பணியிடை மாற்றம் என்ற பெயரில் வெள்ளி திரை மிஞ்சும் அளவிற்கு ஊராட்சி ஒன்றியங்களில் நாடகங்கள் அரங்கேற்றம்.

கோவை மாவட்டம் ஊராட்சி ஒன்றியங்களில் பல வருடங்களாக ஒரே ஊராட்சியில் பணிபுரியும் செயலர்களை பணியிடை மாற்றம் என்ற பெயரில் ஒரே ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் பணியிடை மாற்றம் செய்கிறார்கள். பொதுவாக ஒரு அரசு அலுவலர் தொடர்ச்சியாக ஒரே அலுவலகத்தில் மூன்று வருடங்களுக்கு மேல் பணி செய்து வந்தால் அவர்களை வெவ்வேறு ஊராட்சிகளில் மாற்ற வேண்டும் என்று சொல்லப்படுகிறது, அதே வேலையில் ஒரே ஊராட்சியில் பணி புரிவதால் பலவிதமான முறைகேடுகளில் ஈடுபட்டு சொத்துக்கள் குவித்து வருகிறார்கள் என்ற பொதுவான குற்றச்சாட்டு எல்லா ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்களின் பொதுவான குற்றச்சாட்டாக இருந்து வருகிறது, இதுபோல் பெரியநாய்க்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரியும் பல ஊராட்சி செயலாளர்கள் குறிப்பாக குருடம்பாளையம், சோமியம்பாளையம், சின்ன தடாகம், பன்னிமடை, நஞ்சுண்டாபுரம், அசோகபுரம் போன்ற ஊராட்சிகளில் ஏற்கனவே இதே ஒன்றியத்தில் பணிபுரிந்த ஊராட்சி செயலளர்களை பணியிட மாற்றம் என்ற பெயரில் ஒரே ஒன்றியத்திற்குள் மாற்றிக் கொள்கிறார்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்த ஒரு மாற்றமும் நிகழவில்லை என்ற நிலையில் தற்போது நேர்மையாக ஆட்சி செய்வோம் என்று வந்திருக்கின்ற தற்போதைய த.வெ.க. ஆட்சியிலாவது தமிழக முதல்வர் நேரடியாக தலையிட்டு இந்த குளறுபிடி நாடகங்களை முற்றிலும் மாற்றுவாரா என்ற கேள்விகளும் மக்களின் மனதில் உள்ளது. கண்துடைப்பு நாடகம் போல் அரங்கேறி வரும் இந்த பணியிடம் மாற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கோவை மாவட்ட ஆட்சியரின் தலைமையின் கீழ் பணி புரியும் ஊராட்சிகளின் உதவி இயக்குனர், வட்டார வளர்ச்சி அலுவலருக்கும் எங்கெல்லாம் தவறுகள் நடந்துள்ளது என்று ஆராய்ந்து இவர்களின் கீழ் பணி புரியும் ஊராட்சி செயலர்களை கண்காணித்து தற்போது உள்ள ஊராட்சிகளில் இருந்து வெவ்வேறு மாவட்டங்களுக்கு மாற்றினால் நல்லது நடக்க வாய்ப்புள்ளதாகவும் ஊழல்கள் முற்றிலும் ஒளிந்து விடும் என்று கோவை மாவட்ட ஆட்சியருக்கு சமூக ஆர்வலர் கிருஷ்ணகுமார் மனு அளித்துள்ளார்.