதே வேலையில் அங்கே இளைப்பாற பல்வேறு சாதனகளும் இருக்கிறது இந்த இடத்தில் மக்களுக்கு சிரமம் கொடுக்கும் வகையில் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஆங்காங்கே கிடைக்கும் இடங்களில் எல்லாம் நோ பார்க்கிங்கில் தங்களது வாகனங்களை அத்துமீறி நிறுத்தி விட்டு சென்று விடுகிறார்கள் இதனால் நடை பயிற்சிக்கு வரும் பொது மக்களுக்கு மிகுந்த மன உளைச்சல்கள் ஏற்படுத்துகின்றனர் இதை கண்டிக்கும் வகையில் காவல்துறையினர் அங்கே வந்து அத்துமீறி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து இடையூறு செய்யும் இது போன்ற வாகன ஓட்டிகளுக்கு அபராதம் மூலம் நல்ல பாடத்தினை கற்றுத் தருகிறார்கள் இதை அங்கே வரும் மக்கள் காவல்துறையினரை பாராட்டி உள்ளனர்..

திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!வேலூர், ஏப். 29-சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் இதுகுறித்து விடுத்துள்ள அறிவிப்பு: வரும் 30ம் தேதி இரவு 9 மணி முதல் மே 1ம் தேதி இரவு 11.07 மணி வரை திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்படும்.கிளாம்பாக்கத்தில் இருந்து 30ம் தேதி 548 பேருந்துகளும், மே 1ம் தேதி 565 பேருந்துகளும் இயக்கம்.மாதவரத்தில் இருந்து 30ம் தேதி 186, மே 1ம் தேதி 174 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.அதேபோன்றே வேலூர், விழுப்புரம், திருப்பத்தூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

வி.கோட்டா (வேங்கடகிரி கோட்டா) ஆந்திர ஜோதி நிருபர் கத்தியால் வெட்டி கொலை – மற்றொரு நிருபருக்குப் பலத்த காயம்!வேலூர், ஏப். 29-ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், வி.கோட்டாவில் இன்று காலை அரங்கேறியுள்ள ஒரு கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திரஜோதி நாளிதழின் நிருபர் ஜெகன்மோகன் ரெட்டி மர்ம நபர்களால் கத்தியால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.சித்தூர் மாவட்டம், வி. கோட்டா ஆந்திர ஜோதி பத்திரிகையின் செய்தியாளர் ஜெகன் மோகன் ரெட்டி நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத கும்பல் அவரைப் பின் தொடர்ந்து வந்து கத்திகளால் சரமாரியாகத் தாக்கியது. இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர் அதிக ரத்தப்போக்கு காரணமாகச் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.அவருடன் இருந்த பிரஜாசக்தி பத்திரிகை நிருபரும் தாக்குதலைத் தடுக்க முயன்ற போது அவருக்கும் அருவாள் வெட்டு விழுந்தது. இதில் காயமடைந்த அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர். ஜெகன்மோகன் ரெட்டியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இக்கொலைக்கான காரணம் குறித்துப் ஆந்திர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பட்டப்பகலில் பத்திரிகையாளர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பத்திரிகையாளர்கள் (ம) ஊடகவியலாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து (என்கவுண்டர்) கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று பத்திரிகையாளர் சங்கங்கள் ஆந்திர அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளன.இச்சம்பவத்தை கண்டித்து சித்தூரில் உள்ள பத்திரிகையாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் அதே போன்று மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் பத்திரிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.