Archives
August 2026
July 2026
June 2026
May 2026
April 2026
March 2026
February 2026
January 2026
December 2025
November 2025
October 2025
September 2025
Categories
Uncategorized
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
செய்திகள்
நிகழ்ச்சிகள்
விளையாட்டு
Meta
Log in
Entries feed
Comments feed
WordPress.org
செய்திகள்
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
நிகழ்ச்சிகள்
வர்த்தகம்
விளையாட்டு
உலக செய்திகள்
Year:
2026
காட்பாடி – வேலூர் பாலாறு ரயில்வே மேம்பாலம் மீது ரயிலில் சிக்கி ஒருவர் பலி!வேலூர், ஆக. 6-வேலூர் மாவட்டம், காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து வேலூர் கண்ட்டோன்மெண்ட் ரயில் நிலையம் செல்லும் பாதையில் பாலாற்றின் மீதுள்ள ரயில்வே மேம்பாலத்தின் தண்டவாளத்தில் ரயிலில் சிக்கி உயிரிழந்த நிலையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இது குறித்துதகவல் அறிந்து அங்கு சென்ற காட்பாடி இருப்பு பாதை போலீசார் இறந்து கிடந்தவரின் உடலைக் கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.காட்பாடி இருப்புப் பாதை போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து உயிரிழந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? இவர் ரயிலில் இருந்து தவறி விழுந்தாரா? , தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கவனக்குறைவாக தண்டவாளத்தை கடக்கும்போது ரயிலில் சிக்கி உயிரிழந்தாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்யாறில் குப்பை கிடங்காக மாறிவரும் ‘வாணிய குளத்தை’மீட்கக் கோரி காமராஜர் நகர் பொது மக்கள் சப் – கலெக்டரிடம் புகார் மனு!செய்யாறு, ஆக. 6 -செய்யாறு காமராஜர் நகரில் ‘குப்பை கிடங்கு – கழிவுகள் கொட்டும் இடமாக’ மாறி வரும் வாணிய குளத்தை மீட்க வேண்டும் என, பொதுமக்கள் செய்யாறு சப் – கலெக்டரிடம் புகார் மனுவை கொடுத்துள்ளனர்.செய்யாறில் அமைந்துள்ளது காமராஜர் நகர். இங்கு பழமையான வாணியக்குளம் மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது. ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளத்தின் கரைகளைச் சுற்றி 20க்கும் மேற்பட்ட வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஆக்கிரமித்து வீடுகளை கட்டி வசித்து வருகின்றனர். எஞ்சியுள்ள குளத்தை கழிவுநீர் – கழிவுப் பொருட்கள், குப்பைகளையும் கொட்டி கொஞ்சம் கொஞ்சமாக மூடி தூர்ந்து போகச் செய்து வருகின்றனர்.இந்த நிலை தொடர்ந்தால் குளமே காணாமல் போய்விடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த குளத்தை முழுமையாக மீட்க வேண்டும் என, காமராஜர் நகரைச் சேர்ந்த பொது மக்கள் நேற்று செய்யாறு சப் – கலெக்டர் அம்பிகா ஜெயினிடம் புகார் மனுவை கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது; ‘திருவத்திபுரம் நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள வாணியக்குளம் குப்பை கொட்டும் கிடங்காக மாறிவிட்டது. இந்த குளத்தை மீட்டெடுத்தால் இங்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தே இருக்கும். இங்குள்ள ஆக்கிரமிப் பாளர்களை வேறு இடத்திற்கு மாற்றம் செய்து குளத்தை முழுமையாக மீட்டெடுத்து, நடைபாதை, பூங்கா உள்ளிட்ட வசதிகளை நகராட்சி நிர்வாகம் செய்து கொடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அலுவலக உதவியாளரை 7 நாட்களும் வேலைக்கு வருமாறு கூறி அவரை டார்ச்சர் செய்யும் கணியம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர்!