செய்யாறு நகராட்சி நடுநிலைப் பள்ளியின் ‘வளர்ச்சி – கட்டமைப்பு’ பணிக்காக ரோட்டரி மாவட்டம் 3231 சார்பில் ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்கல்!செய்யாறு, ஜூன் 10 -செய்யாறு பரிதிபுரத்தில் இயங்கி வரும் நகராட்சி நடுநிலைப் பள்ளியின் ‘வளர்ச்சி – கட்டமைப்பு’ பணிகளுக்காக. பன்னாட்டு ரோட்டரி மாவட்டம் 3231 சார்பில், ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை நேற்று அதன் பொறுப்பாளர்கள், தலைமை ஆசிரியரிடம் வழங்கினர்.செய்யாறு பரிதிபுரம் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது நகராட்சி நடுநிலைப் பள்ளி. இப்பள்ளியில் 82 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.‌ தலைமை ஆசிரியர் உட்பட ஏழு ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இப்பள்ளியில் படித்த மாணவர்கள், இப்பள்ளிக்காக பல்வேறு பணிகளை முன்னெடுத்து செய்து கொடுக்கின்றனர்.அந்த வகையில் ரோட்டரி மாவட்ட ஆளுநர் சுரேஷ், திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜராஜன், மாவட்ட செயலாலர் பார்த்திசாதி ஆகியோரின் வழிகாட்டுதலின்படி செய்யாறு ரோட்டரி சங்கத் தலைவர் விஜயவர்மன், செயலாளர் சுதாகர் ஆகியோர் ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையை தலைமையாசிரியர் தேன்மொழியிடம் நேற்று வழங்கினர். இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க பொறுப்பாளர்களான கோவேந்தன், மோதிலால், அண்ணாதுரை, தலைவர் தேர்வு பேராசிரியருமான குமார், ராஜேஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதையடுத்து தலைவர் விஜயவர்மன் கல்வியின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு எடுத்து கூறினார். இதைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் ரோட்டரி சங்க பொறுப்பாளர்கள் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.