ஐயா வணக்கம்🙏 கிராம ஊராட்சி விதிகளின்படி கிராம சபா கூட்டமானது அந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குக்கிராமங்களில் சுழற்சி முறையில் நடத்தப்பட வேண்டும் என்பது விதிமுறை.. ஆனால் தொடர்ந்து பலமுறை காளப்பநாயக்கன்பாளையத்தில் மட்டுமே நடைபெற்று வருகிறது.. ஆதலால் இந்த முறை காளப்பநாயக்கன்பாளையத்தை தவிர்த்து மீதமுள்ள நான்கு குக் கிராமங்களில் ஏதாவது ஒரு இடத்தில் கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும் என பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.. அப்போதுதான் அந்தப் பகுதி மக்கள் தங்களுடைய குறைகளையும் அந்த பகுதியில் நடைபெற வேண்டிய வளர்ச்சி பணிகளையும் விவாதிக்க ஏதுவாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.. நன்றி🙏

பிரம்மபுரம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் தட்டு முட்டு சாமான்களை அடுக்கி வைக்கும் இடமாக மாறியுள்ள அவலம்!வேலூர், ஆக.13-வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், பிரம்மபுரம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் இயங்கி வருகிறது. இதற்கு முன்னர் இங்கு பணிபுரிந்த கிராம நிர்வாக அலுவலர் ரேகா எதையும் கண்காணிக்காமல், கவனிக்காமல் விட்டுவிட்டு ஏனோதானோ என்று கடமைக்கு பணிபுரிந்து வந்தார். அதன் விளைவு தற்போதும் எதிரொலித்து வருகிறது. அதாவது பணியிட மாற்றத்தில் ரேகா சென்ற பிறகும் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் தட்டு முட்டு சாமான்களை அடுக்கி வைக்கும் இடமாக தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த அவலம் மாறிய பாடு இல்லை. புதியதாக கிராம நிர்வாக அலுவலராக பிரம்மபுரத்துக்கு வந்துள்ள புதிய கிராம நிர்வாக அலுவலரும் கண்டும் காணாமல் விட்டுவிட்டு அவரது பாக்கெட்டை நிரப்பும் வேலையில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக அங்குள்ள பொதுமக்கள் தரப்பில் புகாராக கூறப்படுகிறது. வீடு கட்டும் பொருள்கள் தட்டுமுட்டு சாமான்கள் என அனைத்தையும் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை சுற்றி அடுக்கி வைத்து அந்த அலுவலகத்தின் தோற்றத்தையே மறைத்து அந்த இடத்தையே அசிங்கப்படுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதை பார்த்து கண்டிக்க வேண்டிய கிராம நிர்வாக அலுவலர் யார் வீட்டு இழவோ பாய் போட்டு அழுகிறது என்ற ரீதியில் அவர் உண்டு அவரது வேலை உண்டு என்று எதையும் கண்டும் காணாமல் உள்ளார். தற்போது பிரம்மபுரம் கிராம நிர்வாக அலுவலர் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் புறம்போக்கு இடம் என்பது இல்லாத அளவிற்கு அனைத்தையும் கூறு போட்டு விற்று விட்டு சென்று விட்டார் ரேகா என்று சொன்னால் அதுதான் நிதர்சன உண்மை. இப்படி அரசின் சொத்துக்கள் பல சமூக விரோதிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும், மிரட்டும் ரவுடிகளுக்கும் பாகம் பிரித்து தரப்பட்டுள்ளது பிரம்மபுரத்தில் என்று சொன்னால் அதுதான் நிதர்சன உண்மை. புறம்போக்கு இடம் மட்டுமல்ல, தரிசு நிலங்கள் மற்றும் பஞ்சமி நிலங்களை கூட விட்டு வைக்காமல் அனைத்தையும் ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர். மீட்க வேண்டிய கிராம நிர்வாக அலுவலர்கள் கைகட்டி வேடிக்கை பார்த்து வருகின்றனர். வருவாய்த்துறை என்ற பெயர் இதற்கு சரியாக பொருந்துகிறது என்றே சொல்லலாம். வருவாயை தனக்கு எடுத்துக் கொண்டு செல்வதிலேயே கிராம நிர்வாக அலுவலர்கள் குறியாக உள்ளனர் என்று சொன்னால் அதுதான் உண்மையிலும் உண்மை. இதை யாராலும் மறுக்க முடியாது. இன்றைக்கு எவ்வளவு கல்லா கட்டுவது என்ற ரீதியிலேயே கிராம நிர்வாக அலுவலர்கள் தினமும் பணிக்கு வருகின்றனர். அதிலும் ஒரு சிலர் தான் என்று சொன்னால் அதுதான் உண்மை. ஏதோ ஒரு பத்து சதவீதம் பேர் கடமையை உணர்ந்து தனது குடும்ப சூழ்நிலையை எண்ணிப் பார்த்து பணியாற்றுகின்றனர். ஆனால் பலர் தான்தோன்றித்தனமாகவும், தெனாவெட்டாகவும் பணியாற்றி வருவதை யாரும் மறுக்க முடியாது. இப்படி அரசு சொத்தை யார் வீட்டு சொத்து என்ற ரீதியில் விட்டு விட்டு வேடிக்கை பார்ப்பதை விட்டு விட்டு அரசு சொத்துக்களை மீட்க வேண்டும் என்ற மனரீதியில் விஏஓக்கள் மாற வேண்டும் என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. தான் வேலை செய்யும் இடம் கோயில் போன்றது என்பதை நினைவில் கொண்டு பணியாற்றினால் இது போன்ற அவலங்கள் தொடராது, வளராது, அடியோடு மறைந்து போகும் அளவிற்கு நிலைமை மாறும் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. மறந்தும் இருந்து விடக்கூடாது. இது போன்ற அலட்சியப் போக்கை கைவிட்டு விட்டு நாம் இருக்கும் இடத்தையும், நமது சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள அலுவலகம் அலுவலகம் போல் காட்சியளிக்க வேண்டும் என்ற மனரீதியில் கிராம நிர்வாக அலுவலர்கள் பணியாற்ற முன்வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், கிராம பொதுமக்களும், நாடு நலம்பெற வேண்டும் என்று விரும்பும் நடுநிலையாளர்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். கிராம நிர்வாக அலுவலர்கள் இனியாவது தான் வேலை செய்யும் இடத்தையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ளவும், யாரையும் ஆக்கிரமிப்பு செய்யாமல் பார்த்துக் கொள்ளவும் முன்வர வேண்டும் என்பதே அனைவரது ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறியுள்ளது. வருவாய்த்துறை உயர் அதிகாரிகள் அவ்வப்போது கிராம நிர்வாக அலுவலர்கள் பணியாற்றும் இடங்களுக்கு நேரில் சென்று கள ஆய்வு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் திடீர் போர்க்கொடி தூக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருவலத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் பல்வேறு முறைகேடுகள் எதிரொலி: மாவட்ட வழங்கல் அலுவலர் திடீர் ஆய்வு!வேலூர், ஆக. 13-வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், திருவலத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கு அமைந்துள்ளது. இங்கிருந்து காட்பாடி மற்றும் கே. வி .குப்பம் தாலுகாக்களுக்கு அத்தியாவசிய ரேஷன் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. அப்படி அனுப்பி வைக்கப்படும் பொருள்களில் எடை குறைவு, பொருட்கள் சேதம், மழையில் நனைந்து துர்நாற்றம் வீசுதல் உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளை ரேஷன் கடை ஊழியர்கள் வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசின் கவனத்திற்கு அவ்வப்போது தெரிவித்த வண்ணம் உள்ளனர். இப்படி சேதமடைந்த பொருள்கள் மற்றும் துர்நாற்றம் வீசும் பொருட்கள் மற்றும் எடை குறைவாக உள்ள பொருட்கள் ஆகியவற்றை மீண்டும் திருவலத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கிற்கு கொண்டு வந்து ஒப்படைத்து விட்டு மீண்டும் வேறு பொருட்களை அவர்கள் கொண்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ரேஷன் கடை விற்பனையாளர் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் பணியாற்றும் சூப்பர்வைசர் பணியாளர்களுக்கு இடையில் இதனால் கடும் விவாதங்கள், வாக்குவாதங்கள் மற்றும் சண்டை போக்கு தொடர்ந்து இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலை தினசரி ஒரு அன்றாட நிகழ்வாக மாறிவிட்டதும் குறிப்பிடத்தக்கது. தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி மலர்ந்த நிலையில் இந்த அசாதாரண சூழ்நிலை ரேஷன் கடைகள் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கு மேலாளர்களுக்கும் இடையில் ஒரு பனிப்போராக தொடர்ந்து இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரேஷன் கடை ஊழியர்கள் தரும் புகார்களின் அடிப்படையில் வேலூர் மாவட்ட வழங்கல் அலுவலர் 12 .8 .2026 புதன்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் திருவளத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கு பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டார். அவர் அங்குள்ள இருப்பு மற்றும் உணவுப் பொருட்களின் தரம் மழையில் ஏதாவது நனைந்து துர்நாற்றம் வீசுகின்றதா எடை பொட்டலங்கள் சரியான எண்ணிக்கையில் ழழ செய்யப்படுகிறசன்ர்தா? உள்ளிட்ட பல்வேறு கள ஆய்வுப் பணிகளை நேரில் ஆராய்ந்து பார்த்துவிட்டு பின்னர் அங்குள்ள் கோப்புகளையும் சரி பார்க்கும் பணியில் அவர் ஈடுபட்டார் அப்போதும் இந்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் பாதுகாவலராக பணியில் உள்ளவர்கள் முதல் இரண்டு சூப்பிரஸ்வங் இரண்டு ஆண்டுகளான செல்வம் மற்றும் சரவணன் ஆகியோர் மற்றும் பணியாளர்கள் மற்றும் லோடுமேன்கள் என அனைவரும் தங்களுக்கு நிகர் யாருமில்லை என்பது போல நெஞ்சம் நிமிர்த்திக் கொண்டு யாரையும் மதிக்காமல் தெனாவட்டாக நடந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது .எங்களை யாரும் ஒன்றும் செய்ய இயலாது என்ற ரீதியில் அவர்கள் நடந்து கொண்டது மற்றும் அவர்களது நடவடிக்கை வெட்கக்கேடானது வேதனைக்குரியதாகும் என்று மாவட்ட வழங்கள் அலுவலர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் திருவலம் குடோனிலிருந்து கொண்டு செல்லப்படும் அரிசி பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருள்களில் எடை குறைவு மற்றும் மழையில் நனைந்து துர்நாற்றம் வீசுவது தொடர்கதையாகவே மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது பல ரேஷன் கடை விற்பனையாளர்கள் பாடடைந்த பழுதடைந்த மொட்டைகளை திரும்பக் கொண்டு வந்து மாற்றிக் சென்ற வண்ணம் உள்ளனர் சிலர் தனது கடைக்கு வந்த அத்தியாவசிய பொருட்களை எந்த நிலையில் இருந்தாலும் அதை அப்படியே நுகர்வோர்களுக்கு விநியோகம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் இந்த நிலை மாற வேண்டும் குறிப்பாக இந்த சூப்பர் நண்டுகளாக பணிபுரியும் தெருவிளத்தில் உள்ள செல்வம் மற்றும் சரவணன் ஆகியவர் மீது துரை ரீதியான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் இவர்களால் பாதிக்கப்பட்டுள்ள நுகர்வோர்களும் ஒட்டுமொத்த கோரிக்கையாக அரசின் கவனத்திற்கு முன் வைத்துள்ளனர் என்பதை குறிப்பிடத்தக்கது வேலூர் மாவட்ட நிர்வாகமும் மாவட்ட வளங்கள் அலுவலர் மற்றும் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை அமைச்சரும் இதுபோன்ற கிடங்குகள் மீது ஒரு கண் வைத்து உன்னிப்பாக கவனித்து பொதுமக்களுக்கு முறையாக தரமாக கிடைக்க வேண்டிய பொருள்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக மாறி உள்ளது தொடர்ந்து தரமான பொருட்களை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் 12ஆம் தேதி மாவட்ட வளங்கள் அலுவலர் கள ஆய்வு மேற்கொண்டார் 11 .8.2026 செவ்வாய்க்கிழமை சங்கங்களின் சார்பதிவாளர் கோபிநாத் இதய திருவலம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது..

