காட்பாடியில் ‘ஸ்லாம்’ லைஃப் ஸ்டைல் அண்ட் ஃபிட்னஸ் ஸ்டுடியோ ஜிம் திறப்பு விழா: வேலூர் திரைப்பட நடிகை டாக்டர் ரேச்சல் ரெபேக்கா திறந்து வைப்பு!வேலூர், ஜூலை 28-வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, பழைய காட்பாடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ‘ஸ்லாம்’ லைஃப் ஸ்டைல் அண்ட் ஃபிட்னஸ் ஸ்டுடியோ SLAM Lifestyle and Fitness Studio ஜிம் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் திரைப்பட நடிகை டாக்டர். ரேச்சல் ரெபேக்கா கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி ஜிம்மை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார். பின்னர், அவருக்கு நினைவுப் பரிசு வழங்கி விழா ஏற்பாட்டாளர்கள் கௌரவித்தனர். இவ்விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் காட்பாடி சட்டமன்றத் தொகுதி மாவட்ட செயலாளர் வேலூர் ஃபிலிப், தொழிலதிபர்கள், உடற்பயிற்சி பயிற்சியாளர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். விழாவின் நிறைவாக, கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி, நிர்வாகத்தின் சார்பில் நன்றியுரை நிகழ்த்தி திறப்பு விழா நிறைவு பெற்றது.