இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:

முதல் தலைமுறை மாணவிகள் அனைவரும் கல்வி முன்னேற்றம் பெற வேண்டும் என்ற கனவினை நிறைவு செய்ய வேண்டும். சமூக வலைதள பயன்பாடுகளை மாணாக்கர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறவேண்டுமெனில் கைப்பேசி பயன்பாட்டினை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். கல்வி கற்க வேண்டிய வயதில் எந்தவித கவனச் சிதறல்களும் ஏற்படாமல் கல்வி கற்பதில் மட்டுமே முழுக் கவனமும் இருக்க வேண்டும். கல்வி கற்றவர்கள் இல்லாத ஒரு வீட்டில் ஒரு பெண் குழந்தை கல்வி கற்று விட்டால் அந்த குடும்பத்தின் சூழலே முன்னேற்றம் பெறும்.கல்வி கற்பதன் காரணமாக தன்னம்பிக்கையுடனும், தைரியத்துடனும் செயல்பட முடியும். இளங்கலை கல்வியை கட்டாயம் நிறைவு செய்யவேண்டும் என்ற இலக்கினை மனதில் வைத்து செயல்பட வேண்டும்.
ஆசிரியர்கள் சிறப்பு கவனம் செலுத்தி மாணவிகளை அதிக மதிப்பெண் பெறுவதற்கு தொடர்ந்து ஊக்குவிக்க வேண்டும். குழந்தைகள் உதவி மையத்தின் 1098 குறித்து அனைத்து மாணவ, மாணவிகளும் தெரிந்துகொள்ள வேண்டும். இரும்புச்சத்து மாத்திரைகளை மாணவிகள் அனைவரும் கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஆசிரியர்களும் மாணவிகள் இரும்புச்சத்து மாத்திரைகள் உட்கொள்வதை கண்காணித்திட வேண்டும் எனவும் அதன் பயன்கள் குறித்து மாணவிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
முன்னதாக பூர்த்தி செய்யப்பட்ட மாணவிகளின் கருத்து படிவங்களையும் பார்வையிட்டார்.










Leave a Reply