செய்யாறில் சாலை விரிவாக்கப் பணி மீண்டும் தொடங்கிவிருவிறுப்பாக நடந்து வருகிறது:அதிகாரிகள் பார்வையிட்டு துரிதப்படுத்தும் பணியில் ஈடுபட்டு ள்ளனர் !செய்யாறு, ஆக. 12 -ஆற்காடு – திண்டிவனம் இடையே சாலை விரிவாக்கப் பணியானது செய்யாறில் மீண்டும் தொடங்கி விருவிறுப்பாக நடந்து வருகிறது. நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் சாலை பணிகளை பார்வையிட்டு வேகப்படுத்தி வருகின்றனர்.திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உட்பட்டது செய்யாறு நகரம். இங்கு ஆண்டிற்கு ஆண்டு மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு காரணம் கிராமப்புறங்களில் வசிப்பவர்கள், செய்யாறு நகரத்திற்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். இதன் காரணமாக இங்கு அரங்கேறி வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் செய்யாறில் புறவழிச் சாலை அமைக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. இது தவிர கடந்த ஆண்டு ராணிப்பேட்டை மாவட்டமான ஆற்காட்டில் இருந்து செய்யாறு, வந்தவாசி வழியாக திண்டிவனம் வரை உள்ள நெடுஞ்சாலை, நான்கு வழி சாலையாக விரிவுப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டது.கடந்த மே மாதம் முதல் வாரத்தில் தமிழகத்தில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த சாலை விரிவாக்கம் செய்யும் பணி மீண்டும் தொடங்கி விருவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது செய்யாறு அடுத்த சிறுங்கட்டூர் கிராமத்திலிருந்து செய்யாறு நகரத்திற்கு உட்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வரை 5 கிலோ மீட்டர் தூரம் கொண்ட சாலை விரிவாக்கப் பணிகளை ‘சுகன்யா கன்ஸ்ட்ரக்ஷ்ன் மதுரையைச்’ சேர்ந்த நிறுவனத்தினர் செய்து வருகின்றனர். இப்பணிகளை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் துரிதப்படுத்தி உள்ளனர். இந்த சாலைப் பணி இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இந்தப் பணிகளை செய்யாறு நெடுஞ்சாலைத் துறையின் கோட்ட பொறியாளர் சந்திரன், உதவி கோட்ட பொறியாளர் சுரேஷ், உதவி பொறியாளர் கோபி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சாலைப் பணிகளை தரமாகவும், பருவ மழைக்குள் முடிக்க வேண்டும் என, ஒப்பந்ததாரருக்கு உத்தரவையும் பிறப்பித்துள்ளனர்.

