எனது இந்த நூலில் உலகத்துக்கே காய்கறிகள் இலவசம் என்கிற ஒரு முக்கியமான கட்டுரை இடம் பெற்றுள்ளது. மேலும் பெண்களின் பாதுகாப்பை பெண்களே எவ்வாறு உறுதிப்படுத்துவது? என்ற கட்டுரையும், ஜென்சி இளைஞர்களை சமூகத்திற்கு ஆக்கப்பூர்வமான பணியாற்ற கிராம விலையில்லா காய்கறி தோட்டங்கள் எவ்வாறு முக்கிய பங்காற்றுகின்றன என்பது பற்றிய முக்கியமான கட்டுரைகளும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.

அரசாங்கங்கள் பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய், 2000 ரூபாய் இலவசப் பணம் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றன.
ஆனால், குடும்பங்களின் வறுமையை ஒழிப்பதில் இந்த இலவச பணம் வழங்கும் திட்டம் வெற்றி பெறவில்லை. அது ஒரு மானிய திட்டமாகவே, ஒரு நுகர்வு திட்டமாகவே உள்ளது.
இந்த திட்டத்திற்கு மாற்றாக அரசாங்கங்கள் கிராம புறம்போக்கு நிலங்களில் மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கு கிராமத்துக்கு ஒரு காய்கறி தோட்டத்தை அமைத்துத் தந்தால் , அவர்கள் குடும்பங்களின் வறுமையையும், கிராமத்தின் உணவு வறுமையையும், இந்தியாவில் ஊட்டச்சத்து உணவு பற்றாக்குறை பிரச்சனையும் நிச்சயமாக ஒழித்துக் காட்டுவார்கள்.
50 குடும்பங்கள் கொண்ட ஒரு கிராமத்தில் வீணாக, தரிசாக கிடக்கும் கிராம புறம்போக்கு நிலங்களில் 30 முருங்கை மரங்களை நடவு செய்து வளர்த்தால் போதும். அந்த கிராமத்தில் உள்ள எல்லா குடும்பங்களும் முருங்கைக் கீரையில் வாழ்நாள் முழுவதும் விலையின்றி இலவசமாகவே தன்னிறைவு அடைய முடியும். அதேபோல, அந்த கிராமத் தோட்டத்தில் 30 பப்பாளி மரங்கள், 20 கொய்யா செடிகள், 10 மா மரங்கள் என மேலும் 60 செடிகளை மட்டுமே நடவு செய்து வளர்த்தால் போதும். அந்த கிராமத்தில் உள்ள 50 குடும்பங்களும் பப்பாளி பழங்கள், கொய்யாப்பழங்கள் மற்றும் மாம்பழங்களை விலையின்றி இலவசமாகவே பெற்று தன்னிறைவு அடைய முடியும்.
இதே போல, அந்த கிராமத் தோட்டத்தில் 50 பாகல் செடிகள் , 20 சுரை செடிகள், 20 பந்தல் அவரை செடிகள், 30 புடலஞ் செடிகளை , 30 பீர்க்கன் செடிகளை நடவு செய்து வளர்த்தால், அந்த கிராமத்தில் உள்ள எல்லா குடும்பங்களும் பாகற்காய், சுரைக்காய், அவரைக்காய், புடலங்காய் மற்றும் பீர்க்கன் காய்களை, தற்சார்பு உற்பத்தி மூலமே , விலை இன்றி இலவசமாகவே பெற்றுத் தன்னிறைவு அடைய முடியும்.
ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு ஊராட்சியிலும் 10 ஏக்கர் முதல் 100 ஏக்கர் வரை புறம்போக்கு நிலங்கள் வீணாக, தரிசாக கிடக்கின்றன இந்த புறம்போக்கு நிலங்களில் கிராம மக்கள் 200 முதல் 300 காய்கறி செடிகளை நடவு செய்து வளர்த்தாலே, 10 வகையான காய்கறிகளை, கீரைகளை, பழங்களை இலவசமாகவே பெற்றுப் பயன்பெற முடியும்.
