அசனமாப்பேட்டையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரிசெய்யாறு ‘வி தி லீடர்ஸ்’ கட்சியினர் சப் – கலெக்டரிடம் புகார் மனு !செய்யாறு, ஜூலை 21 -செய்யாறு அடுத்த அசனமாப் பேட்டையில் பொதுமக்களுக்கும் – கிராம மக்களுக்கும் இடையூறாக இருந்து வரும் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி வி தி லீடர்ஸ் கட்சியினர் செய்யாறு சப் – கலெக்டரிடம் புகார் மனுவை கொடுத்தனர்.செய்யாறு சட்டசபை தொகுதிக்கு உட்பட்டது ‘தி வி லீடர்ஸ்’ கட்சியைச் சேர்ந்த பொறுப்பாளர்களான வெங்கடேசன், ரமேஷ், சரவணன், சக்தி நாராயணன், அருள், ஏ.சி.கே.பிரபாகர் ஆகியோர் ஒன்றிணைந்து செய்யாறு சப் – கலெக்டர் அம்பிகா ஜெயினிடம் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது;’செய்யாறு அடுத்த அசனமாப் பேட்டை கிராமம். இங்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மேல்நிலைப் பள்ளி, காய்கனி, பழக்கடைகள் ஆகியவை இங்குள்ள அசனமாப் பேட்டை கூட்டு சாலையில் தினமும் 1000க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்து செல்லும் பகுதியாக இருந்து வருகிறது. காஞ்சிபுரம், செய்யாறு, வேலூர், ஆற்காடு, கலவை ஆகிய வழித் தடங்களில் இயக்கப்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் அனைத்தும் மேற்கண்ட கூட்டுச் சாலையில் நின்று செல்கின்றன.இதனால், அசனமாப்பேட்டை கூட்டு சாலை எந்த நேரமும் ‘பிசியாகவே’ இருந்து வருகிறது. ஆரம்ப சுகாதாரத்திற்கு வரும் நோயாளிகள் பள்ளிக்கு செல்லும் மாணவ – மாணவிகள் இந்தக் கூட்டு சாடையை தான் தினமும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த கூட்டு சாலையின் அருகிலேயே அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இரண்டு கட்டடங்களில் இயங்கி வரும் இந்த டாஸ்மாக் கடையில் நண்பகல் 12 மணி முதல் – இரவு வரை குடிமகன்கள் மது பாட்டிலை வாங்க முந்திச் செல்லும் நிலை தொடர்கிறது.இந்த குடிமகன்கள் அங்குள்ள நெடுஞ்சாலையின் அருகாமையிலும், புளிய மரத்தின் கீழே அமர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மதுவை அருந்துகின்றனர். பள்ளி மாணவர்கள், பொதுமக்கள், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் இந்த டாஸ்மாக் கடையை கடந்து செல்ல மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.போலீசாரும் இந்தப் பக்கம் வருவதே கிடையாது. எனவே, அசனமாப்பேட்டையில் பொது மக்களுக்கு இடையூறாக இருந்து வரும் டாஸ்மாக் கடையை அகற்ற உத்தரவிட வேண்டும்’ இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.’வி தி லீடர்ஸ்’ கட்சியைச் சேர்ந்த துளசி ராஜன், கோவிந்தராஜ், சந்திசேகர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் மனு அளித்தவர் களுடன் உடனிருந்தனர்.