வேலூர், ஆக. 5-வேலூர் மாவட்டம், வேலூர் வட்டம், கணியம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றுபவர் ரமேஷ்குமார். இவர் என்றைக்கு கணியம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலராக பணிக்கு வந்தாரோ அன்று முதல் இன்று வரை கணியம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் யாரிடமும் சரியாக பேசுவது கிடையாது. இவருக்கும் இங்கு பணியாற்றும் அனைத்து பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் இடையில் ஒரு பணிப்போர் அமைதி கரமாக நடந்து வருகிறது. இந்த பணிப் போருக்கு காரணமே பிடிஓ ரமேஷ் குமார் தான் என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த வட்டார வளர்ச்சி அலுவலராக உள்ள ரமேஷ் குமார் கணியம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரியும் ஒரு நபரை தினசரி டார்ச்சர் செய்வது, அவரை பணி செய்ய விடாமல் தடுப்பது, அவரை மன உளைச்சலுக்கு உள்ளாக்குவது என்று விதவிதமாக அவரை கொடுமைப்படுத்தி ரசித்து வருகிறார் வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் குமார் என்று சொன்னால் அது மிகையாகாது. அத்துடன் ஒரு படி மேலே சென்று பிடிஓ அந்த அலுவலக உதவியாளரை நீ ஒருநாளும் ஓய்வு எடுக்கக் கூடாது, வார விடுமுறை எடுக்கக் கூடாது 7 நாட்களும் தினசரி அலுவலகத்திற்கு வந்து செல்ல வேண்டும் என்று அவருக்கு வாய்மொழி உத்தரவு கொடுத்து அவரை டார்ச்சர் டார்ச்சர் செய்து வருகிறார். ஒருமையில் திட்டுகிறார். இப்படி வார விடுமுறை எடுத்துக் கொண்டு, ஓய்வு எடுத்துக் கொண்டால் இங்கு யார் வேலை பார்ப்பது என்று கேள்வி கேட்கிறார். பணிக்கு வராமல் நீ என்ன வீட்டில் செய்கிறாய் என்று ஒருமையில் பேசி அவரை கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கி வருகிறார் வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் குமார். இவர் குறித்து மேல் அதிகாரிகளுக்கு தகவல்கள் தெரிவித்த பிறகும் மேலதிகாரிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் குமார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்த வண்ணம் உள்ளனர். ஆதலால் இந்த புகாரின் மீது உரிய விசாரணை நடத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் குமார் மீது துறை ரீதியான சட்ட நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என்று கணியம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் பிடிஓ மீது என்ன நடவடிக்கை எடுக்கிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தமிழ்நாடு அரசுமாற்றுத்திறனாளிகள் நலத்துறை கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூர் வட்டாரம், பூலுவாபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான “விழுதுகள்” வட்டார அளவிலான ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையம் (One Stop Centre), தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ், உலக வங்கி மற்றும் தமிழ்நாடு அரசின் நிதியுதவியுடன்.தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. வி. சம்பத் குமார் அவர்கள் தலைமை தாங்கி, மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். மேலும்,மாவட்ட வருவாய் அலுவலர் சுதர்ஷன்கோவை துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) டாக்டர் பி. பாலுசாமி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்தராம்குமார் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் – கோவை மாவட்ட முதன்மை நிபுணர் (Key Expert) டாக்டர் அ. கரிகாலன் மற்றும் TN Rights பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இத்திட்டத்தின் சமூக சேவை