Archives
August 2026
July 2026
June 2026
May 2026
April 2026
March 2026
February 2026
January 2026
December 2025
November 2025
October 2025
September 2025
Categories
Uncategorized
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
செய்திகள்
நிகழ்ச்சிகள்
விளையாட்டு
Meta
Log in
Entries feed
Comments feed
WordPress.org
செய்திகள்
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
நிகழ்ச்சிகள்
வர்த்தகம்
விளையாட்டு
உலக செய்திகள்
Month:
July 2026
உள்ளாட்சி நிதி தணிக்கை துறை மற்றும் மாநில அரசு தணிக்கை துறைகளில் நிதி அமைச்சரின் உத்தரவை மதிக்காத தலைமை தணிக்கை இயக்குநர் மற்றும் சிறப்பு இயக்குநரை கண்டித்தும் தணிக்கையாளர்களின் 13 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் உண்ணாவிரதப் போராட்டம்!வேலூர், ஜூலை 5-வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ளாட்சி நிதி தணிக்கை துறை மற்றும் மாநில அரசு தணிக்கை துறைகளில் நிதி அமைச்சரின் உத்தரவை மதிக்காத தலைமை தணிக்க இயக்குநர் மற்றும் சிறப்பு இயக்குநரை கண்டித்தும் தணிக்கையாளர்களின் 13 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மாநில தலைவர் ஆர். பாபு தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் சீனி. செந்தில், பொதுச்செயலாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்பு செயலாளர் ஆர். கோவிந்தராஜ் வரவேற்றார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை மாநில பொதுச் செயலாளர் மாரிமுத்து தொடங்கி வைத்தார். மாநில தலைவர் பா. ஐயப்பன் கோரிக்கை விளக்க உரையாற்றினார். மாநில தலைவர் மகேந்திர குமார் வாழ்த்து பேருரை வழங்கினார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆய்வாளர் மன்ற மாநில துணைத்தலைவர் த.ஞானவேல், திருப்பத்தூர் மாவட்ட தலைவர் மா. விநாயகம், வேலூர் மாவட்ட தலைவர் ஆ .கோவிந்தராஜ், ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் கி. ராஜேஷ், திருவண்ணாமலை மாவட்ட தலைவர் மு. அமாவாசை, விழுப்புரம் எஸ் .கோட்டீஸ்வரன், மாநில மகளிர் அணி செயலாளர் கே. லதா ,கடலூர் பி. இரா. ரேவதி மற்றும் பலர் வாழ்த்துரை வழங்கினர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கடந்த 15.4.2025 முதல் உள்ளாட்சி நிதி தணிக்கை துறை மற்றும் மாநில அரசு தணிக்கை துறையில் அமல்படுத்தப்பட்ட சிஏ எம்எஸ் என்ற ஆன்லைன் தணிக்கை முறை மற்றும் தணிக்கை துறைகளில் நிலவும் நீண்ட கால இடர்பாடுகள் ரத்து செய்யப்பட வேண்டும். தமிழக நிதி அமைச்சரின் உத்தரவுக்கு மாறாக பெண்களுக்கு 100 கிலோ மீட்டர் தாண்டிய தொலைதூர தணிக்கை பணி வழங்குவது, மாற்றுத் திறனாளி தணிக்கையாளர்களுக்கு தணிக்கை பணி மறுப்பது, சொந்தக்காரண விடுப்பு மற்றும் மருத்துவ விடுப்புகளுக்கு அனுமதி மறுப்பதசி ஏ எம் எஸ் ரேண்டமை சேஷன் மாநில அளவில் பணித் திட்டம் ஒதுக்கீட்டில் குளறுபடி, இதற்கு காரணமான சிஏ எம்எஸ் குழுவினரை சுழற்சி முறையில் மாற்ற கோருதல், மாநில அரசு தணிக்கை துறையில் 6300 தணிக்கை நிறுவனங்கள் கைவிடல் வேண்டும். பேரூராட்சிகளின் தணிக்கை முறை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும். தன்னிச்சையாக