Archives
August 2026
July 2026
June 2026
May 2026
April 2026
March 2026
February 2026
January 2026
December 2025
November 2025
October 2025
September 2025
Categories
Uncategorized
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
செய்திகள்
நிகழ்ச்சிகள்
விளையாட்டு
Meta
Log in
Entries feed
Comments feed
WordPress.org
செய்திகள்
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
நிகழ்ச்சிகள்
வர்த்தகம்
விளையாட்டு
உலக செய்திகள்
யூடியூபர் முக்தார் கைது
சென்னை கீழ்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் சின்னையா பள்ளி அருகே சுமார் 15அடி முதல் 20 அடி அகல நடைபாதை அமைக்க பட்டுள்ளது.
காட்பாடியில் தில்லாலங்கடி மண்டல துணை வட்டாட்சியர் ‘கோல்டன் முருகன்’ மீது நடவடிக்கை பாயுமா?வேலூர்,ஜூன் 11-வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் மண்டல துணை வட்டாட்சியராக பணிபுரிபவர் பொன்.முருகன் என்கிற கோல்டன் முருகன். இவர் காட்பாடி தாராபடவேட்டில் போலி பத்திரம் மூலம் இடத்தை பதிவு செய்து கொடுத்து பட்டா மாற்றம் செய்ய பகிரங்கமாக முயற்சி செய்துள்ளார் .இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர் புகார் அளித்தார். அத்துடன் சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கோப்பு வேலூர் கோட்டாட்சியர் விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கோட்டாட்சியர் விசாரணை நிலுவையில் உள்ளது. இந்நிலையில் போலி பத்திரம் மூலம் பதிவு செய்த இடத்திற்கு பொன்.முருகன் ‘ப’ வைட்டமினை கணிசமாக பெற்றுக்கொண்டு பட்டா மாற்றம் செய்துள்ளார். இதனால் பட்டா மாற்றம் செய்யப்பட்டவர் தனது பெயர் பட்டாவில் இல்லாததால் தற்போது வட்டாட்சியர் அலுவலகத்துக்கும் காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்துக்கும் நடையாய் நடந்து கொண்டுள்ளார். இப்படி முறையாக உள்ள பட்டாக்களை முறைகேடுகளாக பதிவு செய்து கொடுத்துவிட்டு நுகர்வோர்களை அலையாய் அலைய விடுகின்றனர் இதுபோன்ற தில்லாலங்கடி அரசு அலுவலர்கள். இப்படி பொது மக்களை பாடாய்படுத்தி தில்லுமுல்லு வேலைகளை செய்து கணிசமாக பணத்தை சம்பாதித்துக் கொண்டு செல்லும் அரசு அலுவலர்கள் மீது தயவு தாட்சண்யம் காண்பிக்காமல் பொன்.முருகன் என்ற கோல்டன் முருகன் மீது துறை ரீதியான நடவடிக்கையை எடுப்பதுடன் அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கையையும் எடுத்து அதன் மூலம் அடுத்து வரும் அரசு அலுவலர்கள் முறைகேடாக பணிகளை செய்து தனது பாக்கெட்டை நிரப்பிக் கொள்வதை நிறுத்திக் கொள்ள வழிவகை செய்ய மாண்புமிகு ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அரசு நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் இதுபோன்ற அரசு அலுவலர்களால் பாதிக்கப்படும் பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். தமிழ்நாடு அரசு சாட்டையை சுழற்றுமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கோல்டன் முருகன் பித்தளை முருகன் ஆவது விரைவில் நடக்கும் என்கின்றனர் நன்கு விஷயம் அறிந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் நடுநிலையாளர்கள். அதுவரை பொறுத்திருப்போம்.