வேலூர் மாநகர காங்கிரஸ் நிர்வாகம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள்: மாநிலத் தலைமையிடம் புகார் அளிக்கப் போவதாக எத்திராஜ் தகவல்!வேலூர், ஆக.11-வேலூர் மாநகர காங்கிரஸ் கட்சி நிர்வாகம் தொடர்பாக பல்வேறு கேள்விகளையும் குற்றச்சாட்டுகளையும் எழுப்பியுள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பி.எஸ்.எஸ். எத்திராஜ், இது குறித்து கட்சியின் மாநிலத் தலைமையிடம் புகார் அளிக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், மாநகர காங்கிரஸ் தலைவர் வாஹித் பாஷாவின் கட்சி செயல்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். குறிப்பாக, மாநகர அளவிலான கட்சி கூட்டங்களில் மாநகரத்தின் பல்வேறு அணிகள், வார்டு தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உரிய முறையில் பங்கேற்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.காங்கிரஸ் கட்சியின் வர்த்தகர் பிரிவு, மாணவரணி, இளைஞர் காங்கிரஸ், மகளிரணி, ஓபிசி அணி, மனித உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.இரவு நேரங்களில் அதாவது நள்ளிரவுக்கும் மேல் காங்கிரஸ் கமிட்டி மாவட்ட அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு பல சமூக விரோதிகளுடன் உரையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் என்று காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் அதிர்ச்சி தகவல் கூறப்படுகிறது. பழைய மாவட்ட தலைவரையே மீண்டும் நியமிக்கப்பட வேண்டும் என்று நிர்வாகிகள் திடீர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.மேலும், கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் போராட்டங்களில் உண்மையான கட்சி தொண்டர்களுக்கு உரிய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், குறைந்த எண்ணிக்கையிலான நபர்களை மட்டுமே கொண்டு மாநகர அளவிலான கூட்டங்கள் நடத்தப்படுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.கட்சி நிதி மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக பெறப்பட்டதாகக் கூறப்படும் தொகைகள் தொடர்பாகவும் எத்திராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். கட்சிக்காக பெறப்பட்ட நிதிகளுக்கு முறையான கணக்கு மற்றும் வெளிப்படையான விவரங்கள் வெளியிடப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும், காந்தி சாலையில் கடைகள் தொடர்பான வசூல் மற்றும் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெறும் வரவு–செலவு நடவடிக்கைகள் குறித்தும் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.திருவாரூரில் காங்கிரஸ் கொடிகள் எரிக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து நடைபெற்றதாகக் கூறப்படும் போராட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்ற நிலையில், சில முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கவில்லை என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.இவ்வாறு பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் கேள்விகளை முன்வைத்துள்ள பி.எஸ்.எஸ். எத்திராஜ், சம்பந்தப்பட்ட மாநகர நிர்வாகம் இதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட மாநிலத் தலைவர்களை நேரில் சந்தித்து புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக வேலூர் மாநகர காங்கிரஸ் தலைவர் வாகித் பாஷா மற்றும் சம்பந்தப்பட்ட நிர்வாகிகளின் விளக்கம் கிடைத்தால், அதையும் வெளியிடத் தயாராக இருப்பதாக எத்திராஜ் தெரிவித்துள்ளார். இந்த புகார் வேலூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்குள் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் வேலூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பார்? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வேலூரில் ஆசிரியர் இல்ல கூட்டரங்கில் ஆசிரியர் நலன் மற்றும் கல்வி மேம்பாட்டு கழக பேரவை கூட்டம்!வேலூர், ஆக. 10-வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, பில்டர் பெட் சாலையில் உள்ள ஆசிரியர் இல்ல கூட்டரங்கில், ஆசிரியர் நலன் மற்றும் கல்வி மேம்பாட்டு கழகத்தின் பேரவை கூட்டம் கழகத் தலைவர் தமிழ்மணி தலைமையில் நடைபெற்றது. இதில் செயலவை உறுப்பினர் ஷீலா ராணி வரவேற்புரையாற்றினார். செயற்குழு உறுப்பினர் சித்ரா திருக்குறளை வாசித்தார். பொதுச் செயலாளர் செல்லமுத்து ஆண்டறிக்கையை சமர்ப்பித்து கடந்த ஆண்டின் செயல்பாடுகளை விளக்கினார். பொருளாளர் ஞானசிகாமணி வரவு-செலவுத் திட்ட அறிக்கையை தாக்கல் செய்தார். திருவருள் உலகநாதன், சேட்டு, சுந்தரேசன், சொக்கலிங்கம் மற்றும் ஜி.டி. பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இக்கூட்டத்தில் ஆசிரியர் இல்லத்தின் கூட்ட அரங்குகளை புதுப்பித்தல், கூடுதல் தங்கும் அறைகள் அமைத்தல், செயற்குழு, செயலவை மற்றும் பேரவை உறுப்பினர்களுக்கு ஆண்டுதோறும் சுற்றுலா ஏற்பாடு செய்தல், ஆசிரியர் இல்ல மடல் மற்றும் அடுத்த ஆண்டிற்கான காலண்டர் தயாரிப்புக் குழு அமைத்தல் உள்ளிட்ட மொத்தம் 11 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.மேலும், கழகத் தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளருக்கு அறங்காவலர் துரை கருணாநிதி நினைவு பரிசுகளை வழங்கி கௌரவித்தார். இதில் செயற்குழு உறுப்பினர்கள் விநாயகம், சோகாராமன், குமாரசாமி, வேலவன், ஜெயபால், முருகன், மாணிக்கம், அபரஞ்சிதம், சித்ரா, குணபூஷணம், சோபனா, சௌதாராணி, டைட்டஸ், தேற்றரவாளன், நூர்முகமது உள்ளிட்ட செயலவை, செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் என 75க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் உள்ளூர் செயலாளர் அல்போன்ஸ்கிரி நன்றியுரை வழங்க கூட்டம் நிறைவுபெற்றது.

