
வேலூர் மாநகராட்சியில் நடந்த மாமன்ற கூட்டத்தில் மேயர் ,துணை மேயர் நேருக்கு நேர் மோதல்!வேலூர்,ஜூன் 20-வேலூர் மாநகராட்சியில் நடந்த மாமன்ற கூட்டத்தில் மேயர் சுஜாதா ஆனந்தகுமார் மற்றும் துணை மேயர் சுனில் குமார் நேருக்கு நேர் கடுமையாக மோதிக்கொண்டனர். இதனால் கூட்டத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது .இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அதிமுகவினர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் படத்தை வைக்க வேண்டும் என்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மேலும் பரபரப்பு கூடியது.வேலூர் மாநகராட்சியில் மாமன்ற கூட்டம் மேயர் சுஜாதா தலைமையில் தொடங்கியது. இதில் மாநகராட்சி ஆணையர் முன்னிலை வகித்தார். துணை மேயர் சுனில் குமார் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் .திமுகவின் தோல்விக்கு நீ தான் காரணம் என்று மேயர் மீது துணை மேயர் குற்றம் சுமத்தி பேசினார். இதனால் இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் நடந்து முடிவதற்குள்ளாக அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் எழுந்து முன்னாள் முதல்வர் என்ற ரீதியில் எடப்பாடி பழனிச்சாமியின் உருவப்படத்தை மாமன்ற வளாகத்தில் மாட்ட வேண்டும் என்று கூறி அவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மாமன்றத்தில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டதுடன் கூட்டம் நடைபெறாமல் திடீர் பரபரப்பும் குழப்பமும் தொடர்ந்து நிலவி வந்து முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மேயருக்கும், துணை மேயருக்கும் நடந்த வாக்குவாதத்தை பதிவு செய்த செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்களையும் கூட்ட அறையிலிருந்து வெளியேறுமாறு மேயர் தொடர்ந்து அச்சுறுத்திக் கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விஷயம் வெளியே தெரியக்கூடாது என்பதில் மேயர் கவனமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் செய்திகள் வெளியே எதுவும் வரக்கூடாது என்பதற்காக மேயர் சுஜாதா செய்தியாளர்களுக்கு தலா ரூபாய் 200 கொடுத்து அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.










Leave a Reply