அரியலூரில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள்குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின் படி கோவை மாநகர் வட்டம் நகரிய கோட்டம் தண்ணீர் பந்தல் பிரிவு உதவி செயற்பொறியாளராக மீண்டும் திருமதி சோபனா நியமனம் இது தொடர்பான விவரம் வருமாறு கோவை மாநகர் வட்டம் தண்ணீர் பந்தல் பிரிவு அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக பணிபுரிந்து வந்தவர் திருமதி ஷோபனா இவர் மீது செயற்பொறியாளராக இருந்த பசுபதீஸ்வரன் பீளமேடு உபகோட்ட உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன் ஆகியோர் பல்வேறு பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி அப்போதைய மேற்பார்வை பொறியாளராக இருந்த சதீஷ்குமார் என்பவர் மூலம் இவரை எந்த வித விசாரணையும் இல்லாமல் துடியலூர் துணை மின் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார் இதனால் அதிர்ச்சி அடைந்த திருமதி சோபனா தனது மாற்றம் தொடர்பாக உரிய விளக்கம் அளித்தும் எவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து கேட்ட பொழுது எந்த பதிலும் அளிக்காமல் தவிர்த்து வந்தனர் இதனால் திருமதி சோபனா சென்னை உயர்நீதிமன்றத்தில் தனது பணியிடம் மாற்றத்திற்கு ரத்து செய்ய வேண்டும் என்று கோரி வழக்கு தாக்கல் செய்தார் இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இவரது பணியிட மாறுதல் உத்தரவை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது ஆனால் மீண்டும் தண்ணீர் பந்தல் பிரிவு அலுவலகத்திற்கு இவர் நியமனம் செய்யக்கூடாது என்று மறைமுகமாக மேற்பார்வை பொறியாளர் அலுவலக செயற்குறியாளர் பொது வசந்த முரளி மற்றும் நகரிய செயற்பொறியாளர் பசுபதீஸ்வரன் பீளமேடு உபகோட்ட உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன் ஆகியோர் பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்தி வந்தனர் இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதால் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதற்கு முன்பாகவே நேற்று இவரை மீண்டும் தண்ணீர் பந்தல் பிரிவு அலுவலகத்திற்கு நியமனம் செய்து சென்னை மின்வாரிய தலைமை பொறியாளர் பணியமைப்பு உத்தரவு பிறப்பித்தார் அதன் அடிப்படையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்த பொழுது நீதிமன்ற உத்தரவின் படி மீண்டும் தண்ணீர் பந்தல் பிரிவு அலுவலகத்திற்கு சோபனா நியமனம் செய்யப்பட்ட உத்தரவை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர் இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடிந்து வைக்கப்பட்டது இதற்கிடையே ஷோபனா தண்ணீர் பந்தல் பிரிவு அலுவலகத்திற்கு வர கடும் எதிர்ப்பு தெரிவித்த நகரிய கோட்ட செயற் பொறியாளராக இருந்த பசுபதீஸ்வரன் அதிரடியாக பல்லடம் துணை மின் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார் அதேபோல இவருக்கு உடந்தையாக இருந்த கார்த்திகேயன் டாடாபாத் துணை மின் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார் ஆனால் அங்கு பணிகள் சேராமல் காலதாமதம் செய்யாமல் பல அரசியல் பெரும் அவர்களை சந்தித்து வருவதாக தெரிகிறது ஆகவே அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது
செய்யாறு நகராட்சி நடுநிலைப் பள்ளியின் ‘வளர்ச்சி – கட்டமைப்பு’ பணிக்காக ரோட்டரி மாவட்டம் 3231 சார்பில் ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்கல்!செய்யாறு, ஜூன் 10 -செய்யாறு பரிதிபுரத்தில் இயங்கி வரும் நகராட்சி நடுநிலைப் பள்ளியின் ‘வளர்ச்சி – கட்டமைப்பு’ பணிகளுக்காக. பன்னாட்டு ரோட்டரி மாவட்டம் 3231 சார்பில், ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை நேற்று அதன் பொறுப்பாளர்கள், தலைமை ஆசிரியரிடம் வழங்கினர்.செய்யாறு பரிதிபுரம் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது நகராட்சி நடுநிலைப் பள்ளி. இப்பள்ளியில் 82 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். தலைமை ஆசிரியர் உட்பட ஏழு ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இப்பள்ளியில் படித்த மாணவர்கள், இப்பள்ளிக்காக பல்வேறு பணிகளை முன்னெடுத்து செய்து கொடுக்கின்றனர்.