லஞ்சம் கொடுக்க விரும்பாத தனியார் பள்ளிக்கூட தாளாளர், வேலூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் ஆய்வாளர் மைதிலியிடம் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், புகார் சம்மந்தமாக இரகசிய விசாரணை மேற்கொண்டதில் மாவட்ட கல்வி அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வரும் செந்தில்குமார் என்பவர், தனியார் பள்ளிக்கூட தாளாளரிடம் லஞ்சக்கையூட்டுக் கேட்டது குறித்து:
ரகசிய புலனாய்வு விசாரணை மேற்கொண்ட போது தனியார் பள்ளிக்கான அங்கீகாரம் புதுப்பித்து சான்றிதழ் வழங்கிட தனியார் பள்ளிக்கூட தாளாளரிடம் ரூ.1 லஞ்சம் லஞ்சம் கேட்டதும் பின்னர். முதல் தவணையாக ரூ.25,000/- கேட்டிருப்பது தெரியவந்தது. மேற்படி புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இரகசிய விசாரணையில் வேலூர் மாவட்ட தனியார் பள்ளிகள் கல்வி அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வரும் செந்தில்குமாரின் நடத்தை சர்ச்சைக்குரியது என்பதும், புகார்தாரருக்கும், லஞ்சக் கையூட்டுக் கேட்ட செந்தில்குமாருக்கும் தனிப்பட்ட முறையில் ஏதேனும் முன்விரோதம் உண்டா என்பது குறித்தும் மேற்கொள்ளப்பட்ட இரகசிய விசாரணையில் அவ்வாறு முன்விரோதம் எதுவுமில்லை என்பதும் தெரியவந்தது. பின்னர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல்துறையினரால் மேற்கொண்ட இரகசிய விசாரணையிலிருந்து கல்வி அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வரும் செந்தில்குமார் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய போதிய முகாந்திரம் இருப்பதாக தெரிய வந்ததால், தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை இயக்குநரகத்தில் வாய்மொழியான ஒப்புதல் பெற்று, 28.04.2026 நேற்று வேலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு குற்ற எண். 3/2026/AC/CB, u/s.7(a) of the Prevention of Corruption Act, 1988 as amended in 2018-ன் படி மேற்படி மாவட்ட தனியார் பள்ளிகள்: கல்வி அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வரும் செந்தில்குமார் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்தும், புகார்தாரருக்கு, நுண்ணறிவு பிரிவு காவல் துறையினர் கொடுத்த ஆலோசனையின் படி ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுக்களை புகார்தாரரான தனியார் பள்ளிக்கூட தாளாளரிடம் கொடுத்து லஞ்சம் கேட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளரிடம் கொண்டு சென்று கொடுக்கும்படி அறிவுறுத்தி அனுப்பிவைத்தனர். அவரை பின் தொடர்ந்து, அப்போது அங்கு மாறுவேடங்களில் மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல்துறையினரால், ரசாயன பொடி தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை லஞ்சமாக செந்தில்குமார் பெறும்போது, அவர் கையும், களவுமாகப் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் வேலூர் கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.











Leave a Reply