Archives
August 2026
July 2026
June 2026
May 2026
April 2026
March 2026
February 2026
January 2026
December 2025
November 2025
October 2025
September 2025
Categories
Uncategorized
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
செய்திகள்
நிகழ்ச்சிகள்
விளையாட்டு
Meta
Log in
Entries feed
Comments feed
WordPress.org
செய்திகள்
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
நிகழ்ச்சிகள்
வர்த்தகம்
விளையாட்டு
உலக செய்திகள்
Uncategorized
வேலூர் பி.டி.ஓ அலுவலகத்தில் தலைகீழாக தேசியக்கொடி ஏற்றியதாக புகார்
மேட்டுப்பாளையத்தில் சிஐடியு சார்பில் சுதந்திர தின விழா: முதியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கோலாகலக் கொண்டாட்டம்
அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழா
மேட்டுப்பாளையத்தில் சிஐடியு சார்பில் சுதந்திர தின விழா: முதியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கோலாகலக் கொண்டாட்டம்
வேலூரில் 13 பனை மற்றும் 4 ஈச்ச மரங்கள் தீ வைத்து அழிப்பு:மாவட்ட ஆட்சியர், – மரங்களை அழித்தவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்!வேலூர், ஆக. 15-வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட ரங்காபுரம் – காட்பாடி தாலுகா பிரம்மபுரம் பாலாற்றின் குறுக்கே இணைப்பு சாலை அமைக்கும் பணிகள் அண்மையில் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், சாலைப் பணிகளை மேற்கொண்ட நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரர் தரப்பினர், சாலையிலிருந்து சுமார் 100 அடி தொலைவில் இருந்த 13 பனை மரங்கள் மற்றும் 4 ஈச்ச மரங்களை வெட்டி தீ வைத்து அழித்துள்ளதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.இதன் காரணமாக சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்ந்து வந்த 13 பனை மரங்களும், 4 ஈச்ச மரங்களும் கருகி சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் அக்கறை கொண்ட சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இந்தச் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.பனை மரம் தமிழ்நாட்டின் மாநில மரமாக விளங்குவதுடன், நிலத்தடி நீர் பாதுகாப்பு, மண் அரிப்பு தடுப்பு மற்றும் சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பல ஆண்டுகள் பராமரித்து வளர்க்க வேண்டிய மரங்களை தேவையின்றி அழித்திருப்பது மனிதநேயமற்ற செயல் மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலுக்கு எதிரான செயலாகவும் கருதப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும், தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்புச் சட்டம், 1994 (Tamil Nadu Preservation of Palmyrah Trees Act, 1994), இந்திய வனச் சட்டம், 1927 மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம், 1986 ஆகிய சட்டங்களின்படி உரிய அனுமதியின்றி பனை மரங்களை வெட்டுதல், சேதப்படுத்துதல் அல்லது அழித்தல் குற்றமாகும். இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் இதனைக் கண்டும் காணாமல் முற்றிலுமாக வேடிக்கை பார்த்த கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், வேலூர் தாசில்தார் மீதும் கடுமையான நடவடிக்கைகளும், அபராதம் மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.எனவே, இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பி.எஸ். லீலா அலெக்ஸ் உடனடியாக விசாரணை நடத்தி, மரங்களை அழித்தவர்களை அடையாளம் கண்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பை ஈடுசெய்யும் வகையில் குறைந்தபட்சம் 100 பனை மரக்கன்றுகள் மற்றும் 50 ஈச்ச மரக்கன்றுகள் நடவு செய்து, இதற்கு நஷ்ட ஈடாக குறைந்தபட்சம் 50 லட்சம் அபராதம் விதித்து அரசு செலுத்த உத்தரவிட வேண்டியும், தற்போது நடும் மரங்களை அவற்றை பராமரிக்க நெடுஞ்சாலைத் துறை மற்றும் ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கீ.வ.குப்பம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின்’தேச உணர்வு’ ஊர்வலம்!வேலூர், ஆக. 15-ஆக.15.08.2026 – இந்திய திருநாட்டின் 80 -ஆம் ஆண்டு சுதந்திர தின திருநாளாகும்.