
திடக்கழிவு மேலாண்மை திட்ட வளாகத்தில் சுகாதார அலுவலர் ஆலோசனை!வேலூர், ஜூன் 20-வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம் 1 காட்பாடி வார்டு 9 இல் உள்ள திடக்கழிவு மேலாண்மை திட்ட வளாகத்தில் சுகாதார அலுவலர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்து சுகாதார அலுவலர் டாக்டர் கே. சிவக்குமார் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரிக்கும் முறைகள் மற்றும் தூய்மை பணிகள் குறித்து அதிகாரிகளுக்கும் அங்கு பணியில் உள்ள பணியாளர்களுக்கும் அவர் ஆலோசனைகளை வழங்கினார். குறிப்பாக குப்பைகளை தரம் பிரித்து வீடுகளில் இருந்து வாங்க வேண்டும் என்று அவர் கண்டிப்புடன் தெரிவித்தார். இரண்டு குப்பைகளையும் ஒன்றாக இணைத்து வாங்க கூடாது என்றும் குறிப்பாக வலியுறுத்தி கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.










Leave a Reply