மேற்கொள்ளப்படும் துறைகள் இணைப்பு மற்றும் துறை மறு சீரமைப்பு முறை பாதிப்புகள் களையப்பட வேண்டும். பணியாளர்கள் ஓய்வு பெறும் நாளில் குற்ற குறிப்பாணைகள் வழங்குவது நிறுத்தப்பட வேண்டும். உடன் நிகழ் தணிக்கை முறை ஒழிக்கப்பட வேண்டும். மனித நாட்கள் தராமல் தணிக்கை பத்திகளை நீக்க வலியுறுத்தும் ஏபிஎம்எஸ் பணி நிர்பந்தம் நீக்கப்பட வேண்டும். புதிய வருவாய் மாவட்டங்களில் புதிய உதவி இயக்குநர் அலுவலகங்கள் பல ஆண்டுகளாக தொடங்கப்படாமல் உள்ளதை விரைவில் தொடங்க வேண்டும். மூன்று பேருக்கு மட்டுமே கண் துடைப்பு கவுன்சிலிங் நடத்திய பின்னர் கணக்கின்றி பணியிட மாறுதல் செய்தல் கைவிடப்பட வேண்டும். புதியதாக உருவாக்கப்பட்ட வருவாய் மாவட்டங்களான திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, மயிலாடுதுறை மற்றும் தென்காசி மாவட்ட அளவில் தணிக்கை பணித்திட்டங்கள் வகுக்காமல் உள்ளதை உடனடியாக வகுத்து தர வேண்டும் உள்ளிட்ட இந்த 13 நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டி இந்த மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழ்நாடு உள்ளாட்சி நிதி தணிக்கை ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு உள்ளாட்சி நிதி தணிக்கை மற்றும் மாநில அரசு தணிக்கை துறை ஆய்வாளர் மன்றத்தினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். டி என் ஜி ஓ யூ மாநில பொருளாளர் பெ. திலகர் உண்ணாவிரதத்தை முடித்து வைத்து நிறைவு உரையாற்றினார்.
காட்பாடி வட்டாட்சியர் அலுவலகம் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு – நிலுவை கோப்புகள், பட்டா தாமதம், நிர்வாக அலட்சியம் என தொடர் புகார்!வேலூர், ஜூலை 4-காட்பாடி வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வருவாய்த் துறை செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக, பல மாதங்களாகவும் சில நேரங்களில் வருடக் கணக்கிலும் நிலுவையில் உள்ள கோப்புகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.பொதுமக்கள் கூறுவதாவது, வருவாய் கோட்டாட்சியரிடம் நிலுவை கோப்புகள் குறித்து கேட்டால், “வருவாய்த் துறை விசாரணைக்குப் பிறகே பதில் அளிக்க முடியும்” என தெரிவிக்கப்படுகிறது. எப்போது விசாரணை நடைபெறும் என்று கேட்டால், “பணிச்சுமை அதிகமாக இருப்பதால் தற்போது வர முடியாது; அந்தப் பகுதிக்கு வரும்போது கண்டிப்பாக வருவோம்” என்று அதிகாரிகள் கூறுவதாகவும், ஆனால் பின்னர் அந்தப் பகுதிக்கு வந்தாலும் சம்பந்தப்பட்ட கோப்புகள் பரிசீலிக்கப்படுவதில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.மேலும், அலுவலகத்திற்கு பலமுறை நேரில் சென்றாலும், “கோப்புகள் எங்கு வைக்கப்பட்டுள்ளன என்று தேடிக் கொண்டிருக்கிறோம்; அடுத்த வாரம் வாருங்கள்” என்ற பதிலே தொடர்ந்து வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.ஆன்லைன் பட்டா மற்றும் நில விவரங்களில் சில சர்வே எண்கள் கணினி அமைப்பில் பதிவேற்றம் செய்யப்படாததால், நிலங்களை விற்க முடியாமல் ஆறு மாதங்களுக்கும் மேலாக மக்கள் காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும், “வருவாய் ஆய்வாளரிடம் தெரிவித்துள்ளோம்”, “கோட்டாட்சியரிடம் கூறியுள்ளோம்” என்ற பதில்களே கிடைப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.