
உள்ளாட்சி நிதி தணிக்கை ஊழியர் சங்கம் மற்றும் ஆய்வாளர் மன்றம் சார்பில் நிதி அமைச்சருக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பு!வேலூர், ஆக. 14-நேற்று 13.8.26 அன்று உள்ளாட்சி நிதி தணிக்கை ஊழியர் சங்கம் மற்றும் ஆய்வாளர் மன்றம் சார்பில் மாண்புமிகு நிதியமைச்சரை நேரில் சந்தித்து பட்ஜெட் தாக்கல் செய்ததற்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. மேலும் உள்ளாட்சி நிதி தணிக்கை துறையின் சிறப்பு தணிக்கை அறிக்கையினை மாண்புமிகு முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றதற்கும், அதுகுறித்து சட்டசபையில் பேசி தணிக்கை துறைகளுக்கு கௌரவம் அளித்தமைக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. அத்துடன் CAMS ல் தற்போது விடுப்பு எடுத்தால் தணிக்கை பணி நீட்டிப்பு செய்ய நடவடிக்கை எடுத்தது, மாற்றுத் திறனாளிகளுக்கு பணித்திட்டம் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை மேற்கொண்டது மற்றும் தொலைதூர பணி திட்டங்களை ஒரு சில மாவட்டங்களில் மாற்றி அமைக்க நடவடிக்கை மேற்கொண்டது குறித்து,வேலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொலைதூர பணித்திட்டங்களை விரைவில் மாற்றி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் உறுதியளித்துள்ளார்.உள்ளாட்சி நிதி தணிக்கை ஊழியர் சங்கம் மற்றும் ஆய்வாளர் மன்றத்தின் கோரிக்கையின் படி அனைத்து தணிக்கையாளர்களுக்கும் விரைவில் மடிக்கணினிகள் வழங்க உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இந்நிகழ்வில் ஊழியர் சங்க மாநிலத் தலைவர் ஆர்.பாபு, பொதுச் செயலாளர் சீனி செந்தில், ஆய்வாளர் மன்ற மாநில தலைவர் பா.ஐயப்பன், பொதுச் செயலாளர் இ.பிரகாஷ், பொருளாளர் க.தாமரைச்செல்வன் (ம) துணைத் தலைவர் த.ஞானவேல் ஆகியோர் இந்த அமைச்சரை நேரில் சந்தித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவ்வாறு தமிழ்நாடு உள்ளாட்சி நிதி தணிக்கை ஊழியர் சங்கம் மற்றும் ஆய்வாளர் மன்றத்தின் மாநில மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.










Leave a Reply