வழங்குநராக கோயம்புத்தூரைச் சேர்ந்த கௌமாரம் பிரசாந்தி அகாடமி செயல்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு தரமான, ஒருங்கிணைந்த மற்றும் எளிதில் அணுகக்கூடிய மறுவாழ்வு சேவைகளை ஒரே இடத்தில் வழங்கும் நோக்கத்துடன், மாற்றுத்திறனாளிகளுக்கான அரசின் நலத்திட்டங்களைப் பெறுவதற்கும் இம்மையத்தில் வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது. மேலும், இம்மையத்தில் உளவியல் ஆலோசனை (Counselling), இயன்முறை மருத்துவம் (Physiotherapy), அறிவுத்திறன் குறைபாடு உடையோருக்கான சிறப்புக் கல்வி, பார்வைக் குறைபாடு உடையோருக்கான சிறப்புக் கல்வி மற்றும் செவித்திறன் குறைபாடு உடையோருக்கான சிறப்புக் கல்வி உள்ளிட்ட ஒருங்கிணைந்த சேவைகள் வழங்கப்படுகின்றன.மாற்றுத்திறனாளிகளைக் கண்டறியும் கணக்கெடுப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதுவரை தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் 1,593 மாற்றுத்திறனாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். மேலும், தற்போது நடைபெற்று வரும் இக்கணக்கெடுப்பிற்கு பொதுமக்கள் தங்களது முழு ஒத்துழைப்பை வழங்குமாறு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ஒப்பந்தம் முடியும் முன்னே தன்னிச்சையாக ஒப்பந்தமே எடுக்காதவர்களுக்கு அதிக கட்டணம் கொடுத்து லாரியை அமர்த்தி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியுள்ள கூட்டுறவு சார் பதிவாளர் கோபிநாத் மீது துறை ரீதியான நடவடிக்கை பாயுமா?வேலூர், ஆக. 3-பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசியப் பண்டங்கள் மற்றும் கட்டுப்பாடற்ற பொருட்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் காட்பாடி கிடங்கில் இருந்து (திருவலம்) காட்பாடி தாலுகாவில் உள்ள கற்பகம் கடைகள் மற்றும் கிராம நியாய விலை கடைகளுக்கு நகர்வு செய்ய கடந்த 29.1.2026 அன்று பண்டகசாலையில் நடைபெற்ற லாரி வாடகை டெண்டரில் ஒரு குவிண்டாலுக்கு இறக்கு கூலி மற்றும் இதர கட்டணங்கள் உட்பட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கு மற்றும் கற்பகம் கிடங்கில் இருந்து நகர்வு செய்ய ஏ.முத்து என்பவரை லாரி ஒப்பந்ததாரராக காட்பாடி கிளைக்கு நியமனம் செய்திடவும், அவருக்கு 1 கி. மீ., முதல் 13 கி.மீ., வரை ரூ. 25.50 மற்றும் 13 கி.மீ., முதல் 36 கி. மீ., வரை ரூ.34.50 வழங்கவும், 36 கி.மீ., மேல் ரூ.36 வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த லாரி வாடகை கடந்த 21.2.2026 முதல் அடுத்த ஒப்பந்த மேற்கொள்ளும் வரை ஏ.முத்து என்ற ஒப்பந்ததாரரை வைத்து அத்தியாவசிய பண்டங்கள் மற்றும் கட்டுப்பாடற்ற பொருட்கள் நகர்வு செய்யவும், மேலும் ஒப்பந்தப்புள்ளி வழங்கப்பட்ட காலம் முடிந்த பிறகும் புதிய ஒப்பந்ததாரரை தேர்ந்தெடுக்கும் வரை அங்கீகரிக்கப்பட்ட வாடகைக்கு பழைய ஒப்பந்ததாரரே நகர்வு பணியை மேற்கொள்ள வேண்டும் எனவும் காட்பாடி கிளை மேலாளருக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. காட்பாடி கிளையில் நகர்வு பணிக்கு கூடுதலாக அதிக லாரிகள் தேவைப்பட்டால் ஒப்பந்ததாரரை கேட்டு அவர் அனுப்பும் இதர லாரிகளை வைத்து நகர்வினை முடிக்க வேண்டும். கூடுதலாக இதர லாரிகள் வைக்கும் போது வட்ட வழங்கல் அலுவலரிடம் தகவல் தெரிவித்து நகர்வுப்பணி மேற்கொள்ளவும் மற்றும் கட்டுப்பாடற்ற பொருள்கள் நகர்வு செய்யவும் காட்பாடி கிளை மேலாளர் பணிக்கப்பட்டுள்ளார். இந்த உத்தரவை ஒப்பந்ததாரர் எ. முத்து என்பவருக்கு வேலூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை லிட். , இணை பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஆ. பழனிச்சாமி கடந்த 3 2 2026 இல் வழங்கி உள்ளார். ஆனால் சி எஸ் ஆர் என்று அழைக்கப்படும் நுகர்வோர் கூட்டுறவு சார் பதிவாளர் கோபிநாத் என்பவர் எதையும் (சட்டத்தை) விதிமுறைகளை மதித்து நடப்பதில்லை. இதற்கு மாறாக ஒப்பந்ததாரரான முத்துவுக்கு வழங்கப்படும் தொகையைக் காட்டிலும் கூடுதலாக ரூபாய் ஏழு அதிகம் கொடுத்து வேலூரில் உள்ள லாரிகளை கொண்டு வந்து செல்ஃப் என்று போட்டு இவரே தனியாக லோடுகளை ஏற்றுவது, இறக்குவது என்று வேலைகளை பார்த்து வருகிறார் என்று சொன்னால் அதுதான் நிதர்சன உண்மை. காட்பாடி வட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகள் மற்றும் கே. வி. குப்பத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் திருவலம் கிடங்கில் இருந்துதான் அத்தியாவசியப் பொருட்களை லாரிகளில் ஏற்றி செல்லப்படுகிறது. டெண்டர் விடப்பட்ட லாரிகளுக்கு லோடு வழங்காமல் இவர் தன்னிச்சையாக அதிகார துஷ்பிரயோகம் செய்து தனியார் வாகனங்களை உள்ளே கொண்டு வந்து லோடு ஏற்றுவதும், இறக்குவதும் என்று இவர் தனி ராஜ்ஜியம் நடத்தி வருகிறார். இவரது அராஜகத்திற்கு அளவே இல்லை என்று சொல்லலாம். கடந்த 21.2.2026 அன்றிலிருந்து ஒப்பந்ததாரராக நியமிக்கப்பட்ட முத்துவுக்கு எதிர்ப்பான பணிகளை தொடர்ந்து கோபிநாத் செய்து வருகிறார். அத்துடன் ரேஷன் கடைகளில் பணிபுரிபவர்களை தான் தோன்றித்தனமாக நடத்துவது, அருவெறுக்கத்தக்க ஆபாசமான வார்த்தைகளை கூறி திட்டுவது, வேலை நேரம் போக அதிகாலை 2 மணி, 3 மணி என்று இவரது விருப்பம் போல் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஊழியர்கள் மற்றும் பணியாளர்களை வசை பாடுவது, அவர்களை வறுத்தெடுப்பது என்று இவரது விருப்பத்திற்கு ஏற்ப நடத்தி வருகிறார். இதனால் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பெண் பணியாளர்கள், விற்பனையாளர்களிடம் ஆபாசமான வார்த்தைகளை கூறி திட்டுகிறார் என்ற குற்றச்சாட்டு கோபிநாத் மீது தொடர்ந்து இருந்து வருகிறது. இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய உயர் அரசு அலுவலர்கள் கைகட்டி வேடிக்கை பார்த்து வருகின்றனர். குறிப்பாக தவெக ஜோசப் விஜய் முதலமைச்சர் ஆக உள்ள இந்த வேளையில் இது போன்ற தன்னிச்சையான செயல்பாடுகள் மற்றும் அருவெறுக்கத்தக்க ஆபாச பேச்சுக்கள் பேசும் கோபிநாத் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து பணியாளர்களின் ஒட்டுமொத்த விருப்பமாக உள்ளது. இதுவே ஊழியர்களின் எதிர்பார்ப்பாகவும் மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் யாருக்கும் மரியாதை தருவதே கிடையாது. அதே போன்று இந்த கோபிநாத்திற்கு திருமணம் ஆகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 4வது தளத்தில் உள்ள துணைப் பதிவாளர் சுவாதியும் நன்கு சொம்பு அடிக்கிறார் என்றே கூறலாம். இவர் அடிக்கும் ஜால்ராவிற்கு ஏற்ப இருவரும் இரட்டைக் குழல் துப்பாக்கி போல செயல்படுகின்றனர் என்றும் சொல்லலாம். முத்துவிற்கு இன்னும் 6 மாதங்கள் டெண்டர் முடிவடையாத நிலையில் இருந்தாலும் அவருக்கு டெண்டரை கேன்சல் செய்துவிட்டு ஈச்சர் வாகனம் மற்றும் இதர வாகனங்களை இவர் பணிக்கு அமர்த்தி வேலை வாங்கி வருகிறார் என்றால் இவருக்கு யார் இந்த தைரியத்தை கொடுத்தது. இவருக்கு பின்னணியில் உள்ள அதிகாரிகள் யார்? .ஏன் இவர் மீது இதுநாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பது போன்ற பல்வேறு சந்தேகங்கள் எழும்பி உள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் புது புது ஆட்களை உருவாக்குகிறார். இப்படித்தான் பணிகளை நடத்த வேண்டும் என்று ஒரு விதி உள்ளது. அதை விடுத்து எப்படி வேண்டுமானாலும் நான் நடத்துவேன் என்று நடத்துவதற்கு கோபிநாத்திற்கு அதிகாரம் கொடுத்தது யார் ?