வேலூர், ஏப். 29-
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் வட்டம், லத்தேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி பணி நிறைவு பெற்றுள்ள கு.கார்த்திகேயனுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் கே.எ.குப்பன் தலைமை தாங்கினார். பெண்கள் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜெயா, முருகேசன், உதவித்தலைமையாசிரியர்கள் பி.சுமதி, எ.சிவக்குமார், எஸ்.ரகுபதி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.
ஓய்வுபெற்ற மாவட்டக்கல்வி அலுவலர் எஸ்.மகாலிங்கம், தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தின் தலைவர் செ.நா.ஜனார்த்தனன், துணைத்தலைவர் எ.ஜெயதேவரெட்டி, ஆர்.தாமோதரன், டி.என்.ஷோபா, ஜூனியர் ரெட்கிராஸ் அமைப்பின் மாவட்ட துணைத்தலைவர் எஸ்.எஸ்.சிவவடிவு, இணை அமைப்பாளர் எஸ்.ரகுபதி, பொருளாளர் க.குணசேகரன் தலைமையாசிரியர்கள் ஜங்காலப்பள்ளி-பி.சங்கர், கொசவன்புதூர்-ஜகன்நாதன், பனமடங்கி-வெங்கடேசன், கே.வி.குப்பம் ஆண்கள் பள்ளி தாண்டவமூர்த்தி, செஞ்சி- வி.எஸ்.ரவி உள்ளிட்ட பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி மேலாண்மைக்குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள், சால்வை அணிவித்து பாராட்டி பேசினர்.
ஓய்வு பெறும் தலைமையாசிரியர் கு.கார்த்திகேயன் ஏற்புரையாற்றினார்.
பள்ளியின் சார்பிலும் ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பிலும் நிர்வாகிகள் சால்வை, சந்தன மாலை, நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.
முடிவில் பள்ளி கணினி ஆசிரியர் எல்.குமணன் நன்றி கூறினார்.
விழாவில் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள், ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர்.












Leave a Reply