இதற்கு அரசாங்கங்கள் பல லட்சம் கோடி ரூபாய் நிதியை செலவிடத் தேவையில்லை. மாநில அரசாங்கங்களும், மத்திய அரசாங்கமும் ஒரே ஒரு அறிவிப்பைச் செய்தால் போதுமானது. கிராம புறம்போக்கு நிலங்களையும் போதுமான தண்ணீர் வசதியையும் மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கு செய்து தருகிறோம் என அரசாங்கங்கள் ஒரே ஒரு அறிவிப்பைச் செய்தால் போதும். மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் கிராம கிராம புறம்போக்கு நிலங்களை கிராம காய்கறி காய்கறி சோலைகளாக, கிராம பழத் தோட்டங்களாக உருவாக்கிக் காட்டுவார்கள்.ஊட்டச்சத்துணவுத் தன்னிறைவு தமிழ்நாட்டை இந்தியாவை உருவாக்கி சாதனை படைத்திடுவார்கள்.
இந்தியா முழுவதும் ஒரு கோடியே 17 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மகளிர் சுய உதவிக் குழுக்களில் 11 கோடி பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அதாவது, 11 கோடி குடும்பங்கள் உறுப்பினர்களாக உள்ளன. உலகம் முழுவதும் 150 நாடுகளுக்கும் மேற்பட்ட நாடுகளில் 5 கோடி மகளிர் சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. எனவே மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஒரு கிராமத்தில் மட்டுமல்ல, ஒரு நாட்டில் மட்டுமல்ல, கிராம காய்கறி தோட்டங்களின் மூலம் உலகத்துக்கே காய்கறிகளை இலவசமாக முடியும்.
பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ,2,000 ரூபாய் இலவச பணம் இந்த உழைப்பும் இன்றி சும்மா தானே அரசாங்கம் தருகிறது என்று ஏளனமாக பார்க்கும் ஒரு தவறான சமூக கண்ணோட்டமும் நிலவுகிறது.
இது வெறுமனே ஒரு நுகர்வு திட்டம் தான். ஒரு மானிய திட்டமாகத் தான் உள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் கிராம காய்கறி தோட்டங்களில் வாரத்துக்கு ஒரு மணி நேரம் உழைப்பை செலுத்தும் பெண்களுக்கு மட்டுமே மாதத்திற்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அரசாங்கங்கள் என்னிடம் நிபந்தனை விதித்தால் முன் நிபந்தனை உதித்தால் விதிப்பதன் மூலம் இந்த இலவச பணத்திட்டத்தை ஒரு உற்பத்தி திட்டமாக கிராம சொத்துக்களை உருவாக்கும் திட்டமாக மாற்ற முடியும் பெண்களுக்கும் ஒரு கவுரவத்தை உருவாக்கித் தர முடியும் அவர்கள் நாங்கள் மாதத்திற்கு ஆயிரம் ரூபாயை சும்மா பெறவில்லை காய்கறி தோட்டங்களை உற்பத்தி செய்து இலவச காய்கறிகளை உருவாக்குவதன் மூலமே கிராம சொத்துக்களை உருவாக்குவதன் மூலமே மாதத்திற்கு ஆயிரம் ரூபாய் பெரிகிறோம் என்ற சமூக மதிப்பையும் பெண்கள் பெற முடியும் பெற முடியும்.
மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் வெறுமனே வங்கிகளில் கடன் வாங்கி ,கடனை வெற்றிகரமாக திருப்பி செலுத்திக் கொண்டுதான் இருப்பார்கள். அவர்களால் தொழில்களில் வெற்றி பெற முடியாது என்கிற ஒரு தவறான கண்ணோட்டம் சமூகத்தில் நிலவுகிறது. ஆனால் புறம்போக்கு நிலங்கள் மற்றும் தண்ணீர் வசதியை மகளிர் சுய உதவிக் குழு பெண்களிடம் ஒப்படைத்தால் , அவர்கள் கிராம விலையில்லா காய்கறி தோட்டங்களை உருவாக்கி உலகத்துக்கே காய்கறிகளை இலவசமாகிக் காட்டுவார்கள். ஊட்டச்சத்துணவு தன்னிறைவு தமிழ்நாட்டை , இந்தியாவை, ஊட்டச்சத்துணவு தன்னிறைவு உலகத்தை உருவாக்கிக் காட்டுவார்கள் .அதுவும், கிராம காய்கறி செடிகளை நடவு செய்த 6 மாதத்தில் நிகழ்த்திக் காட்டுவார்கள்.
இது குறித்து எனது “எல்லாருக்கும் எல்லாமும் – மகளிர் சுய உதவிக் குழுக்களின் புதிய படிக்கட்டு” என்ற இந்த நூலில் விரிவாக விளக்கி உள்ளேன் என்றார்.










Leave a Reply