அந்த திருநாளை இந்தியர்கள் அனைவரும் மகழ்ச்சியுடன்கொண்டாடி வருகின்றனர்.அந்த வகையில்,வேலூர் மாவட்டம்,கீ.வ.குப்பம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் அக.14-அன்று ஒன்றிணைந்து’தேச உணர்வு!’ என்கிற ஓர் தேசப்பற்றை வெளிப்படுத்தும் உன்னதமான ஊர்வலத்தை பள்ளி தலைமை ஆசிரியர்.சாந்தி தலைமையில் நடத்தினர்.கீ.வ.குப்பம் வட்டாட்சியர்.பாலச்சந்திரன் கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.உதவி தலைமை ஆசிரியர்கள். சங்கீதா,ஹேமலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாணவிகள், இன்னுயிர் தந்து நாட்டிற்கு சுதந்திரம் வாங்கித் தந்த தேசத் தலைவர்களின் புகைப்படங்களையும்,தேசியக்கொடிகள் மற்றும்மூவர்ண பலூன்களை கைகளில் ஏந்தி,தேச பக்தி கொண்ட வீர முழக்கங்களை எழுப்பியவாறு ஊர்வலம் வந்தனர்.மேல்மாயில் சாலையிலுள்ள பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்டு,கீ.வ.குப்பம் பேருந்துநிலையம் கடந்து,காவல் நிலையம் வரைசென்று ஊர்வலம் மீண்டும்பள்ளியை வந்தடைந்தது.இந்நிகழ்வில்,கீ.வ.குப்பம் காவல் நிலைய ஆய்வாளர் விஜயபாஸ்கர், ,பள்ளி கட்டட குழு பொருளாளர் நந்தகோபால், ஆசிரியர்கள் பப்பீனா, அருள் ஜோதி, ராதா, கலைவாணி, கணகேஸ்வரி, அமுதவல்லி,ஷோபா மற்றும் மகிழு முற்ற மாணவ அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழியை ஆசிரியர் சீனிவாசன் வாசிக்க மாணவிகள் அனைவரும் உறுதிமொழியை ஏற்றனர்.மாணவிகள் மேலும்,விடுதலைக்கு வித்திட்ட தலைவர்களின் உருவங்களில் மாறு வேடம் அணிந்து,பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றனர்.தேசிய ஒருமைப்பாட்டு ஊர்வலத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மகிழ் முற்ற மாணவ அமைச்சர்கள் செய்திருந்தனர்.
உள்ளாட்சி நிதி தணிக்கை ஊழியர் சங்கம் மற்றும் ஆய்வாளர் மன்றம் சார்பில் நிதி அமைச்சருக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பு!வேலூர், ஆக. 14-நேற்று 13.8.26 அன்று உள்ளாட்சி நிதி தணிக்கை ஊழியர் சங்கம் மற்றும் ஆய்வாளர் மன்றம் சார்பில் மாண்புமிகு நிதியமைச்சரை நேரில் சந்தித்து பட்ஜெட் தாக்கல் செய்ததற்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. மேலும் உள்ளாட்சி நிதி தணிக்கை துறையின் சிறப்பு தணிக்கை அறிக்கையினை மாண்புமிகு முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றதற்கும், அதுகுறித்து சட்டசபையில் பேசி தணிக்கை துறைகளுக்கு கௌரவம் அளித்தமைக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. அத்துடன் CAMS ல் தற்போது விடுப்பு எடுத்தால் தணிக்கை பணி நீட்டிப்பு செய்ய நடவடிக்கை எடுத்தது, மாற்றுத் திறனாளிகளுக்கு பணித்திட்டம் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை மேற்கொண்டது மற்றும் தொலைதூர பணி திட்டங்களை ஒரு சில மாவட்டங்களில் மாற்றி அமைக்க நடவடிக்கை மேற்கொண்டது குறித்து,வேலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொலைதூர பணித்திட்டங்களை விரைவில் மாற்றி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் உறுதியளித்துள்ளார்.உள்ளாட்சி நிதி தணிக்கை ஊழியர் சங்கம் மற்றும் ஆய்வாளர் மன்றத்தின் கோரிக்கையின் படி அனைத்து தணிக்கையாளர்களுக்கும் விரைவில் மடிக்கணினிகள் வழங்க உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இந்நிகழ்வில் ஊழியர் சங்க மாநிலத் தலைவர் ஆர்.பாபு, பொதுச் செயலாளர் சீனி செந்தில், ஆய்வாளர் மன்ற மாநில தலைவர் பா.ஐயப்பன், பொதுச் செயலாளர் இ.பிரகாஷ், பொருளாளர் க.தாமரைச்செல்வன் (ம) துணைத் தலைவர் த.ஞானவேல் ஆகியோர் இந்த அமைச்சரை நேரில் சந்தித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவ்வாறு தமிழ்நாடு உள்ளாட்சி நிதி தணிக்கை ஊழியர் சங்கம் மற்றும் ஆய்வாளர் மன்றத்தின் மாநில மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பன்றி மீது இருசக்கர வாகனம் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் இளம்பெண் பலி!வேலூர், ஆக. 14-பொன்னை அருகே இருசக்கர வாகனத்தின் குறுக்கே பன்றி வந்ததால் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.