மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் தடுப்பணையில் தண்ணீர் திறக்கும்போது அலட்சியம் உயிரிழப்பு அசம்பாவிதங்கள் நிகழும் முன் எச்சரிக்கை சைரன் எழுப்ப CITU வலியுறுத்தல்!

கோவை மாவட்டம்
​மேட்டுப்பாளையம்:
பவானி ஆற்றுத் தடுப்பணைகளில் தண்ணீர் திறக்கும்போது எச்சரிக்கை சைரன் ஒலி எழுப்புவதில் அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ள மேட்டுப்பாளையம் தாலுகா CITU பொது தொழிலாளர் சங்கம், பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய நிரந்தரக் கண்காணிப்பு அமைப்பை உருவாக்க வேண்டும் என அவசரக் கோரிக்கை மனு மனு ஒன்றை தமிழக முதல்வர் தனிப்பிரிவிற்கு அனுப்பியுள்ளார்கள்
​இதுகுறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் S. பாஷா அனுப்பி அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது
​மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் குறுக்கே தமிழ்நாடு மின்சார வாரியத்தால் 2001-ஆம் ஆண்டு மின் உற்பத்தி செய்வதற்காக சமயபுரம் மற்றும் ஊமபாளையம் பகுதிகளில் தடுப்பணைகள் (கதவணைகள்) கட்டப்பட்டன. இத்திட்டத்தில் 20 மெகாவாட் மின் உற்பத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்ட போதிலும், திட்டமிட்டபடி மின் உற்பத்தி செய்யப்படாமல் தற்போது மிகக் குறைந்த அளவிலேயே (சுமார் 4 மெகாவாட்) மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாகத் தெரிகிறது.
​சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரச் சீர்கேடு:
​ஆற்றின் இயற்கையான ஓட்டம் தர்க்கப்பட்டுத் தண்ணீர் தேங்கி நிற்பதால் கழிவுகள் அடித்துச் செல்லப்படாமல் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர் நச்சுத்தன்மையாக மாறி வருகிறது. பவானி ஆற்றின் நீரையே பல்வேறு குடிநீர்த் திட்டங்களுக்குப் பயன்படுத்தி வருவதால், அப்பகுதி மக்களுக்கு நீர்வழி நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
​சைரன் ஒலி எழுப்புவதில் அதிகாரிகளின் அலட்சியம்:
​சமயபுரம் மற்றும் ஊமபாளையம் தடுப்பணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடும் போது, ஆற்றில் குளிப்பவர்களுக்கும் துணி துவைக்கும் பொதுமக்களுக்கும் எச்சரிக்கை செய்யும் வகையில் உரத்த சைரன் ஒலி எழுப்பப்படுவதில்லை.
​இது தொடர்பாக ஏற்கனவே பலமுறை அரசுத் துறை அதிகாரிகளிடம் புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், புகார் அளிக்கும் ஒருசில நாட்கள் மட்டுமே எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு, அதன் பிறகு அதிகாரிகள் அதை முற்றிலுமாக மறந்து விடுகிறார்கள். இத்தகைய தற்காலிக நடவடிக்கைகளால் பொதுமக்களின் உயிர் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இதனால்
​நிரந்தரக் கண்காணிப்பு தேவை தண்ணீர் திறக்கும்போதெல்லாம் கட்டாயம் எச்சரிக்கை சைரன் ஒலி எழுப்பப்படுவதை மின்சார வாரியமும் மாவட்ட நிர்வாகமும் நிரந்தரமாகக் கண்காணிக்க வேண்டும்.
​அசம்பாவிதங்களைத் தடுத்தல்: திடீர் வெள்ளப் பெருக்கால் அசம்பாவிதங்களோ உயிரிழப்புகளோ ஏற்படும் முன் எச்சரிக்கை அமைப்புகளைச் சரிவர இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
​இயற்கை ஓட்டம்: ஆற்றின் இயற்கை ஓட்டத்தை உறுதிசெய்யத் தடுப்பணைகளின் மதகுகளைத் திறந்து தண்ணீரைச் செல்லவிட வேண்டும். அத்துடன் இத்தடுப்பணைகளின் தண்ணீர் சேர்த்து வைப்பதையும் பயன்பாடு குறித்தும் அரசுத் துறை அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து தடுப்பணைகளை அப்புறப்படுத்த நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
​அசம்பாவிதங்கள் ஏதும் நிகழும் வரை காத்திருக்காமல், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நீர்வளத்துறை வருவாய்த்துறை மின்சாரத்துறை காவல்துறை உள்ளிட்ட அனைத்து அரசு துறை அதிகாரிகள் இணைந்து ஆய்வு செய்து பவானி ஆற்றை பாதுகாக்க உடனடியாக நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என கோரிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது