Archives
August 2026
July 2026
June 2026
May 2026
April 2026
March 2026
February 2026
January 2026
December 2025
November 2025
October 2025
September 2025
Categories
Uncategorized
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
செய்திகள்
நிகழ்ச்சிகள்
விளையாட்டு
Meta
Log in
Entries feed
Comments feed
WordPress.org
செய்திகள்
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
நிகழ்ச்சிகள்
வர்த்தகம்
விளையாட்டு
உலக செய்திகள்
Year:
2026
வேலூரில் ஆசிரியர் இல்ல கூட்டரங்கில் ஆசிரியர் நலன் மற்றும் கல்வி மேம்பாட்டு கழக பேரவை கூட்டம்!வேலூர், ஆக. 10-வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, பில்டர் பெட் சாலையில் உள்ள ஆசிரியர் இல்ல கூட்டரங்கில், ஆசிரியர் நலன் மற்றும் கல்வி மேம்பாட்டு கழகத்தின் பேரவை கூட்டம் கழகத் தலைவர் தமிழ்மணி தலைமையில் நடைபெற்றது. இதில் செயலவை உறுப்பினர் ஷீலா ராணி வரவேற்புரையாற்றினார். செயற்குழு உறுப்பினர் சித்ரா திருக்குறளை வாசித்தார். பொதுச் செயலாளர் செல்லமுத்து ஆண்டறிக்கையை சமர்ப்பித்து கடந்த ஆண்டின் செயல்பாடுகளை விளக்கினார். பொருளாளர் ஞானசிகாமணி வரவு-செலவுத் திட்ட அறிக்கையை தாக்கல் செய்தார். திருவருள் உலகநாதன், சேட்டு, சுந்தரேசன், சொக்கலிங்கம் மற்றும் ஜி.டி. பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இக்கூட்டத்தில் ஆசிரியர் இல்லத்தின் கூட்ட அரங்குகளை புதுப்பித்தல், கூடுதல் தங்கும் அறைகள் அமைத்தல், செயற்குழு, செயலவை மற்றும் பேரவை உறுப்பினர்களுக்கு ஆண்டுதோறும் சுற்றுலா ஏற்பாடு செய்தல், ஆசிரியர் இல்ல மடல் மற்றும் அடுத்த ஆண்டிற்கான காலண்டர் தயாரிப்புக் குழு அமைத்தல் உள்ளிட்ட மொத்தம் 11 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.மேலும், கழகத் தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளருக்கு அறங்காவலர் துரை கருணாநிதி நினைவு பரிசுகளை வழங்கி கௌரவித்தார். இதில் செயற்குழு உறுப்பினர்கள் விநாயகம், சோகாராமன், குமாரசாமி, வேலவன், ஜெயபால், முருகன், மாணிக்கம், அபரஞ்சிதம், சித்ரா, குணபூஷணம், சோபனா, சௌதாராணி, டைட்டஸ், தேற்றரவாளன், நூர்முகமது உள்ளிட்ட செயலவை, செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் என 75க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் உள்ளூர் செயலாளர் அல்போன்ஸ்கிரி நன்றியுரை வழங்க கூட்டம் நிறைவுபெற்றது.
செய்யாறில் வி. தி .லீடர்ஸ் கட்சி சார்பில் தனியார் பள்ளிக்குமரக்கன்றுகள் வழங்கும் விழா!செய்யாறு, ஆக. 9 -செய்யாறில் வி. தி. லீடர்ஸ் கட்சி சார்பில் தனியார் பள்ளிக்கு மரக்கன்றுகளை பொறுப்பாளர்கள் வழங்கி மகிழ்ந்தனர்.பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகிய அண்ணாமலை கடந்த ஜூன் மாதம் வி. தி. லீடர்ஸ் என்ற புதிய கட்சியை தொடங்கினார். அப்பொழுது ஒரு சில வாரங்களிலே 20 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம் பெண்கள், பல்வேறு கட்சியைச் சேர்ந்த பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் என அண்ணாமலையின் புதிய கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்த தகவல் மற்ற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் திரும்பிப் பார்க்கும் வகையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.தமிழகத்தில் ‘போதை – கஞ்சா’ ஆகியவற்றை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என, அண்ணாமலை தனது கட்சி தொண்டர்களுடன் உறுதிமொழியும் எடுத்துக் கொண்டார்கடந்த மாதம் பொள்ளாச்சியில் நடந்த கட்சி மாநாட்டிலும் இது குறித்து விவரமாக அண்ணாமலை பேசினார். ஆகஸ்ட் மாதம் முழுவதும் கட்சியில் இணைந்தவர்கள் அனைவரும் தங்களது மாவட்டங்களில் மரக்கன்றுகளை நடவு செய்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்ற கருத்தையும் அண்ணாமலை பதிவு செய்தார். இதை ஏற்றுக் கொண்ட வி. தி. லீடர்ஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் கடந்த 1ம் தேதி முதல் அந்தந்த மாவட்டங்களில் மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.இதேபோல் பொது இடங்களிலும் மரக்கன்றுகளை நடவு செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வரிசையில் செய்யாறைச் சேர்ந்த ஆ.