தமிழ்நாட்டில்சமூக நீதி கணக்கெடுப்புபா.ம.க. தலைவர் அன்புமணிக்கு கிடைத்த வெற்றி.மாநில துணைத்தலைவர் தங்கவேல் பாண்டியன் அறிக்கை.

கோவை. ஜூன்.20-
தமிழக பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணைத்தலைவர் காளப்பட்டி தங்கவேல் பாண்டியன் கூறியிருப்பதாவது.

தமிழகத்தில் அனைத்து சமூக மக்களும் கல்வி, வேலைவாய்ப்புபொருளாதாரம் உள்ளதில் சமநிலை பெற வேண்டும் இட ஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும் சமூக நீதியை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 45 வருடங்களாக பாட்டாளி மக்கள் கட்சி சாதிவாரி கணக்கெடுப்பு சமூக நீதி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று போராடி வந்தது.

தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், தொடங்கி கருணாநிதி, ஜெயலலிதா ,எடப்பாடி பழனிச்சாமி, மு .க .ஸ்டாலின் என அனைவரிடமும் இந்த கோரிக்கையை டாக்டர் ராமதாஸ் மற்றும்பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதுகுறித்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் அனைத்து கட்சி தலைவர்களை அழைத்து ஒரு மனதாகதீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அளித்தார்.

இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்திருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக முதலமைச்சர் விஜய் ஆட்சிக்காலத்தில் தான் சமூகநீதி சர்வேயை சாத்தியமாக்குவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் முதலமைச்சர் ஜோசப் விஜய் பாராட்டி யுள்ளார்.

இதற்கான அறிவிப்பு வெளியான தருணம் சமூக நீதி வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியதாகும்.

இதற்காக போராடி உரிமையை பெற்று தந்த பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு நன்றியையும் பாராட்டுகளையும் கோவை பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்