
காட்பாடி விருதம்பட்டு பகுதியில் தூய்மைப் பணியாளர்களின் வருகை பதிவேடுகளை ஆய்வு செய்த சுகாதார அலுவலர்!வேலூர் ஜூலை 1-வேலூர் மாநகராட்சி, 1வது மண்டலம், காட்பாடி, வார்டு 15ல் காட்பாடி 1வது மண்டல சுகாதார அலுவலர் டாக்டர் கே. சிவக்குமார் விருதம்பட்டு பகுதியில் தூய்மைப் பணியாளர்களின் வருகை பதிவேடுகளை திடீரென ஆய்வு செய்தார். அத்துடன் வீடுகளில் சேகரிக்கும் மக்கும் குப்பை, மக்காத குப்பை ஆகியவற்றை தனித்தனியாக தூய்மை பணியாளர்கள் சேகரிக்கிறார்களா? என்பதை முறையாக ஆய்வு செய்தார். அத்துடன் பொதுமக்களிடமிருந்து புகார்கள் வராத வகையில் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று தூய்மை பணியாளர்களுக்கு சில பல அறிவுரைகளை அப்போது அவர் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.










Leave a Reply