அரியலூரில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள்குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்

அரியலூர் மாவட்டம், அரியலூர் ஊராட்சி ஒன்றியம், வாலாஜாநகரம் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள 02 சாலை மேம்பாட்டு திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி, இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு பணிகளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

அரியலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் இன்றையதினம் அரியலூர் ஊராட்சி ஒன்றியம், வாலாஜாநகரம் ஊராட்சி கீதாமஹால் பின்புறம் அமைந்துள்ள பகுதிகளில் ரூ.14.68 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள சாலை மேம்படுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு பணிகளின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, சாலைகளின் இருபுறங்களிலும் மழைநீர் தேங்காத வகையில் செட்டிஏரி வரத்து வாய்கால்களை தூர் வாரும் பணிகளை மேற்கொள்ளவேண்டும் என சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.