என்பது சிதம்பர ரகசியமாகவோ அல்லது புரியாத புதிராகவே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏன் பெண் பணியாளர்களிடம் வரம்பு மீறி நடந்து கொள்கிறார் என்பதுதான் முக்கிய குற்றச்சாட்டு. இவ்வாறு பல்வேறு குறைபாடுகள், சீர்கேடுகள், ஒழுக்கக்கேடான வார்த்தைகள் பயன்படுத்தும் கோபிநாத் மீது துறை ரீதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என பணியாளர்களும், ஊழியர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். ரேஷன் கடைகளுக்கு சோதனைக்கு செல்லும் போது கணக்கில் குளறுபடிகள், இருப்பு அதிகம், குறைவு என்று வரும் இதனை பார்த்துவிட்டு தனக்கு வேண்டியவர்களுக்கு ஒரு மாதிரியும், தனக்கு வேண்டாதவர்களுக்கு ஒரு மாதிரியும் தண்டனை வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் இந்த கோபிநாத் என்று சொன்னால் அது மிகையாகாது. வேண்டாதவர்களுக்கு அபராதம், வேண்டியவர்களுக்கு மன்னிப்பு என்ற ரீதியில் இவர் செயல்பட்டு வருகிறார். இது என்ன இவர் வீட்டு சொத்தா? அல்லது அரசு சொத்தா? என்று தெரியவில்லை. இவரால் அரசுக்கு பெருத்த வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. ரூபாய் 25.50 க்கு இயக்கப்பட வேண்டிய கிலோமீட்டர் லாரி வாடகை ரூபாய் 53 கொடுத்து தன்னிச்சையாக செயல்படுகிறார் கோபிநாத். இவர் இப்படி இயக்குவதற்கு இவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? என்று தெரியவில்லை. ஒரு வேளை இவருக்கு திருமணம் ஆகாததால் இவர் பிரம்மை பிடித்து மன உளைச்சலுக்கு ஆளாகி ஒரு சைகோ போல நடந்து கொள்கிறார் என்று சொன்னால் அது கூட நிதர்சன உண்மை ஆகும். இவரை களத்திற்கு அனுப்பாமல் அலுவலகத்தில் இருக்கையில் உள்ள பணிகளை (சீட் ஒர்க்)பார்த்து கொள்ள உத்தரவிட வேண்டும் என்றும் சில ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இவரை யாராவது கேள்வி கேட்டால் அவரை வறுத்து எடுத்து விடுகிறார் இப்படி தான் தோன்றுத்தனமாக நடக்கும் இது போன்ற அதிகாரிகள் மீது அரசு தணிகை கவனம் செலுத்தி அவர்களை மற்ற பணியாளர்களுக்கு இடையூறாக இல்லாத வண்ணம் அவரை தண்டனைக்கு உட்படுத்தி குறிப்பாக அவரை பணிநீக்கம் செய்தால் கூட தகும் என்கின்றனர் ஒரு சில நல விரும்பிகள் என்று சொன்னால் அதுதான் நிதர்சன உண்மை. தமிழக முதல்வராக உள்ள ஜோசப் விஜய் தலைமையிலான பொற்கால ஆட்சியில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவுத்துறை அமைச்சர் இது போன்ற பிரச்சனைகளில் நேரடியாக தலையிட்டு இது போன்ற சைக்கோ அதிகாரிகளை உடனடியாக துறை ரீதியான விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்பது பாதிக்கப்பட்ட லாரி உரிமையாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மற்றும் ரேஷன் கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாகவும், கோரிக்கையாகவும், வேண்டுகோளாகவும் மாறியுள்ளது. இந்நிலையில் பலர் திடீர் போர்க்கொடி தூக்கவும் ஆரம்பித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு வேலூர் மாவட்ட நிர்வாகமோ அல்லது தமிழக அரசோ கோபிநாத் மீது என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