மேலும், பட்டாவில் தொடர்பில்லாத நபர்களின் பெயர்கள் சேர்க்கப்படுவது, ஏற்கனவே உள்ள உரிமையாளர்களின் பெயர்கள் நீக்கப்படுவது போன்ற முறைகேடுகள் நடைபெறுவதாகவும், இத்தகைய புகார்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.அமைச்சர் முன்னிலையில் நடைபெற்ற சிறப்பு பட்டா வழங்கும் முகாமில் பட்டா வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டும், சிலருக்கு மட்டுமே பட்டா கிடைத்ததாகவும், மீதமுள்ளவர்களிடம் பின்னர் “உங்கள் பெயர் பட்டியலில் இல்லை” என்று கூறப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.பணம் கொடுத்து பணிகளை மேற்கொள்ளும் நபர்களுக்கு மட்டும் முன்னுரிமை வழங்கப்படுவதாகவும், ஏழை மற்றும் சாதாரண மக்களின் தொலைபேசி அழைப்புகளுக்குக் கூட பதிலளிக்கப்படுவதில்லை என்றும் சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி, தவறு செய்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள பட்டா மற்றும் வருவாய்த் துறை தொடர்பான கோரிக்கைகளுக்கு விரைவாக தீர்வு வழங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள் விண்ணப்பம் செய்தால் அதை எடுத்து பார்ப்பது கூட இல்லை. இதற்கு முன்னர் அமைச்சர் துரைமுருகன் பெயரைச் சொல்லி எந்தவொரு பணியையும் செய்யாமல் காலம் கடத்தி வந்தனர். பணம் தருபவர்களின் பணிகள் மட்டுமே முடித்து தரப்பட்டது. பணம் தராதவர்களின் பணிகளை முடித்து தராமல் இழுத்தடித்து வந்தனர். காட்பாடியில் ஒரு பட்டா பெற வேண்டும் என்றால் ரூபாய் 15,000 முதல் ரூ.30,000 வரையில் செலவாகிறது. குறிப்பாக இந்த சர்வேயர் செக்ஷ்ஷனுக்கே பணம் கொடுத்து அழுது மாளாது. அந்த அளவிற்கு ஏழைகளின் ரத்தத்தை ஸ்ட்ரா போட்டு உறிஞ்சி குடிக்கின்றனர் அரசு அலுவலர்கள். லஞ்ச ஒழிப்புத்துறையும் இவர்களை இதுநாள் வரையில் சரிவர கவனிக்கவில்லை என்பது ஒரு மைனஸ் பாயிண்ட் என்றும் சொல்லலாம். காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் பார்வை முழுவதுமாக வைத்தால் மட்டுமே இந்த விலங்கு மீன்கள் சிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை பணம் என்றால் இனம் கூட வாயை பிளக்கும் என்று சொல்வார்கள் ஆனால் இங்கும் அதே நிலைதான் பணம் இல்லை எனில் எந்த வேலையும் நடக்காது ஏன் அனுபவம் அசையாது என்றே சொல்லலாம் அந்த அளவிற்கு நிலைமை மிகவும் கேவலமாக படு மோசமாக சென்று கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக் கொண்டு இருக்குதஅதை திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டு இருக்குது என்று மருதகாசி பாடலின் வைர வரிகளுக்கு இணங்க காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் இதுபோன்ற ஒரு நிலாளபை பிரிவு செயல்பட்டு வருவது மிகவும் வெட்கக்கேடானது வேதனைக்குரியது என்று தான் சொல்ல வேண்டும் ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் இங்கு மாறவே இல்லை என்று சொல்லலாம். அப்படியே அதன் நிலைமை உள்ளது வரிசைப்படி பதிவு விருப்பத்தை ுுடைுஅயாது அவர்கள் விருப்பம் போல் பணம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை தந்து இங்கு பணியாற்றிக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கெல்லாம் ஒரு நிரந்தர தீர்வை தமிழக முதல்வராக உள்ள விஜயின் அரசு கொண்டுவர வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கொண்டசமுத்திரம் ஊராட்சியில் நெசவாளர்கள் ஆலோசனை கூட்டம்!