அந்த வகையில் ரோட்டரி மாவட்ட ஆளுநர் சுரேஷ், திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜராஜன், மாவட்ட செயலாலர் பார்த்திசாதி ஆகியோரின் வழிகாட்டுதலின்படி செய்யாறு ரோட்டரி சங்கத் தலைவர் விஜயவர்மன், செயலாளர் சுதாகர் ஆகியோர் ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையை தலைமையாசிரியர் தேன்மொழியிடம் நேற்று வழங்கினர். இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க பொறுப்பாளர்களான கோவேந்தன், மோதிலால், அண்ணாதுரை, தலைவர் தேர்வு பேராசிரியருமான குமார், ராஜேஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதையடுத்து தலைவர் விஜயவர்மன் கல்வியின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு எடுத்து கூறினார். இதைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் ரோட்டரி சங்க பொறுப்பாளர்கள் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் அதிரடி ஆய்வுமருத்துவ வசதிகள் மேம்பாட்டுக்கு உறுதி – சிஐடியு நிர்வாகிகள் கோரிக்கை மனு வழங்கினார்கள்
எம்.சாண்ட், பி.சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை கடும் உயர்வு!வேலூர், ஜூன் 9-தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.ரூ.3,300-க்கு விற்கப்பட்ட யூனிட் ஜல்லி ரூ.500 உயர்ந்து ரூ.3,800க்கு விற்பனை; ரூ.4,000-க்கு விற்கப்பட்ட ஒரு யூனிட் எம்.சாண்ட் ரூ.500 உயர்ந்து ரூ.4,500க்கு விற்பனை செய்யப்படுகிறது.ரூ.5,000க்கு விற்கப்பட்ட யூனிட் பி.சாண்ட் ரூ.500 உயர்ந்து ரூ.5,500க்கு விற்பனை செய்யப்படுகிறது.பல மாவட்டங்களில் விலையேற்றத்தின் அளவு சற்று மாறுதலுக்கு உட்பட்டது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தவறு செய்யும் விஏஓக்கள் மீது நடவடிக்கை எடுக்காத கோட்டாட்சியர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்படுமா?வேலூர், ஜூன் 9-வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டத்தில் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு மேல் மற்றும்10 லிருந்து 15 ஆண்டுகளாக ஒரே வட்டத்தில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்களை வேறு வட்டத்திற்கு மாற்றாமல் ஆங்காங்கே பணியாற்றி வருகின்றனர். ஆதலால் பழைய கிராம நிர்வாக அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து விட்டு புதியதாக காட்பாடி வட்டத்திற்கு கிராம நிர்வாக அலுவலர்களை நியமிக்க வேண்டும் என்று வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் அலுவலர்கள் எதிர்பார்க்கின்றனர் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் பேசி வருகின்றனர். சுமார் 10 முதல்15 ஆண்டுகளாக ஒரே வட்டத்தில் பணி செய்து வருவதால் சில கிராம நிர்வாக அலுவலர்கள் பல முறைகேடுகளில் தைரியமாக ஈடுபட்டு வருகின்றனர் என்று கூறப்படுகிறது. அதற்காகத்தான் ஒரே வட்டத்தில் விஏஓக்கள் பணி செய்வதாகவும், வெளிவட்டத்திலிருந்து புதிய கிராம நிர்வாக அலுவலர்களை நியமித்தால் பல முறைகேடுகள் வெளிவரும் என்ற அச்சத்தால் தான் இதே வட்டத்திற்குள் பணி செய்து வருவதாகவும் ஒரு அதிர்ச்சி தகவலும் பரவி வருகிறது. அதேபோல் காட்பாடிக்கு வரும் வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், மண்டல வட்டாட்சியர்கள் ஆகியோரும் காட்பாடிக்கு வருவதற்கு அச்சப்படுகிறார்கள். காட்பாடி வட்டத்திற்குள் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்கள் தாங்கள் பணிபுரியும் கிராமத்திற்குள் யாரும் தங்குவதில்லையாம். அலுவலக வேலை நேரத்திற்கு எந்த விஏஓக்களும் அலுவலகத்திற்கு செல்வதும் இல்லையாம். இதனை யாரும் தட்டி கேட்பதும் இல்லாமல் உள்ளது. அலுவலகத்திற்கு 12 மணிக்கும், ஒரு மணிக்கும் செல்வதும் வழக்கமாம். அப்படி இல்லை என்றால் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு பணி செய்து வருகிறார் களாம். இவர்களுக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் சங்க அலுவலகம் வைத்து கொள்ள அனுமதி அளித்தது யார்?. இது அரசு அலுவலகமா? அல்லது சங்க அலுவலகமா? . ஒரு மணி நேரம் கூட அந்தந்த விஏஓக்கள் பணியமர்த்தப்பட்ட அலுவலகத்தில் உட்கார்ந்து வேலையை பார்ப்பது இல்லை. பொதுமக்கள் இவர்களது வருகைக்கு தவமாய் தவம் கிடக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.அதே போல் பட்டா மாற்றம் , இடத்தை அளந்து கொடுக்க சுமார் ரூ. 10,000 லிருந்து ரூ. 