
கடந்த 8 ஆண்டுகளாக காட்பாடி காவல் நிலையத்தில் தனிப்பிரிவு போலீஸாக பணிபுரியும் கோபி மாற்றப்படுவது எப்போது?வேலூர், ஜூலை 4-வேலூர் மாவட்டம், காட்பாடி காவல் நிலையத்தில் தனிப்பிரிவு போலீஸாக கோபி என்பவர் கடந்த எட்டு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இவர் வெளியில் தன்னை எஸ். பி. சிஐ டி என்று தவறாக கூறிக்கொண்டு சுற்றித் திரிகிறார். சமூக விரோதிகளுடன் இணக்கமாக கூட்டு வைத்துக் கொண்டு அவர்களிடம் வசூல் வேட்டையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் என்று சொன்னால் அதுதான் நிதர்சன உண்மை. இவர் சீருடை அணியாமல் கலர் கலராக உடைகளை அணிந்து கொண்டு ஏதோ சினிமாவில் நடிக்க வந்தவர் போல உலா வந்து கொண்டுள்ளார். இவர் காவல் நிலையத்தில் நடப்பதை பார்க்கிறாரோ இல்லையோ வெளியில் வசூல் வேட்டையை கணக்கச்சிதமாக முடித்துக்கொண்டு சென்று விடுகிறார். காவல் நிலையத்தில் ஏதாவது தகவல் சொன்னால் அதை மட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தெரிவித்துவிட்டு இவர் ஹாயாக வலம் வந்து கொண்டுள்ளார். ஒவ்வொரு பண்டிகையின் போதும் கடை கடையாக சென்று வசூல் வேட்டை நடத்துவது, சாராய வியாபாரிகள், காட்டன் சூதாட்டம் நடத்துவோர், விபச்சார விடுதி நடத்துவோர், வீடுகளில் விபச்சாரம் நடத்துவோர் என்று என்னென்ன சமூக விரோதச் செயல்கள் உள்ளனவோ அவை அனைத்தையும் இவர் வசூல் செய்து கொண்டு சென்று விடுகிறார். கேட்டால் தான் ஒரு சிஐடி என்றும் வெளியில் யாருக்கும் இதை சொல்லக்கூடாது என்றும் சொல்லிவிட்டு இவர் சென்று விடுகிறார். இவர் பணியை பார்ப்பதை விட வெளியில் வேலை பார்ப்பது தான் அதிகம். எங்கு செல்கிறார் என்ன செய்கிறார் என்பது யாருக்கும் தெரியாத ஒரு சிதம்பர ரகசியமாகவே இதுநாள் வரை இருந்து கொண்டுள்ளது. இதை ஒரு மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் இதுநாள் வரை கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தற்போது வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக உள்ள சிவராமன் இதில் தலையிட்டு மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரு காவல் நிலையத்தில் ஒருவரை பணி செய்ய அனுமதிக்க கூடாது என்ற அரசு விதியை மதித்து இவரை உடனடியாக வேறு எங்காவது பணியிட மாற்றம் செய்துவிட்டு இவருக்கு பதிலாக வேறு நபர்கள் யாரையாவது காட்பாடிக்கு நியமனம் செய்ய வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் திடீர் போர்க்கொடி தூக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .இவர் பொதுமக்களை மிரட்டுவது, உருட்டுவது என்று பல்வேறு விரும்பத்தகாத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் தனிப்பிரிவு போலீஸ் போல நடந்து கொள்வதே இல்லை. ஏதோ ஒரு தனி ரவுடி போல செயல்படுகிறார் என்று சொன்னால் அதுதான் நிதர்சன உண்மை. ஆதலால் விரைவாக இவர் மீது உரிய விசாரணை நடத்தி இவரை பணியிட மாற்றம் செய்யலாமா? அல்லது ஆயுதப்படைக்கு மாற்றலாமா? என்பதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமன்தான் முடிவு செய்ய வேண்டும். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமன் இவர் மீது எப்படி சாட்டையை சுழற்றுகிறார் என்ன செய்கிறார் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.










Leave a Reply