வேலூர், ஜூலை 4-கைத்தறி நெசவாளர்களுக்கு குறைத்த கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நெசவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் கொண்டசமுத்திரம் ஊராட்சி எம்ஜிஆர் நகரில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு சங்கத் தலைவர் ஆர். அண்ணாமலை தலைமை வகித்தார்.எம்ஜிஆர் நகர் பகுதி, கந்தசாமி நகர் பகுதி, ராஜீவ் காந்தி நகர் பகுதி நெசவாளர்கள் கலந்து கொண்டனர்.கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.கைத்தறி நெசவாளர்களுக்கு குறைக்கப்பட்ட கூலியை உடனே உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், அதற்காக முத்தரப்பு பேச்சு வார்த்தையை உடனே நடத்த துறை சார்ந்த அரசு அலுவலர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துவது என்றும், கைத்தறி நெசவாளர்களுக்கு ஆண்டுதோறும் பொங்கல் திருநாளுக்கு பத்து சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும்எம்ஜிஆர் நகரில் இருந்து கைத்தறி நெசவாளர்கள் ஊர்வலமாக சென்று வட்டாட்சியரிடம் மனு அளிப்பது என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. அனைத்து பகுதி நெசவாளர்களும் இந்த ஊர்வலத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் மணி, மூர்த்தி, தணிகைவேல், மோகன் உள்ளிட்ட நெசவாளர்கள் மற்றும் பல நெசவாளர்கள் கலந்து கொண்டனர் .
அறிவியல் தொழில்நுட்பத்திற்காக குடியரசு தலைவரிடம் பத்மஸ்ரீ விருது பெற்ற கோவை டாக்டர் கே. ராமசாமி அவர்களுக்கு ஒருங்கிணைந்த சிவனடியார்கள் திருக்கூட்ட தலைவர் ஆ.வெ.மாணிக்கவாசகம் வாழ்த்து தெரிவித்தார்.
கடந்த 8 ஆண்டுகளாக காட்பாடி காவல் நிலையத்தில் தனிப்பிரிவு போலீஸாக பணிபுரியும் கோபி மாற்றப்படுவது எப்போது?வேலூர், ஜூலை 4-வேலூர் மாவட்டம், காட்பாடி காவல் நிலையத்தில் தனிப்பிரிவு போலீஸாக கோபி என்பவர் கடந்த எட்டு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இவர் வெளியில் தன்னை எஸ். பி. சிஐ டி என்று தவறாக கூறிக்கொண்டு சுற்றித் திரிகிறார். சமூக விரோதிகளுடன் இணக்கமாக கூட்டு வைத்துக் கொண்டு அவர்களிடம் வசூல் வேட்டையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் என்று சொன்னால் அதுதான் நிதர்சன உண்மை. இவர் சீருடை அணியாமல் கலர் கலராக உடைகளை அணிந்து கொண்டு ஏதோ சினிமாவில் நடிக்க வந்தவர் போல உலா வந்து கொண்டுள்ளார். இவர் காவல் நிலையத்தில் நடப்பதை பார்க்கிறாரோ இல்லையோ வெளியில் வசூல் வேட்டையை கணக்கச்சிதமாக முடித்துக்கொண்டு சென்று விடுகிறார். காவல் நிலையத்தில் ஏதாவது தகவல் சொன்னால் அதை மட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தெரிவித்துவிட்டு இவர் ஹாயாக வலம் வந்து கொண்டுள்ளார். ஒவ்வொரு பண்டிகையின் போதும் கடை கடையாக சென்று வசூல் வேட்டை நடத்துவது, சாராய வியாபாரிகள், காட்டன் சூதாட்டம் நடத்துவோர், விபச்சார விடுதி நடத்துவோர், வீடுகளில் விபச்சாரம் நடத்துவோர் என்று என்னென்ன