சரவணன், முனைவர் சக்தி நாராயணன், ஜெயராஜ் ஆகியோர் இணைந்து செய்யாறு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே உள்ள விஸ்டம் வித்யாசாகர் என்ற தனியார் சி.பி.எஸ்.சி., பள்ளிக்கு புங்கன், மா, நாவல், பூவரசன் உள்ளிட்ட பத்து வகையான 100 மரக்கன்றுகளை நேற்று வழங்கி மகிழ்ந்தனர்.இந்த மரக்கன்றுகளை பள்ளியின் முதல்வர் அருள் பெற்றுக்கொண்டு, பள்ளி வளாகத்தில் நடவு செய்தார். அத்துடன் இந்த மரக்கன்றுகளை தினமும் தண்ணீர் ஊற்றி வளர்த்தெடுத்து மரமாக்குவோம் என, முதல்வர் அருள், வி. தி .லீடர்ஸ் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு உறுதி அளித்தார். இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் என, பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சென்னை கீழ்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் சின்னையா பள்ளி அருகே சுமார் 15அடி முதல் 20 அடி அகல நடைபாதை அமைக்க பட்டுள்ளது.
காட்பாடி வள்ளிமலை ரோட்டில் உள்ள இளமின் பொறியாளர் அலுவலகத்தில் வசூல் வேட்டையில் ஈடுபடும் ஃபோர்மேன்!வேலூர், ஆக. 8-வேலூர் மாவட்டம், காட்பாடி வள்ளிமலை ரோட்டில் அன்னை நகர் பகுதியில் இளமின் பொறியாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் ஃபோர்மேனாக சிவலிங்கம் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த அலுவலகத்துக்கு புதிய மின் இணைப்பு பெறுவதற்கும் இன்னும் பிற தேவைகளுக்காக செல்லும் நுகர்வோர்களை மறித்து அவர்கள் கழுத்தில் துண்டைப் போட்டு இறுக்கி எப்படியாவது பணம் வசூல் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார் இந்த ஃபோர்மேன் சிவலிங்கம் என்று சொன்னால் அது மிகையாகாது. அத்துடன் இவருக்கு பதவி உயர்வுகள் கொடுத்து வேறு இடத்திற்கு பணியிட மாற்றம் செய்ய மின்வாரியம் எவ்வளவோ நடவடிக்கை எடுத்தும் இவர் நான் எங்கும் செல்ல மாட்டேன் என்றும், எனக்கு பதவி உயர்வும் வேண்டாம் என்றும் சொல்லிவிட்டு இதே அலுவலகத்தில் தொடர்ந்து கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எப்படி இவரை மின்வாரியம் விடுவித்து இவரை கண்டும் காணாமல் இருப்பதற்கான காரணம் மற்றும் இவருக்கு பின்புலமாக இருப்பது யார்? என்பது போன்ற பல விடை தெரியாத கேள்விகள் இவரைச் சுற்றி வலம் வந்தபடி உள்ளன. பல்வேறு சிக்கல்கள் ஆன சட்ட ரீதியாக பிரச்சனைகள் உள்ள இடங்களில் கூட இவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி புதிய மின் இணைப்புகள் கொடுப்பது மற்றும் பல்வேறு அதிகார துஷ்பிரயோகங்களில் இவர் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மின்வாரியத்தில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறையிலும் இவர் இதுநாள் வரை சிக்காமல் தப்பித்துக் கொண்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. லஞ்சம் வாங்கிய பணத்தை பத்திரமாக வீட்டில் கொண்டு போய் பத்திரப்படுத்திவிட்டு வருவது தான் இவரது வழக்கமாக உள்ளது. இவரை பார்த்தால் பசு போன்று தெரியும். ஆனால் பாய்ந்தால் புலி. அதாவது வசூல் வேட்டை புலி என்று சொன்னால் அதற்கு இவரைத்தான் உதாரணமாக சொல்லலாம். அந்த அளவிற்கு இவரது பணி மிகவும் கேவலமாக உள்ளது. மின் நுகர்வோர்கள் இவரை பார்த்தாலே அஞ்சி அலறி அடித்து ஓடும் அவலம் அறுவெருக்கத்தக்க வகையில் உள்ளது. இந்த அலுவலகத்தை பொருத்தவரை இவர் நினைத்தது தான் சட்டம் என்று இளமின் பொறியாளரை ஓரங்கட்டி விட்டு இவரது ராஜ்ஜியத்தை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிவலிங்கம் மீது வேலூர் மாவட்டத்தில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறையும், மின்வாரியத்தில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறையும் ஒரு கண் வைத்தால் அந்த பொறியில் இந்த திமிங்கலம் கட்டாயம் சிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. லஞ்ச ஒழிப்புத்துறையினர் மனது வைக்க வேண்டும் என்பதே மின் நுகர்வோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் அவரால் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது. லஞ்ச ஒழிப்புத்துறையினரின் செயல்பாடுகளை இனி பொறுத்தி ருந்துதான் பார்க்க வேண்டும்.
