காஞ்சிபுரம், ஏப். 30 –
சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற உள்ள 11வது தேசிய கால்பந்தாட்ட போட்டிகளில் பங்கேற்க, காஞ்சிபுரம் ‘கோல்டன் எரா’ கால்பந்தாட்ட கிளப்பைச் சேர்ந்த இளம் வீரர்கள் புறப்பட்டுச் சென்றனர்.
காஞ்சிபுரத்தில் ‘கோல்டன் எரா’ கால்பந்தாட்ட கிளப் செயல்பட்டு வருகிறது. இந்த கிளப்பைச் சேர்ந்த பொறுப்பாளர்களான விக்னேஷ், கோகுல் ஆகியோர் மூலம், ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகளில் படித்து வரும் சிறுவர்களுக்கு கால்பந்தாட்ட பயிற்சிகளை வழங்கி வருகின்றனர். இதில், ஆர்வத்துடன் பயிற்சி பெறுபவர்கள், சிறந்த கால்பந்து விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
அந்த வகையில் ‘கோல்டன் எரா’ கிளப் மூலம் முழு பயிற்சி பெற்ற 11 வயதுக்குட்பட்ட கால்பந்தாட்ட வீரர்கள் – 17 வயதுக்குட்பட்ட கால்பந்தாட்ட வீரர்கள் பல்வேறு பயிற்சி ஆட்டத்திற்கு பிறகு 11வது தேசிய கால்பந்தாட்ட சாம்பியன்ஷிப் போட்டிகளில் விளையாட தேர்வாகி உள்ளனர். இவர்கள் காஞ்சிபுரம் சிஷா பப்ளிக் பள்ளியைச் சேர்ந்த 13 வீரர்கள், ‘கோல்டன் எரா’ கிளப்பைச் சேர்ந்த 7 வீரர்கள் இந்த 11வது தேசிய விளையாட்டு போட்டிகள், அடுத்த மாதம் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை சத்தீஸ்கர் மாநிலமான ராய்ப்பூரில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிகளில் பங்கேற்க மேற்கண்ட காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீரர்கள் நேற்று ஜெய்ப்பூருக்கு புறப்பட்டுச் சென்றனர்.
இந்த வீரர்களை, ‘கோல்டன் எரா,’ கால்பந்தாட்ட குழுவைச் சேர்ந்த வளர்ச்சி அமைப்பாளர் ஆஷிஷ், செயலாளர் மாருதி நந்தன், பணி செயலாளர் குஷால் இங்கோலே, ‘கோல்டன் எரா’ கால்பந்தாட்ட மேலாளர் விக்னேஷ், பயிற்சியாளர் கோகுல் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.













Leave a Reply