செய்யாறில் ‘நன்னூல் சொல்லதிகாரம் – டி.என்.பி.எஸ்.சி., பொது அறிவு’ நூல்கள் வெளியீட்டு விழா : நூல் ஆசிரியர் க.ஆறுமுகத்திற்கு பாராட்டுக்கள் குவிந்தது !செய்யாறு, ஆக. 3 -செய்யாறில் அரசு ஊழியர் ஐக்கியப் பேரவையின் ஒருங்கிணைப்பில், அறம் பதிப்பகத்தின் சார்பில் பேராசிரியர் முனைவர் க.ஆறுமுகம் எழுதிய “நன்னூல் – சொல்லதிகாரம்” மற்றும் ( டி.என்.பிஎஸ்.சி.,) பொது அறிவு” ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா மற்றும் திறனாய்வுக் கூட்டம் செய்யாறு ஆர்.சி.எம். பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.விழாவிற்கு அரசு ஊழியர் ஐக்கியப் பேரவையின் மாவட்டச் செயலாளர் இடிமின்னல் இனியவன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் நா.சொக்கலிங்கம், மாவட்ட துணைச் செயலாளர்சி.நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.செய்யாறு கலைக் கல்லூரி, இணைப் பேராசிரியர் முனைவர் தேவி வரவேற்றார்.வேலூர் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் ஆர்.பாபு ஜனார்த்தனம் நூல்களை வெளியிட, செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் ந.கலைவாணி பெற்றுக் கொண்டார்.தமிழ் இலக்கியம், இலக்கணம் மற்றும் போட்டித் தேர்வுக் கல்வி ஆகியவை ஒரே மேடையில் இணைத்த அரிய நிகழ்வாக இந்த நிகழ்ச்சி அமைந்தது.நூல் அறிமுகம் மற்றும் திறனாய்வு அமர்வில் வரலாற்றுத் துறை பேராசிரியர் முனைவர் த.சுப்பிரமணியன், ( டி.என்.பி.எஸ்.சி., )பொது அறிவு” நூல் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல் உள்ளிட்ட பாடப்பகுதிகளை வினா – விடை வடிவில் தொகுத்திருப்பது போட்டித் தேர்வர்களுக்கு மிகவும் பயனளிக்கும் என்றும், குறுகிய கால மீள்பார்வைக்கு ஏற்ற சிறந்த கையேடாக இந்நூல் அமைந்துள்ளதாகவும் பாராட்டி பேசினார்.தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் கு.சீனிவாசன், “நன்னூல் – சொல்லதிகாரம்” நூல் பாரம்பரிய தமிழ் இலக்கண மரபை எளிய நடையில் இன்றைய வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதோடு, நன்னூலின் ஆறு இயல்களையும் திட்டமிட்ட முறையில் விளக்கும் சிறந்த துணை நூலாக அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.எழுத்தாளர் மைத்திரி அன்பு பேசுகையில், பேராசிரியர் க.ஆறுமுகம் பல ஆண்டுகளாக கல்லூரி ஆசிரியராகவும், போட்டித் தேர்வுப் பயிற்றுநராகவும் பெற்ற அனுபவத்தின் வெளிப்பாடாகவே ( டி.என்.பி.எஸ்.சி., ) பொது அறிவு நூல் உருவாகியுள்ளதாகவும், போட்டித் தேர்வர்களுக்கு இந்நூல் பயனுள்ள வழிகாட்டியாக அமையும் என்றும் தெரிவித்தார். மேலும், “பவணந்தி முனிவரின் நன்னூல் – சொல்லதிகாரம்” நூல் தமிழ் இலக்கண மரபை எளிமையாக வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக அமைந்துள்ளதுடன், தமிழ் இலக்கண ஆர்வலர்களுக்கும், மாணவர்களுக்கும் சிறந்த துணை நூலாக விளங்கும் என்றும் பாராட்டி பேசினார்.அதேவேளையில், எதிர்கால பதிப்புகளில் மொழித் துல்லியம், பதிப்புத் தரம் மற்றும் வடிவமைப்பில் கூடுதல் கவனம் செலுத்தினால் நூல்களின் செம்மை மேலும் உயரும் என்றும், சமூகப் பொறுப்புணர்வுள்ள நூல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வரும் அறம் பதிப்பகத்தின் பணி பாராட்டுக்குரியது. அதன் எதிர்கால வெளியீடுகள் உள்ளடக்கத்திலும் பதிப்பு நேர்த்தியிலும் மேலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற தனது எதிர்பார்ப்பையும் பதிவு செய்தார்.அவரைத் தொடர்ந்து, வாழ்த்துரையாற்றிய அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சீனி.தனஞ்செழியன், தமிழ் ஆசிரியர்கள் கண்ணன், செல்வி, இளையராஜா ஆகியோர் நூல்களின் சிறப்புகளையும், மேம்படுத்துவதற்கான சில கருத்துக்களையும் எடுத்துரைத்தனர்.விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் கிழக்கு மாவட்டச் செயலாளர் உதயகுமார், செய்யாறு ஆர்.சி.எம். சர்ச் பங்குத்தந்தை சுதர்சனம், அரசு ஊழியர் ஐக்கியப் பேரவையின் செய்யாறு வட்டத் தலைவர் வ.திருவாசகம், பொருளாளர் சத்தியமூர்த்தி, செய்யாறு பிம்பிசாரர் புத்தவிகார் நிறுவனர் பெளத்த உபாசகர் புண்ணியமூர்த்தி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்யாறு நகரச் செயலாளர் அ.லோகு, ஆவணக் காப்பகத்தின் மாவட்ட அமைப்பாளர் மு.தமிழரசன், நிர்வாகிகள் பெருங்கட்டூர் சந்தோஷ், பராசூர் மணிகண்டன், ஐயப்பன், ந.சுரேஷ் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
