வேலூர் அருகே செங்கல் சூளையில் மாதம் ரூ.1 லட்சம் மாமூல் வர வேண்டும்”: தவெக ஒன்றிய செயலாளர்.. செங்கல் சூளை உரிமையாளரிடம் மிரட்டல்!வேலூர், மே 24-தமிழ்நாட்டில் தவெக சர்க்கார் அதிகாரத்திற்கு வந்து இன்னும் முழுமையாக ஒரு மாதம் கூட ஆகவில்லை. இந்நிலையில் வேலூரில் செங்கல் சூளை உரிமையாளர்களிடையே மாதம் ரூ.1 லட்சம் பணம் மாமுல் கேட்டு தவெக ஒன்றியச் செயலாளர் மிரட்டியிருப்பது தொழிலாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று கூறி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தேர்தலை எதிர்கொண்டிருந்தது. தேர்தலிலும் பிரமாண்ட வெற்றியைப் பெற்று கூட்டணி கட்சிகளின் உதவியுடன் தங்களின் தவெக சர்க்காரை அமைத்துள்ளது. இப்படி இருக்கையில் புது சர்க்காருக்கு அவதூறு ஏற்படுத்துவதைப் போல நிர்வாகிகள் சிலர் நடந்துக் கொண்டிருப்பது அதிருப்பதியை ஏற்படுத்தியுள்ளது.வேலுர் மாவட்டம், வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உள்ளடங்கிய கணியம்பாடியில், தவெக ஒன்றியச் செயலாளர் ஒருவர் செங்கல் சூளை தொழிலாளர்களிடம் வலுகட்டாயமாக ரூ.1 லட்சம் மாமூல் கேட்டிருக்கிறார். இது குறித்து செங்கல் சூளை உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றனர். இது குறித்து அவர்கள் கூறுகையில்,”நாங்கள் காலங்காலமாக இங்கு செங்கல் சூளை நடத்தி வருகிறோம். இது எங்கள் குடும்ப தொழில். கடந்த 30 ஆண்டுகளாக இந்த தொழிலை செய்து வருகிறோம். இதைவிட்டால் எங்களுக்கு வேறு வேலை தெரியாது. ஆனால், இப்போது தவெக ஒன்றியச் செயலாளர் வந்து மாதம் ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டுமென மிரட்டுகிறார்.எங்களைப் போல தொழில் செய்யும் பலரையும் அவர் மிரட்டியிருக்கிறார். பணம் தரவில்லை எனில் வேலை நடக்காது என்றும், வேலை செய்ய விட மாட்டோம் என்றும் பயமுறுத்துகிறார். மேலிடத்தில் சொல்லிதான் இப்படி செய்வதாகவும், இந்த இடத்திற்கு வர லட்சக்கணக்கில் செலவு செய்திருப்பதாகவும், அதை திரும்ப எடுக்கத்தான் இப்படி வசூலிப்பதாகவும், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர் சொல்லிதான் இப்படி செய்வதாக கூறியிருக்கிறார்.தவெக சர்க்கார் அதிகாரத்திற்கு வந்து இன்னும் 30 நாட்கள் கூட ஆகவில்லை. ஆனால் அதற்குள் கட்சியின் பெயரை சிலர் இப்படி டேமேஜ் செய்கிறார்கள். என்னிடம் பணம் கேட்டு மிரட்டியதற்கு ஆதாரம் இருக்கிறது. உரிய நேரத்தில் வெளியிடுவேன். இந்த மிரட்டல் தொடர்பாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.வேலூர் மட்டுமல்ல.. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து விஷயத்தில் தவெகவினர் தொடர்ந்து சிக்கி வருகின்றனர். மாற்றம் என்று சொல்லிக்கொண்டு, மாற்றத்தை ஏற்படுத்திய முதலமைச்சராக தவெக தலைவர் ச. ஜோசப் விஜய் இருக்க வேண்டும். இப்படியான கட்டப்பஞ்சாயத்து விஷயங்களை விஜய் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று வணிகர்களும், பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

காட்பாடி அடுத்த வள்ளிமலை அருகே குடிதண்ணீர் வேண்டி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்! வேலூர், மே 24-வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், வள்ளிமலை அருகே பல கிராமங்களுக்கு சரியாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து புகார்கள் இருந்து வந்தது. ஆனால் அரசு அலுவலர்கள் இதை கவனத்தில் கொள்ளாது அலட்சியப் போக்கில் செயல்பட்டனர். இதனால் பொறுத்து பொறுத்து பார்த்த கிராம பொதுமக்கள் பொறுமை இழந்து நேற்று திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வள்ளிமலை அருகே தங்களது வீடுகளில் உள்ள காலி குடங்களை எடுத்துக்கொண்டு வந்து சாலையின் நடுவில் வைத்து பெண்கள் மற்றும் ஆண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இரண்டொரு நாளில் தடைபடாத குடிநீர் விநியோகம் செய்ய வழிவகை செய்வதாக பொன்னை போலீசார் பொதுமக்களுக்கு உத்தரவாதம் அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் வள்ளிமலைப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டது குறிப்பிடத்தக்கது.

