தமிழக அரசின் உத்தரவுப்படி போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு, போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி இன்று ஆலாந்துறை கலைமகள் அறிவியல் மற்றும் கலைக் கல்லூரியிலும் மற்றும் கலைமகள் பொறியியல் கல்லூரியிலும் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளின் முன்னிலையில் உறுதிமொழி எடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஆலந்துறை காவல் ஆய்வாளர் திரு. முத்துக்குமார் மற்றும் பொறியியல் கல்லூரியின் முதல்வர் திரு. மணிகண்ட சுப்பிரமணியன், மற்றும் கலை& அறிவியல் கல்லூரியின் முதல்வர் திருமதி. மாலா மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் அனைவரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்….