20 ஆயிரம் வரைக்கும் லஞ்சம் (கையூட்டு) பெறுவதாக ஒரு அதிர்ச்சி தகவலும் உலா வருகிறது. இவர்கள் செய்யும் முறைகேடுகள், எவ்வளவு லஞ்சம் பெறுகிறார்கள் என்று வட்டாட்சியர் அலுவலகத்திற்குள் பணிபுரியும் அனைத்து அலுவலர்களுக்கும் நன்கு தெரியுமாம். அதேபோல் காட்பாடி வட்டத்துக்குள் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்கள் மீது பல புகார்கள் சென்றாலும் வேலூர் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லையாம். வேலூர் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் நடவடிக்கைகள் எடுக்காதது ஏன் …? என்ன காரணம்? என்பது ஒரு புரியாத புதிராக உள்ளது. வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டத்திற்குள் பணிபுரியும் விஏஓக்கள் மூன்று ஆண்டுகளுக்கு மேல் மற்றும் 10 முதல் 15 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்கள் வெளிவட்டத்திற்கு மாற்றப்படுவார்களா.? இல்லை மௌனம் காத்து முறைகேடுகளில் ஈடுபட்டு வரும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு துணை போவார்களா உயரதிகாரிகள்.? என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கேள்வி எழுப்பியுள்ளனர். விஏஓக்கள் செய்யும் தவறுகளுக்கு துணை போகும் கோட்டாட்சியர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வருவாய் துறை அமைச்சர் மற்றும் தமிழ்நாடு அரசு, வேலூர் மாவட்ட நிர்வாகம் முன் வரவேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
செய்யாறு வட்ட வழங்கல் அலுவலர்களின் ‘அலட்சியம்”140 ரேஷன் கார்டுகள்’ 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கடைக்கு மாற்றம் !செய்யாறு, ஜூன் 9 -செய்யாறில் வழக்கத்தில் இருந்த 140 ரேஷன் கார்டுகள் திடீரென 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வேறு ஒரு ரேஷன் கடைக்கு மாற்றப்பட்டதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். செய்யாறு வட்ட வழங்கல் அலுவலரே இதற்கு காரணம் என, பாதிக்கப்பட்ட அறிஞர் அண்ணா நகர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியில் 10வது வார்டில் அமைந்துள்ளது அறிஞர் அண்ணா நகர், ( கொடநகர் காலனி ), திருவள்ளுவர் நகர், திருவள்ளுவர் நகர் விரிவாக்க பகுதி, சமாதியான் குளத்தெரு. இங்கு ரேஷன் கார்டுகள் வைத்திருப்பவர்கள், கடந்த 5 ஆண்டுகளாக அண்ணா நகரில் உள்ள ரேஷன் கடையில்தான் பொருட்களை வாங்கி வருகின்றனர். இது இவர்களுக்கு சுலபமாக இருந்து வந்தது.இந்நிலையில் இங்கிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள செய்யாறு மார்க்கெட் பகுதியில் புதியதாக 8ம் நெம்பர் ரேஷன் கடை திறக்கப்பட்டது. பழனி தெரு, முனுசாமி தெரு, பாவாடை மூர்த்தி கோயில் தெரு, கண்ணுகாபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களின் ரேஷன் கார்டுகள் மேற்கண்ட புதிய கடைக்கு மாற்றப்பட்டுள்ளது. இது இப்பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக அமைகிறது. ஆனால், இந்த புதிய கடையில் ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், அறிஞர் அண்ணா நகர், திருவள்ளுவர் நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 140 ரேஷன் கார்டுகளை ‘சத்தம் இல்லாமல்’ மார்க்கெட் பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு மாற்றி உள்ளனர் வட்ட வழங்கல் அதிகாரி மற்றும் அந்த அலுவலகத்தில் பணியாற்றும் மற்ற ஊழியர்களும் என்று சொன்னால் அது மிகையாகாது.இத்தகவல் அறிந்த மேற்கண்ட பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்து உள்ளனர். இதுகுறித்து, அறிஞர் அண்ணா நகர் பகுதி மக்கள் கூறியதாவது; ‘எங்கள் பகுதியில் 300 ரேஷன் கார்டுகள் உள்ளன. கடந்த ‘கொரோனா’ காலத்திற்கு முன்பு நாங்கள் பஜாரில் உள்ள ரேஷன் கடையில் தான் பொருட்களை வாங்கச் செல்லுவோம். இது எங்களுக்கு சிரமத்தை கொடுத்து வந்தது. எங்கள் பகுதியிலேயே ரேஷன் கடையை அமைக்க வேண்டும் என, போராடி இந்த ரேஷன் கடையை அண்ணா நகர் பகுதிக்கு கொண்டு வந்தோம். எங்கள் பகுதியில் உள்ள 140 ரேஷன் கார்டுகளை 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள செய்யாறு மார்க்கெட் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இது எந்த விதத்தில் நியாயம். செய்யாறு வட்ட வழங்கல் அதிகாரியின் அலட்சியத்தாலே இது போன்ற தவறு நடந்துள்ளது.எனவே, இந்த 140 ரேஷன் கார்டுகளை மீண்டும் அறிஞர் அண்ணா நகர் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் மாற்றி கொடுக்க அதிகாரிகள் உடனே போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்;’ இவ்வாறு அறிஞர் அண்ணா நகர் பகுதி மக்கள் ஒற்றை கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.
1
…
27
28
29
…
128
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.