தஞ்சை மாவட்டம், பேராவூரணி நகர், நீலகண்டபுரம் ,முடப்புளிக்காடு அருள்மிகு நீலகண்டப்பிள்ளையார் திருக்கோயில் சித்திரை பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது . பேராவூரணியில் பிரசித்தி பெற்று விளங்கும் அருள்மிகு நீலகண்டப்பிள்ளையார் ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பௌர்ணமி திருவிழா அதி சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும் சித்ரா பௌர்ணமி பெரும் திருவிழா இன்று கொடி ஏற்ற நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கோவில் நிர்வாக அதிகாரி அருண் பிரகாஷ். முடப்புளிக்காடு கிராமத்தார்கள். மற்றும் ஸ்தாணிகர் சங்கரன் வகையறாக்கள். கோயில் பணியாளர்கள். மற்றும் பக்தகோடிகள் என ஏராளமானோர கலந்து கொண்டனர். இதனால் பேராவூரணி நகரே கலைகட்ட தொடங்கியுள்ளது.


பேராவூரணி செய்தியாளர் நீலகண்டன்










Leave a Reply