புதியதாக பொறுப்பேற்ற குடியாத்தம் கோட்டாட்சியருக்கு வாழ்த்து தெரிவித்த புதிய நீதி கட்சி நிர்வாகி எஸ்.ரமேஷ்!வேலூர்,ஜூலை 22-வேலூர் மாவட்டம், குடியாத்தம் கோட்டாட்சியராக புதியதாக பொறுப்பேற்றுள்ள செந்தில்குமாரை, புதிய நீதி கட்சி குடியாத்தம் நகர செயலாளரும், கைத்தறி காவலருமான எஸ். ரமேஷ் நேரில் சந்தித்து, சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி, மனமார்ந்த தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.அப்போது, புதிய பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டு, குடியாத்தம் கோட்டத்திற்குட்பட்ட பொதுமக்களின் தேவைகளை விரைந்து நிறைவேற்றி, மக்கள் நலனுக்கான சிறந்த நிர்வாகத்தை வழங்க வேண்டும் என தனது வாழ்த்துகளையும், நல்வாழ்த்துகளையும், வேண்டுகோளையும் தெரிவித்தார்.புதிய பொறுப்பை ஏற்றுள்ள கோட்டாட்சியர் செந்தில்குமாருக்கு பல்வேறு சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காமராஜரின் 124வது பிறந்த நாள் விழா மற்றும் லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் இயக்க தொடக்க விழா பொதுக்கூட்டம்!வேலூர், ஜூலை 17-பெருந்தலைவர் காமராஜரின் 124 வது பிறந்த நாள் விழா மற்றும் “லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்” இயக்க தொடக்க விழா பொதுக்கூட்டம் (15.07.2026) புதன்கிழமை மாலை குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரில் நடைப்பெற்றது.நிகழ்விற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர், தொண்டர்களின் தளபதி ப. மாணிக்கம் தாகூர் தலைமை தாங்கி விழாப் பேருரை நிகழ்த்தினார்.. மாவட்டத் தலைவர்கள் திருப்பத்தூர் விஜய் இளஞ்செழியன், வேலூர் மாநகரம் வாஹித் பாஷா, ராணிப்பேட்டை நரேஷ் குமார், திருவண்ணாமலை வடக்கு பொன்னையன், திருவண்ணாமலை தெற்கு குணசேகரன், கிருஷ்ணகிரி ரகு, வேலூர் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் கிருஷ்ணவேணி ஜலந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.சுரேஷ்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார்.நிகழ்வில் உயர்கல்வித் துறை அமைச்சர் பி. விஸ்வநாதன், சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ். ராஜேஷ் குமார், கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய். வசந்த் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், முன்னாள் மாவட்ட தலைவர்கள், துணை அமைப்புகளின் மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் விழா ஒருங்கிணைப்பாளர் செங்கம் ஜி.குமார் நன்றியுரை ஆற்றினார்.நிகழ்வில் குடியாத்தம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் டாக்டர். நவீன் பிரபு, லாலா லஜபதி, பேரணாம்பட்டு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகிப் மற்றும்வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் M.வீராங்கன் ,S.சங்கர், P. செல்வக்குமார் ,D.ஜோதி கணேசன் ,S.K.தனசேகரன், G.ஆரோன், G.K.ஜகந்நாத ரெட்டி, A.N.சேகரன், C.K.நித்யானந்தம், K.விஜயகுமார், M.தாண்டவமூர்த்தி, பள்ளிகொண்டா பேரூர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் Z.சிக்கந்தர், வேலூர் மாநகர மண்டல தலைவர் அரியூர் சோமு, மாவட்ட பொருளாளர் A.இலியாஸ் பாஷா, மாவட்டத் துணைத் தலைவர்கள் M.R. தேவகிராணி ராஜேந்திரன், T.K.நீலகண்டன், G.விஜயேந்திரன், M.காமராஜ், B.குபேந்திரன், துரை.முருகேசன்,P.சேகரன், G.முஜாமில் அஹ்மத், மாவட்ட பொதுச் செயலாளர்கள் A.வாசு, செங்குட்டுவன், பாஸ்கரன், இர்ஷாத் அஹ்மத் சரவணன், தொழிலதிபர் பாரத் நவீன்குமார், அன்பரசி, உஷாராணி,மாவட்ட செயலாளர்கள் M.உவைஸ் அஹ்மத், S.தமிழரசன், K.E.சரத்சந்தர், M.விஜயகுமார், C.முனுசாமி, நூர் அலி. K.மாசிலாமணி, A.ராணி, K K.