காவிரி தமிழக உரிமை – கண்டன ஆர்ப்பாட்டம்.கோவை.காவிரி தமிழக உரிமை, மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட அனுமதிக்க கூடாது என்பதை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புறம்போக்கு நிலத்தை முறைகேடாக வழங்கிய அணைக்கட்டு முன்னாள் வட்டாட்சியர் வேண்டா மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை!வேலூர், ஆக. 2-வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், வேப்பங்குப்பம் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் பட்டா வழங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கிடைத்த தகவலின்படி, சுமார் 1700 சதுர அடி பரப்பளவு கொண்ட அரசு புறம்போக்கு நிலம், சுமார் ரூ.20 லட்சம் சந்தை மதிப்பு கொண்டதாக கூறப்படும் நிலையில், தகுதி விதிமுறைகளுக்கு உட்படாத நபருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், காவல்துறை குடியிருப்பு அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டதாக பதிவுகளில் குறிப்பிடப்பட்ட நிலம், தனிநபர் பெயரில் பட்டா வழங்கப்பட்டதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த விவகாரம் தொடர்பாக அப்போதைய அணைக்கட்டு வட்டாட்சியர் வேண்டா மற்றும் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரின் நடவடிக்கைகள் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு மேலதிகாரிகள் விசாரணை நடைபெற்று வருவதாகவும் நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு அரசு நில ஒதுக்கீடு மற்றும் வீட்டுமனை பட்டா வழங்கும் விதிமுறைகளின்படி, அரசு நிலங்களை ஒதுக்கீடு செய்யும் போது தகுதி, வருமானம், சொத்து நிலை மற்றும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும். அவை மீறப்பட்டிருப்பது விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் மீது ஊழல் தடுப்புச் சட்டம், அரசு பணியாளர் ஒழுங்கு நடவடிக்கை விதிகள் மற்றும் பிற தொடர்புடைய சட்டங்களின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படலாம் என சட்ட வல்லுநர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இந்த ஒரு பட்டா வழங்கல் சம்பவம் மட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணியாற்றிய காலகட்டத்தில் வழங்கப்பட்ட பிற பட்டாக்கள், வருவாய் பதிவேடுகள், நில அளவை ஆவணங்கள் மற்றும் அரசு நில ஒதுக்கீட்டு கோப்புகள் அனைத்தும் முழுமையாக ஆய்வு செய்யப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். அரசின் நலத்திட்டங்கள் உண்மையான பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்வதுடன், அரசு சொத்துக்கள் தொடர்பாக ஏதேனும் முறைகேடுகள் நடைபெற்றிருப்பது நிரூபிக்கப்பட்டால், அதில் தொடர்புடைய அனைத்து தரப்பினரிடமும் பாரபட்சமின்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.