காட்பாடி போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண எம்எல்ஏ தீவிர ஆலோசனை !வேலூர் ,மே 24 -காட்பாடி சந்திப்பு ரயில் நிலையம் முதல் வேலூர் கிரீன் சர்க்கிள் வரை நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண காட்பாடி எம்எல்ஏ டாக்டர் சுதாகர், மாநில நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் தனசேகர் ஆகியோர் இன்று தீவிர ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கட்டமைப்பு திட்டங்களை விரைந்து செயல்படுத்தவும், நெடுஞ்சாலை துறையுடன் இணைந்து கூட்டு நடவடிக்கை எடுக்கவும் முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மிகவும் சிரமம் அடைவதாக இந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கனரக வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட நேரங்களில் தவிர 24 மணி நேரமும் இந்த வழித்தடத்தில் இயங்குவதாக எம்எல்ஏ புகார் தெரிவித்தார். குறிப்பாக கனரக வாகனங்கள் செல்வதை குறைந்தபட்சம் எவ்வளவு தடை செய்ய முடியுமோ அவ்வளவு தடை செய்ய போக்குவரத்து பிரிவு போலீசாரும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்எல்ஏ வலியுறுத்தினார். இதையடுத்து இதுபோன்ற காரணங்களை நடைமுறைப்படுத்த, மாற்று வழித்தடங்களில் கனரக வாகனங்களை திருப்பி விடவும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் உறுதி அளித்தார்.

வாலாஜாபேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப்புக்கு மர்ம நபர்கள் இரவில் தீவைப்பு!வேலூர், மே 24-ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வட்டாட்சியர் வாகனத்தை நள்ளிரவு நேரத்தில் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர் மர்மநபர்கள்.வாலாஜாபேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வட்டாட்சியர் ஜூப்பை நேற்று (23ம் தேதி) நள்ளிரவு 1 மணி அளவில் மர்மநபர்கள் யாரோ தீயிட்டு கொளுத்தியதாக தெரிகிறது.இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வட்டாட்சியர் நடராஜன் மற்றும் வருவாய் துறை குழுவினர் உடனடியாக ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் எரிந்து கொண்டிருந்த ஜீப்பை தண்ணீர் பீய்த்து அடித்து தீயை அணைத்தனர். மேலும் இதுகுறித்து வாலாஜாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர புலன்விசாரணை நடத்தி வருகின்றனர். வாலாஜாபேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைத்து விட்டுச் சென்ற ஜீப்பை மர்ம நபர்கள் இரவில் தீயிட்டுக் கொளுத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சாலை விபத்தில் மூளை சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் மருத்துவமனைக்கு தானம்!வேலூர், மே 23-திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் வசித்து வந்தவர் 36 வயதான மதன்குமார் குப்பன்ராஜ், நெடுஞ்சாலைத் துறையில் தட்டச்சுப் பணியாளராகப் பணிபுரிந்து வந்தார் . அவர் மே மாதம் 17 அன்று இருசக்கர வாகனத்தில் பயணித்தபோது சறுக்கி விழுந்தார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி , மே 21 அன்று இரவு 7 மணிக்கு அவர் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டார். குடும்ப உறுப்பினர்களின் விருப்பத்தின்படி அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. அவரது மனைவி பரிமளா இல்லத்தரசி. அவருக்கு ஏழு வயதுடைய ஒரு மகளும், நான்கு வயதுடைய ஒரு மகனும் உள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் வசித்து வந்தவர் 36 வயதான மதன்குமார் குப்பன்ராஜ், நெடுஞ்சாலைத் துறையில் தட்டச்சுப் பணியாளராகப் பணிபுரிந்து வந்தார் . அவர் மே மாதம் 17 அன்று இருசக்கர வாகனத்தில் பயணித்தபோது சறுக்கி விழுந்தார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி , மே 21 அன்று இரவு 7 மணிக்கு அவர் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டார். குடும்ப உறுப்பினர்களின் விருப்பத்தின்படி அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. அவரது மனைவி பரிமளா இல்லத்தரசி. அவருக்கு ஏழு வயதுடைய ஒரு மகளும், நான்கு வயதுடைய ஒரு மகனும் உள்ளனர்.