வேலூர் மாவட்டம்,காட்பாடி தாலுகா K.N. பாளையத்தைச் சேர்ந்தவர் துரை. இவரது மகள் தவமணி (24). இவர் ராணிப்பேட்டை மாவட்டம், நெல்லிக்குப்பத்தில் உள்ள ‘Fun School’ என்ற தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.இவருடன் ராணிப்பேட்டை, நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்பவரும் அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.இந்நிலையில் கடந்த 11.08.2026 அன்று காலை தட்சிணாமூர்த்தி தனது இருசக்கர வாகனத்தில் தவமணியை அழைத்துக் கொண்டு வேலைக்குச் சென்று கொண்டிருந்தார். வாகனம் பொன்னை – சித்தூர் சாலை சீனிவாசபுரம் கிராமம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாகச் சாலையின் குறுக்கே பன்றி ஒன்று ஓடி வந்துள்ளது.பன்றி குறுக்கே வந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த தட்சிணாமூர்த்தி வாகனத்தை பன்றியின் மீது மோதி கீழே விழுந்தார். இதில் பின்னால் அமர்ந்திருந்த தவமணி சாலையில் தூக்கி வீசப்பட்டார். இந்த விபத்தில் அவரது பின்பக்க தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.உடனடியாக அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ராணிப்பேட்டை மாவட்டம், பூட்டுத்தாக்கு பகுதியில் உள்ள CMC மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த தவமணி சிகிச்சை பலனின்றி 13ம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்து பொன்னை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டுப்பாளையம்நகராட்சி நிர்வாகத்தின் மெத்தனத்தால் சீர்குலையும் சுகாதாரம் கொடிய நோய் தொற்று அச்சத்தில் பொதுமக்கள்!
தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசியக் கீதத்திற்கு அவமரியாதை: விசாரணை கோரி, ஜனாதிபதி, பிரதமர் தமிழகமுதல்வர் உள்ளிட்டோருக்கு சிவசேனா உள்ளிட்ட இந்து அமைப்புக்கள் மனு!கோவை, ஆக., 14-அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசியக் கீதத்திற்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்றும், இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிவசேனா கட்சியின் தமிழ்நாடு இளைஞரணி மாநிலத் தலைவர் அட்சய திருமுருக தினேஷ், இந்திய ஜனாதிபதி, பிரதமர் தமிழகமுதல்வர் உள்ளிட்டோருக்கு மனு அனுப்பியுள்ளார்.அதில், சென்னை ஒய்.எம்.சி.ஏ உடற்கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் தமிழகச் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு முன்பாகக் கிறிஸ்தவப் பாடல் பாடப்பட்டதாகச் சர்ச்சை எழுந்தது.இது தொடர்பாகப் விளக்கமளித்த அமைச்சர் ராஜேந்திரன், இக்கல்லூரி ஒரு கிறிஸ்தவக் கல்வி மையம் என்பதால் முதலில் பிரார்த்தனை செய்ததாகவும், பொது நிறுவனங்கள், அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் மட்டுமே தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், இச்சம்பவம் குறித்துத் தனி விசாரணை நடத்தி, அரசு விதிமுறைகள் மற்றும் தேசிய கௌரவச் சட்டங்கள் மீறப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் எனச் சிவசேனா கட்சி சார்பில் இந்திய ஜனாதிபதி, பிரதமர் தமிழகமுதல்வர் உள்ளிட்டோருக்கு அனுப்பப்பட்டுள்ள மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.மேலும், எதிர்காலத்தில் அனைத்து அரசு மற்றும் பொது விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசியக் கீதம் மற்றும் தேசியப் பாடலுக்கு உரிய மரியாதை அளிக்கப்படுவதை உறுதி செய்யத் தகுந்த வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.இதேபோல் இந்து மக்கள் கட்சி சார்பில் மாநிலச் செயலாளர் சூர்யா, பாரத் சேனா, சக்தி சேனா ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகளும் தனித்தனியாக மனு அனுப்பியுள்ளது குறிப்பிட தக்கதுபடம் இணைக்கப்பட்டுள்ளது 0005தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசியக் கீதத்திற்கு அவமரியாதைக்கு விசாரணை கோரி, இந்திய ஜனாதிபதி, பிரதமர் தமிழகமுதல்வர் உள்ளிட்டோருக்கு சிவசேனா உள்ளிட்ட இந்து அமைப்புக்கள் சார்பில் தபால் மூலம் மனுப்பியவர்கள்
1
2
3
…
123
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.