மேலும், இந்த விவகாரத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புடைய அரசு ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் அனுமதி வழங்கும் நிர்வாக அமைப்புகளின் பங்கு குறித்தும் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விசாரணையில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டோர் மீது சட்டத்திற்குட்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள், பணி தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, எதிர்காலத்தில் இதுபோன்ற முறைகேடுகள் எங்கும் நடைபெறாத வகையில் தமிழ்நாடு அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர். எம் எல் ஏ சொன்னதை வேதவாக்காக கருதி தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த வேண்டா மீது நடவடிக்கை எடுத்து அவரை நிரந்தரமாக பணிநீக்கம் செய்ய வேலூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது மற்ற அரசு அலுவலர்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் தவறு செய்த அரசு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்குமா? அல்லது கண்டும் காணாமல் விட்டு விடுமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பீடத்தில் 2வது தேசிய அளவிலான செவன் ஹில்ஸ் நடன விழா கோலாகலம்!வேலூர், ஆக. 2-வேலூர் மாவட்டம், திருமலைக்கோடியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பீடத்தில், ஸ்ரீ சக்தி அம்மாவின் தெய்வீக அருளாசி மற்றும் அவரது முன்னிலையில், 2வது தேசிய அளவிலான செவன் ஹில்ஸ் நடன விழா கடந்த 2 நாட்களாக யாகம் அரங்கில் நடைபெற்றது. 2 நாட்கள் நடைபெற்ற இவ்விழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஸ்ரீ புரம் வந்த நடன கலைஞர்கள் பங்கேற்று பரதநாட்டியம், குச்சிப்புடி, கதகளி, மோகினியாட்டம், மணிப்பூரி, பெரினி மற்றும் ஒடிசி உள்ளிட்ட இந்திய பாரம்பரிய செவ்வியல் நடனங்களை அரங்கேற்றி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர். இதில் ஸ்ரீபுரம் இயக்குநரும், அறங்காவலருமான டாக்டர் எம். சுரேஷ்பாபு தலைமை வகித்தார். மேலும், ஸ்ரீ சாய் நாட்டியாஞ்சலி நுண்கலை வளர்ச்சி சங்கத்தின் நிறுவனர் டாக்டர் பல்லெம்செட்டி சுரேஷ் மற்றும் விழாவில் பங்கேற்ற நடன கலைஞர்கள் அனைவரும் இந்திய பாரம்பரிய நடனக் கலைகளை பாதுகாத்து வளர்த்துவரும் பணிக்காக சிறப்பு மரியாதை மற்றும் பாராட்டுகளை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இரு கதவுகள் பூட்டப்பட்டது ஏன் மாவட்ட ஆட்சியர் விசாரணை செய்ய வேண்டும் இது தொடர்பாக கோயமுத்தூர் கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு செயலாளர் நா லோகு கூறும்பொழுது கோவை மாவட்டம் சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இரண்டு பெரிய இரும்பு கேட் கள் உள்ளன ஒன்றில் நான்கு சக்கர வாகனங்கள் உள்ளே வருவதற்கும் இரண்டாவது இரும்பு கேட் வாகனங்கள் வெளியே செல்வதற்காக ஆனால் இன்று காலை நான்கு சக்கர வாகனத்தில் வந்த பொதுமக்கள் இரண்டு இரும்பு கேட்டுகள் பூட்டப்பட்டது கண்டு உள்ளே செல்ல முடியாது நிலை ஏற்பட்டது இதனால் அதிர்ச்சி அடைந்து பொதுமக்கள் தங்கள் கார்களை சூலூர் செல்லும் சாலையில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது இது குறித்து விசாரித்து பொழுது இரண்டு இரும்பு கதவுகள் பழுதாகி உள்ளது என்று ஒரு பொய்யான தகவலை தெரிவித்தார்கள் இது குறித்து இரண்டு இரும்பு கதவுகளை ஆய்வு செய்தபோது இரண்டும் நல்ல நிலையில் உள்ளது அறிய முடிந்தது எதற்காக இரண்டு பெரிய கதவுகள் மூடப்பட்டு இருசக்கர வாகனம் நடந்து செல்வதற்கு மட்டும் ஒரு சிறிய கேட் திறக்கப்பட்டது என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு செயலாளர் நா. லோகு தெரிவித்தார்
1
…
4
5
6
…
93
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.