நவீன தமிழகத்தின் சிற்பிஎட்டாம் ஆண்டு நினைவு தினம்
பறவைக் காவடி எடுத்து பக்தர்கள் ஸ்ரீ பாலமுருகனுக்கு நேர்த்திக்கடன்!வேலூர், ஆக. 8-வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், அணைக்கட்டு அடுத்த மூலகேட் பகுதியில் வேலாடும் தணிகை மலையில் ஸ்ரீ பாலமுருகன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்கு ஆண்டுதோறும் பக்தர்கள் ஆடி மாத கிருத்திகையில் பறவைக்காவடி மற்றும் வேல் அலகு குத்தியும் மற்றும் பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்ள தங்களது நேர்த்திக்கடனை வேண்டியது போல செலுத்தி வருவது வழக்கம். அதேபோன்று இந்த ஆண்டும் ஆடி மாத கிருத்திகையை முன்னிட்டு வேலாடும் தணிகை மலை ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்திற்கு பறவைக் காவடி எடுத்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். அணைக்கட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
மத்திய அமைச்சரை சந்தித்து வேலூர் விமான நிலையத்தை விரைவில் திறக்க கோரிக்கை: எல்.கே. சுதீஷ் எம்.பி. வலியுறுத்தல்வேலூர், ஆக. 8-தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தேமுதிக) பொருளாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான எல்.கே. சுதீஷ், எம்.பி., மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரை வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து, வேலூர் விமான நிலையத்தை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரி மனு அளித்தார்.அவர் அளித்த மனுவில், RCS-UDAN-II திட்டத்தின் கீழ் 2017ஆம் ஆண்டு வேலூர் விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டதாகவும், தற்போது DGCA ஆய்வுப் பணிகள் நிறைவடைந்து, விமான நிலைய உரிமம் வழங்கும் இறுதிக்கட்ட நடைமுறைகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.தற்போது BCAS-இன் இறுதி பாதுகாப்பு அனுமதி வழங்கப்பட வேண்டிய நிலையில் உள்ளதாகவும், அந்த அனுமதி கிடைத்தவுடன் DGCA உரிமம் வழங்கி, விமான நிலையத்தை உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வர முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட வடதமிழக மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் கடந்த 9 ஆண்டுகளாக விமானப் போக்குவரத்து வசதிக்காக காத்திருப்பதாகவும், விமான நிலையம் செயல்பாட்டுக்கு வந்தால் மருத்துவ சுற்றுலா, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (MSME), மாணவர்கள், தொழில் முனைவோர் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பயனடைவதுடன், வடதமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.எனவே, BCAS மற்றும் DGCA அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கி, இறுதி பாதுகாப்பு அனுமதி மற்றும் விமான நிலைய உரிமத்தை விரைந்து வழங்கி, UDAN திட்டத்தின் கீழ் வேலூர் விமான நிலையத்தில் விமான சேவைகளை உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சரிடம் எல்.கே. சுதீஷ் எம்.பி. கோரிக்கை விடுத்தார்.இந்த முயற்சியின் மூலம் வேலூர் விமான நிலையம் விரைவில் செயல்பாட்டுக்கு வந்து, வடதமிழகத்தின் விமானப் போக்குவரத்து இணைப்பு வலுப்பெறும் என்ற நம்பிக்கையை தேமுதிக தெரிவித்துள்ளது.