சமூக விரோதச் செயல்கள் உள்ளனவோ அவை அனைத்தையும் இவர் வசூல் செய்து கொண்டு சென்று விடுகிறார். கேட்டால் தான் ஒரு சிஐடி என்றும் வெளியில் யாருக்கும் இதை சொல்லக்கூடாது என்றும் சொல்லிவிட்டு இவர் சென்று விடுகிறார். இவர் பணியை பார்ப்பதை விட வெளியில் வேலை பார்ப்பது தான் அதிகம். எங்கு செல்கிறார் என்ன செய்கிறார் என்பது யாருக்கும் தெரியாத ஒரு சிதம்பர ரகசியமாகவே இதுநாள் வரை இருந்து கொண்டுள்ளது. இதை ஒரு மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் இதுநாள் வரை கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தற்போது வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக உள்ள சிவராமன் இதில் தலையிட்டு மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரு காவல் நிலையத்தில் ஒருவரை பணி செய்ய அனுமதிக்க கூடாது என்ற அரசு விதியை மதித்து இவரை உடனடியாக வேறு எங்காவது பணியிட மாற்றம் செய்துவிட்டு இவருக்கு பதிலாக வேறு நபர்கள் யாரையாவது காட்பாடிக்கு நியமனம் செய்ய வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் திடீர் போர்க்கொடி தூக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .இவர் பொதுமக்களை மிரட்டுவது, உருட்டுவது என்று பல்வேறு விரும்பத்தகாத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் தனிப்பிரிவு போலீஸ் போல நடந்து கொள்வதே இல்லை. ஏதோ ஒரு தனி ரவுடி போல செயல்படுகிறார் என்று சொன்னால் அதுதான் நிதர்சன உண்மை. ஆதலால் விரைவாக இவர் மீது உரிய விசாரணை நடத்தி இவரை பணியிட மாற்றம் செய்யலாமா? அல்லது ஆயுதப்படைக்கு மாற்றலாமா? என்பதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமன்தான் முடிவு செய்ய வேண்டும். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமன் இவர் மீது எப்படி சாட்டையை சுழற்றுகிறார் என்ன செய்கிறார் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
காட்பாடி ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோண சிரவண தீபம் ஏற்றி வழிபாடு!வேலூர், ஜூலை 4-வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள ஶ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு 3ம் தேதி சிரவண தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடந்தது. அர்த்த மண்டபத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மஹாலஷ்மிக்கு சிறப்பு பூஜை நடந்தது. சிரவண தீபத்தை ஏற்றி பின்பக்கமாக இடமிருந்து வலமாக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மஹாலட்சுமி விக்கிரகத்தை மூன்று முறை வலம் வந்து வழிபட்டனர். இதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு கேசரி, பஞ்சாமிர்தம், சுண்டல், சாம்பார் சாதம் ஆகிய பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டன. குங்குமம், சந்தனம், மஞ்சள், செந்தூரம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. ஶ்ரீபக்த ஆஞ்சநேயர் வெண்ணெய் காப்பு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஸ்ரீரங்கம் ஸ்ரீ கண்ணன் பட்டாச்சாரியார் வெகுவிமரிசையாக செய்திருந்தார்.
முதல்வரை பாலிமர் T V தலைவர் கல்யாண சுந்தரம் தனது குடும்பத்தினருடன் சந்தித்தார்.
