
கே. வி. குப்பம் அடுத்த காவனூரில் பாதாள கால்வாய் அமைப்பதை தடுத்து நிறுத்த கோரி பொதுமக்கள் திடீர் முற்றுகை போராட்டம்!வேலூர், மே 26-வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த காவனூர் பகுதியில் பாண்டியன் மதகு கால்வாயில் நீரை விடுவதற்கு ஏரியிலிருந்து பாதாள கால்வாய் அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. இந்த புதிய கால்வாய் தெருவின் மத்தியில் செல்கிறது. இதனால் அருகில் உள்ள வீடுகள் சேதம் அடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது போக்குவரத்து, குடிநீர் ஆகியவற்றுக்கு கடும் இடையூறு ஏற்படும் என ஊர் மக்கள் கருதுகின்றனர். இதனால் பாதாளத்தில் கால்வாய் அமைக்கும் பணியை நிபந்தனைகள் இல்லாமல் நிறுத்த வேண்டும் என கிராம பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனையும் மீறி பணிகள் நடைபெற்று வந்தது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நீர்வளத்துறை அலுவலர்கள் மற்றும் வருவாய் துறை அலுவலர்களை திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.இதனால் அந்த பகுதியில் திடீரென பதட்டம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கே. வி. குப்பம் தொகுதி எம்எல்ஏ தென்றல் குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் அமைதியாக பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போகச் செய்ததுடன் பாதாள கால்வாய் அமைக்கும் பணியை தடைபடாது நடைபெற ஏற்பாடுகளை செய்தார். இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் திடீர் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.










Leave a Reply