சத்தியமூர்த்தி, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் NMD.விக்ரம், மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் கோமதி குமரேசன், மாவட்ட எஸ்ஸி பிரிவு தலைவர் A.R. அன்பரசன், மாவட்ட ஓபிசி பிரிவு தலைவர் R.ராகேஷ், மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு தலைவர் நவாலி தாஹீர், மாவட்ட RGPRS தலைவர் D.ஆனந்தவேல் மாவட்ட மனித உரிமை பிரிவு தலைவர் M.K.யுவராஜ், மாவட்ட ஊடக பிரிவு தலைவர் ஆம்புலன்ஸ் S.ராஜேஷ், மாவட்ட சமூக ஊடக பிரிவு தலைவர் A.நவீன்குமார், மாவட்ட நெசவாளரணி தலைவர் G.ஜெயவேலு, மாநில எஸ்ஸி பிரிவு பொதுச் செயலாளர்கள் சுப்பிரமணி, சுரேஷ், செயலாளர் காத்தவராயன், மாநில ஓபிசி பிரிவு துணைத் தலைவர் ஜலேந்திரன், பொதுச் செயலாளர் சுனில்மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட 7000 க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ காட்பாடி பகுதியில் ஆட்சியர் லீலா அலெக்ஸ் ஆய்வு!வேலூர், ஜூலை 16-வேலூர் மாவட்டம், காட்பாடி பகுதியில் ” உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் காட்பாடி உழவர் சந்தையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் ஆய்வு மேற்கொண்டார்.காட்பாடி உழவர் சந்தையில் தாயுள்ளத்தோடு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார் வேலூர் மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ். மாவட்ட ஆட்சியரிடம் தங்களுக்கு தினமும் ஏற்படும் அசௌகரியங்களை உழவர் சந்தை யில் கடை வைத்துள்ள மூதாட்டி விளக்கி கூறினார். மற்றபடி உழவர் சந்தையில் எவ்விதமான குறையும் இல்லை என்று கூறினார். கழிவறைகள் மட்டும் சுத்தமான நிலையில் இல்லை என்று உழவர் சந்தை வியாபாரிகள் தெரிவித்தனர். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் தெரிவித்தார். நுகர்வோர் தரப்பில் ஏதாவது கருத்துக்கள் குறைகள் உள்ளனவா என்று கேட்டறிந்தார் மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ். ஆட்சியருடன் மாவட்ட ஆட்சியருடன் அரசு அலுவலர்கள் உடன் வந்தனர்.

பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ள விஏஓ மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?வேலூர், ஜூலை 16-வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டத்தில் வண்டறந்தாங்கல் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார் இளங்கோ. இவர் பத்து ரூபாய் வட்டிக்கு ஆசைப்பட்டு பல கோடியை தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார் என்று தெரிய வந்துள்ளது. இவர் காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்துக்கும், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கும் ஏன் சக கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் இந்த தகவல் தெரிந்தும் இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் இவர் மீது துறை ரீதியாக எடுக்கவில்லை. எந்த விசாரணையும் செய்யாதது ஏன்? என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் சந்தேகத்துடன் பேசி வருகிறார்கள். இதைப் பற்றி யாராவது பொதுமக்கள் சென்று கிராம நிர்வாக அலுவலர் இளங்கோவிடம் நேரில் கேட்டால் போதும் நான் காவல்துறையில் பணிபுரிந்தவன். என்னை யாரும் ஆட்டவோ, அசைக்கவோ முடியாது என்று மார்தட்டி கொண்டு தைரியமாக உலா வருகிறார். இவ்வளவு நாள் தாமதம் செய்தது போதும். மாவட்ட நிர்வாகம் வீறுகொண்டு எழுந்து விஏஓ இளங்கோ மீது அந்த பல கோடி ரூபாய் எங்கிருந்து வந்தது? எப்படி வந்தது? என்று உரிய விசாரணை செய்யுமா? என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். விசாரணை யில் அது உண்மை என்று தெரியவந்தால் இளங்கோவை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் வலுப்பெற்று வருகிறது.