வேலூர் சரக காவல்துறை முதுநிலை நிர்வாக அலுவலருக்கு பணிநிறைவு பாராட்டு விழா!வேலூர், ஜூலை 4-வேலூர் மாவட்டம், வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள காவலர் திருமண மண்டபத்தில், வேலூர் சரக காவல் துறையில் முதுநிலை நிர்வாக அலுவலராக பணியாற்றி பணி நிறைவு பெற்று, அலுவலகத்தின் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிஸராகவும் பணியாற்றிய எஸ். டீக்காராமனுக்கு பணி நிறைவு பாராட்டு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் (டிஐஜி) மகேஷ் கலந்துகொண்டு, எஸ். டீக்காராமனுக்கு பணி நிறைவு வாழ்த்துக்களைத் தெரிவித்து, பொன்னாடை போர்த்தி கவுரவித்து, நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டினார். இதனைத் தொடர்ந்து வேலூர் ஏ.எஸ்.பி. தனுஷ்குமார், திருவண்ணாமலை மாவட்ட ஏடிஎஸ்பி (HQ) சிவாஅனு பாண்டியன், வேலூர் டி.எஸ்.பி. இருதயராஜ் ஆகியோர் கலந்து கொண்டு, இவரின் சிறப்பான பணியைப் பாராட்டி, பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசுகளை வழங்கி பணி நிறைவு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். மேலும், காவல்துறையைச் சேர்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பலர் திரளாகக் கலந்து கொண்டு, எஸ். டீக்காராமனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து, அவரது நீண்டகால அர்ப்பணிப்புமிக்க காவல் பணியைப் பாராட்டி நினைவு பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
நமது மேட்டுப்பாளையம் சட்ட மன்ற உறுப்பினர் திரு சுனில் ஆனந்த் அவர்கள் திம்மம்பாளையம் புதூரில் நடைபெற்ற அருள் மிகு செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட தருணம்
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க புதிய உறுப்பினர்கள் இணையும் விழா!ராணிபேட்டை, ஜூலை 3-தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கத்தின் புதிய உறுப்பினர்கள் இணையும் விழா, ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டத்தில் சிறப்பாகவும், எழுச்சியுடனும் நடைபெற்றது.இந்நிகழ்வில் சங்கத்தின் மாநிலத் தலைவர் பூபதி, மாநிலப் பொதுச் செயலாளர் சுந்தரராஜன் , மாநிலச் செயலாளர் (வடக்கு மண்டலம்) பக்கிரிசாமி , ஒருங்கிணைந்த வேலூர்–திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத் தலைவர் சற்குணம், திருப்பத்தூர், கடலூர், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டப் பொறுப்பாளர்கள், ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் கபிலன், மாவட்டப் பொருளாளர் சங்கரநாராயணன், மாவட்டத் துணைத் தலைவர் மணிகண்டன், மாவட்ட மகளிர் அணி தலைவர் கலையரசி, சோளிங்கர் வட்டத் தலைவர் நவநீதன், ஆற்காடு வட்டத் தலைவர் வெங்கடேசன், நெமிலி வட்டத் தலைவர் டோமேஷசன் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தின் அனைத்து வட்ட நிர்வாகிகள், சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு புதிய உறுப்பினர்களை மனமார்ந்த வரவேற்புடன் சங்கத்தில் இணைத்துக் கொண்டனர்.சங்கத்தின் ஒற்றுமையையும், வளர்ச்சியையும் மேலும் வலுப்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இவ்விழா, மிகுந்த உற்சாகத்துடனும், சிறப்புடனும் நிறைவுற்றது.புதியதாக இணைந்துள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். சங்கத்தின் கொள்கைகள் மற்றும் நோக்கங்களை முன்னெடுத்து, அர்ப்பணிப்புடன் செயல்பட்டு, உறுப்பினர்களின் நலன்களையும், சங்கத்தின் வளர்ச்சியையும் மேலும் உயர்த்திட அனைவருக்கும் எங்களது வாழ்த்துக்கள்.இந்நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்து வெற்றிகரமாக நடத்திய சோளிங்கர் வட்டத் தலைவர் நவநீதனுக்கும், நெமிலி வட்ட நிர்வாகிகளுக்கும், விழா வெற்றிக்கு ஒத்துழைத்த அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கும் ராணிப்பேட்டை மாவட்டத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று மு. வெங்கடேசன், B.A., (Ex-Army)மாவட்டத் தலைவர், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கம், ராணிப்பேட்டை மாவட்டம் தெரிவித்துள்ளார்.
1
…
9
10
11
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.