வேலூர் கோட்டை மைதானத்தில் டிஎஸ்பி சீருடையில் திரிந்த பெண்ணை கைது செய்த போலீசார்! வேலூர், ஜூன் 13 -வேலூர் கோட்டை மைதானத்தில் உள்ள பூங்காவில் ஒரு இளம்பெண் டிஎஸ்பி சீருடையில் வலம் வந்து கொண்டிருந்தார். அப்போது வேலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அவரைப் பார்த்து சந்தேகம் அடைந்த போலீசார் இதுகுறித்து வடக்கு காவல் ஆய்வாளருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஆய்வாளர் உத்தரவின் பேரில் அந்த பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று முறைப்படி போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் போலி டிஎஸ்பி உடையில் இருந்தது தெரியவந்தது. அவர் வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த நேமபந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த உமாமகேஸ்வரி (33).  இவரது கணவர் கூலி தொழிலாளி என்பதும் தெரிய வந்தது. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். உமா மகேஸ்வரி பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளதும் தெரிய வந்தது. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை வடபழனியில் தங்கி ஒரு வீட்டில் வேலை செய்துள்ளார். அந்த வீட்டில் 22 பவுன் நகை திருட்டு வழக்கில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதேபோல்  சென்னை பூக்கடை பகுதியில் உறவினர் வீட்டில் ரூபாய் 15,000 திருடியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வேலூர் மேல் அரசம்பட்டு பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவருக்கு அறிமுக நண்பராகி அந்த நபர் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க டிஎஸ்பி சீருடை அணிந்து வேலூருக்கு வந்துள்ளதாக போலீசாரிடம் அவர் தெரிவித்தார். ஆண் நண்பர் வர கால தாமதமானதால் வேலூர் காவலர்களிடம் சிக்கிக் கொண்டுள்ளார் உமாமகேஸ்வரி. உமாமகேஸ்வரியிடம் வேலூர் வடக்கு போலீசார் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்துக் கொண்டிருந்த வேள