Archives
August 2026
July 2026
June 2026
May 2026
April 2026
March 2026
February 2026
January 2026
December 2025
November 2025
October 2025
September 2025
Categories
Uncategorized
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
செய்திகள்
நிகழ்ச்சிகள்
விளையாட்டு
Meta
Log in
Entries feed
Comments feed
WordPress.org
செய்திகள்
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
நிகழ்ச்சிகள்
வர்த்தகம்
விளையாட்டு
உலக செய்திகள்
Month:
July 2026
வேலூர் நறுவீ மருத்துவமனையில் தேசிய மருத்துவர் தினம் கொண்டாட்டம்!வேலூர், ஜூலை 3-வேலூர் நறுவீ மருத்துவமனையில் தேசிய மருத்துவர் தினம் கொண்டாடப்பட்டது, அதில் பள்ளி மாணவ, மாணவியர் சார்பில் மருத்துவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.மக்களின் உயிரை காப்பாற்றும் பணியில் மருத்துவ சேவை ஆற்றி வரும் மருத்துவர்களை கௌரவப்படுத்தும் வகையில் வேலூர் நறுவீ மருத்துவமனையில் தேசிய மருத்துவர் தினம் கொண்டாடப்பட்டது. பள்ளி மாணவ, மாணவியர் இதில் பங்கேற்று மருத்துவர்களுக்கு பூங்கொத்து வழங்கி அவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.மக்களுக்கு மருத்துவ சேவை ஆற்றி வரும் மருத்துவர்களை கௌரவப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை முதல் தேதி தேசிய அளவில் மருத்துவர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி வேலூர் நறுவீ மருத்துவமனையில் தேசிய மருத்துவர் தினம் வண்ணமயமாக கொண்டாடப்பட்டது. மருத்துவர் தினத்தையொட்டி மருத்துவர்கள் பங்கேற்க நறுவீ மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் மருத்துவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார். விழாவையொட்டி கேக் வெட்டி விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் வேலூர் வாணி வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி, சன்பீம் சர்வதேச பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்று நேரம் பாராமல் மக்களுக்கு மருத்துவ சேவை ஆற்றி வரும் மருத்துவர்களை மகிழ்விக்கும் வகையில் பூங்கொத்து வழங்கியும், தேசிய மருத்துவ தின பேட்ஜ் வழங்கியும் பாராட்டி கௌரவப்படுத்தினர்.மேலும், வேலூர் பீமா ஜூவல்லரி சார்பில் வேலூர் கிளை மேலாளர் ஜெயராமன் மருத்துவர்களுக்கு பாராட்டுச் சான்று மற்றும் நினைவுப் பரிசு வழங்கினார்.இவ்விழாவில் நறுவீ மருத்துவமனை துணைத் தலைவர் அனிதா சம்பத், வேலூர் வாணி வித்யாலயா குழுமத் தலைவர் சுசீ மணிவண்ணன், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஜேக்கப் ஜோஸ், ரத்த புற்று நோய் நிபுணர் டாக்டர் மாமன் சாண்டி, பொது மருத்துவ நிபுணர் டாக்டர் குரியன் தாமஸ், காது மூக்கு தொண்டை நிபுணர் டாக்டர் மேரி குரியன், மகப்பேறு மருத்துவ நிபுணர்கள் டாக்டர் அருணா கேக்ரே, ஆனி ரெஜ்ஜி, சந்தோஷ் சாமுவேல், அகிலா ஸ்ரீ, குழந்தைகள் நல மருத்துவ நிபுணர் சோனியா மேரி குரியன், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பூபே’, தலைமை நிதி அலுவலர் வெங்கட்ரங்கம், பொது மேலாளர் நிதின் சம்பத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பொறுப்பேற்பு!வேலூர், ஜூலை 2-வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம், கிராம வளர்ச்சி புதிய வட்டார வளர்ச்சி அலுவலராக மீனா பொறுப்பேற்றுக் கொண்டார்.
சென்னையில் நம்ம மேட்டுப்பாளையம் சிஐடியுரத்ததான தன்னார்வலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் நினைவு பரிசை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண் ராஜ் வழங்கினார்!
காட்பாடி விருதம்பட்டு பகுதியில் தூய்மைப் பணியாளர்களின் வருகை பதிவேடுகளை ஆய்வு செய்த சுகாதார அலுவலர்!வேலூர் ஜூலை 1-வேலூர் மாநகராட்சி, 1வது மண்டலம், காட்பாடி, வார்டு 15ல் காட்பாடி 1வது மண்டல சுகாதார அலுவலர் டாக்டர் கே. சிவக்குமார் விருதம்பட்டு பகுதியில் தூய்மைப் பணியாளர்களின் வருகை பதிவேடுகளை திடீரென ஆய்வு செய்தார். அத்துடன் வீடுகளில் சேகரிக்கும் மக்கும் குப்பை, மக்காத குப்பை ஆகியவற்றை தனித்தனியாக தூய்மை பணியாளர்கள் சேகரிக்கிறார்களா? என்பதை முறையாக ஆய்வு செய்தார். அத்துடன் பொதுமக்களிடமிருந்து புகார்கள் வராத வகையில் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று தூய்மை பணியாளர்களுக்கு சில பல அறிவுரைகளை அப்போது அவர் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
1
…
10
11
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.