செய்யாறில் வி. தி .லீடர்ஸ் கட்சி சார்பில் தனியார் பள்ளிக்குமரக்கன்றுகள் வழங்கும் விழா!செய்யாறு, ஆக. 9 -செய்யாறில் வி. தி. லீடர்ஸ் கட்சி சார்பில் தனியார் பள்ளிக்கு மரக்கன்றுகளை பொறுப்பாளர்கள் வழங்கி மகிழ்ந்தனர்.பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகிய அண்ணாமலை கடந்த ஜூன் மாதம் வி. தி. லீடர்ஸ் என்ற புதிய கட்சியை தொடங்கினார். அப்பொழுது ஒரு சில வாரங்களிலே 20 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம் பெண்கள், பல்வேறு கட்சியைச் சேர்ந்த பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் என அண்ணாமலையின் புதிய கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்த தகவல் மற்ற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் திரும்பிப் பார்க்கும் வகையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.தமிழகத்தில் ‘போதை – கஞ்சா’ ஆகியவற்றை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என, அண்ணாமலை தனது கட்சி தொண்டர்களுடன் உறுதிமொழியும் எடுத்துக் கொண்டார்கடந்த மாதம் பொள்ளாச்சியில் நடந்த கட்சி மாநாட்டிலும் இது குறித்து விவரமாக அண்ணாமலை பேசினார். ஆகஸ்ட் மாதம் முழுவதும் கட்சியில் இணைந்தவர்கள் அனைவரும் தங்களது மாவட்டங்களில் மரக்கன்றுகளை நடவு செய்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்ற கருத்தையும் அண்ணாமலை பதிவு செய்தார். இதை ஏற்றுக் கொண்ட வி. தி. லீடர்ஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் கடந்த 1ம் தேதி முதல் அந்தந்த மாவட்டங்களில் மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.இதேபோல் பொது இடங்களிலும் மரக்கன்றுகளை நடவு செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வரிசையில் செய்யாறைச் சேர்ந்த ஆ.சரவணன், முனைவர் சக்தி நாராயணன், ஜெயராஜ் ஆகியோர் இணைந்து செய்யாறு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே உள்ள விஸ்டம் வித்யாசாகர் என்ற தனியார் சி.பி.எஸ்.சி., பள்ளிக்கு புங்கன், மா, நாவல், பூவரசன் உள்ளிட்ட பத்து வகையான 100 மரக்கன்றுகளை நேற்று வழங்கி மகிழ்ந்தனர்.இந்த மரக்கன்றுகளை பள்ளியின் முதல்வர் அருள் பெற்றுக்கொண்டு, பள்ளி வளாகத்தில் நடவு செய்தார். அத்துடன் இந்த மரக்கன்றுகளை தினமும் தண்ணீர் ஊற்றி வளர்த்தெடுத்து மரமாக்குவோம் என, முதல்வர் அருள், வி. தி .லீடர்ஸ் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு உறுதி அளித்தார். இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் என, பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.