மூளைச்சாவு அடைந்த அவரது உடல் உறுப்புகள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிஎம்சி மருத்துவமனை மற்றும் வேலூரில் உள்ள ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மையத்திற்கும் தானமாக அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இத்தகவலை வேலூர் சிஎம்சி மருத்துவமனையின் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் துரை ஜாஸ்பர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா திரையரங்குகளில் டிக்கெட் விலையை ரூ.250 ஆக உயர்த்த தமிழக முதல்வர் விஜய்க்கு கோரிக்கை மனு!வேலூர்,மே 23-தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் சினிமா டிக்கெட் கட்டண விலை உயர்வுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என தமிழக முதல்வர் விஜய்க்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மல்டி ஃபிளக்ஸ் திரையரங்குகளில் ஒரு டிக்கெட்டுக்கு ரூபாய் 190, சிங்கிள் ஸ்கிரீன் திரையரங்குகளில் ரூபாய் 150 என தற்போது கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணத்தை ரூபாய் 250 ஆக உயர்த்த வேண்டுமென திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். உள்ளூர் பொழுதுபோக்கு வரியையும் நீக்கி உத்தரவிட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த கோரிக்கை மனுவை தமிழக முதல்வர் விஜய்க்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் சமர்ப்பித்துள்ளனர். இதனால் திரையரங்குகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்படுமா? அல்லது பழைய கட்டணமே தொடருமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து திமுக சார்பில் கள ஆய்வு!வேலூர், மே 22-நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் மற்றும் களப்பணிகளின் நிலை குறித்து கள ஆய்வு மேற்கொள்ள திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, வேலூர் தெற்கு மாவட்டம், குடியாத்தம் சட்டமன்ற தொகுதி, பேரணாம்பட்டு தெற்கு, ,வடக்கு ஒன்றிய, நகர நிர்வாகிகளுடனான கள ஆய்வு கூட்டம் வேலூரில் நடந்தது. மாநிலங்களவை உறுப்பினர் கான்ஸ்டன்டைன் இரவீந்திரன் மற்றும் கழக சட்டத்துறை இணை செயலாளர் I.பரந்தாமன் தலைமையிலும், வேலூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் ஒருங்கிணைப்பிலும் வேலூரில் நடைபெற்றது.

21.05.2026வியாளன் மாலை பெரியநாயக்கன்பாளையம் ஜடல்நாயுடுவீதி பகுதியில் பத்தாம்வகுப்பு பனிரெண்டாம் வகுப்பில் இந்த ஆண்டு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா அவர்களின் அடுத்த முயற்சிக்கான ஊக்குவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கவுன்சிலர் தோழர் நவ. சிவராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேர்வில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோருடன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை இனிதாக்க மார்க்சிஸ்ட் கட்சியின் கிளைச்செயலாளர்கள் தோழர்கள் ஆர். கருப்புசாமி. எஸ். இன்பவள்ளி. கே. வெங்கிடசாமி மற்றும் திரளானோர் பங்குபெற்றனர். இளைய தலைமுறையை பாராட்டி மகிழ்வதுடன் அவர்களின் எதிர்கால கடமைகளை நினைவூட்டும் விதமாக நிகழ்ச்சி அமைந்திருந்தது.