இக்கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 590 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

முன்னதாக, இன்றைய மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்த மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்து, மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் 01 மாற்றுத்திறன் நபருக்கு காதொலி கருவியும், 01 மாற்றுத்திறன் நபருக்கு பிரெய்லி கடிகாரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.










Leave a Reply