விரிஞ்சிபுரம் காவல் நிலையத்தில் புதிய ஆய்வாளர் பொறுப்பேற்பு!வேலூர், ஆக. 8-வேலூர் மாவட்டம், விரிஞ்சிபுரம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக எழில்வேந்தன் பொறுப்பேற்றுக் கொண்டார். காவல் நிலையத்தில் நடைபெற்ற எளிய நிகழ்வில் அவர் அதிகாரப்பூர்வமாக கையொப்பமிட்டு தனது பணியைத் தொடங்கினார். பொதுமக்களின் குறைகளை விரைந்து தீர்க்கவும், சட்டம்–ஒழுங்கை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். பொதுமக்கள் தன்னை தொடர்பு கொண்டு புகார்களை தயக்கமின்றி தெரிவிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
‘எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தவர் கருணாநிதி’தி.மு.க., ஒன்றிய செயலாளர் என்.சங்கர் புகழாரம் !செய்யாறு, ஆக. 8 -செய்யாறு அடுத்த வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவுதினத்தையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. கிராம மக்கள் 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.வெம்பாக்கம் அடுத்த கனிகலுப்பை கிராமத்தில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு, வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.சங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட அயலக அணி துணைத் தலைவர் எம்.கே. கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். கிராம நுழைவுவாயிலில் நிறுவப்பட்டிருந்த கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.அப்பொழுது வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.சங்கர் பேசியதாவது; ‘தமிழகத்தில் 7 முறை முதல்வராக பதவி வகித்தவர் முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதி. இவரால், கொண்டுவரப்பட்ட எண்ணற்ற திட்டங்களால் இன்றும் பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். தமிழகத்தில் புதியதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள த.வெ.க., அரசு அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் மின்சாரத்தை இலவசமாக கொடுக்கும் என கூறியுள்ளது. ஆனால், ஒரு யூனிட்டுக்கு ஒரு ரூபாய் 50 காசை கூடுதலாக உயர்த்தி விட்டு, இலவச மின்சாரத்தை கொடுக்கிறோம் என்று சொல்வதில் அர்த்தமே இல்லை. ஏமாற்று வேலையை செய்து வருகிறது இந்த புதிய அரசு;’ இவ்வாறு ஒன்றிய செயலாளர் என்.சங்கர் நிகழ்ச்சியில் பேசினார். இதையடுத்து மாவட்ட துணைத் தலைவர் எம்.கே. கார்த்திகேயன் பேசும்போது; ‘தி.மு.க., ஒரு ஆலமரம் போன்றது. ஆலமரம் பட்டுப் போனாலும் விழுதுகள் தாங்கிப் பிடிக்கும். அதுபோல தமிழகத்தில் தி.மு.க., மீண்டும் மலரும். அதுவரை காத்திருப்போம்; ‘இவ்வாறுஎம்.கே.கார்த்திகேயன் பேசினார். இதைத் தொடர்ந்து கிராம மக்கள் 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் விநியோகம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தி.மு.க., பொறுப்பாளர்களான பிரபு, அமல்ராஜ், தியாகு, சின்னதுரை, தர்மலிங்கம், துரை உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஆடி மாத கிருத்திகையை முன்னிட்டு காட்பாடி செங்குட்டையில் அன்னதானம் வழங்கல்!வேலூர் ,ஆக.8-வேலூர் மாவட்டம், காட்பாடி செங்குட்டை பகுதியில் திரௌபதி அம்மன் கோயில் எதிரில் சித்தூர்- கடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரம் சாமியானா பந்தல் அமைத்து ஆகஸ்ட் மாத (ஆடி) கிருத்திகையை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த அன்னதானம் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இடைவிடாது ஒரு மணி நேரம் வழங்கப்பட்டது. இந்த நன்னாளில் முருக பக்தர்களுக்கு வேலூர் செங்குட்டை மாடு விடும் தெருவைச் சேர்ந்த பாரத் காஸ் அச்சுதன் -அமுதா தம்பதியர் அன்னதானம் வழங்கினர். இந்த அன்னதானத்தில் கேசரி மற்றும் மதிய உணவாக சாம்பார் சாதம், ரசம் சாதம், வாழைப்பழம், மசால் வடை ஆகியன வழங்கப்பட்டது. சுமார் 500க்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் வரிசையில் நின்று இந்த அன்னதானத்தை பெற்று உண்டு மகிழ்ந்து தங்களது பசியாற்றி கொண்டனர்.இந்த அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை அச்சுதன் தனது திருக்கரங்களால் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது. முதலாவதாக ஸ்ரீ பாலமுருகன் திருவுருவப் படத்துக்கு மலர்களால் அலங்காரம் செய்து வழிபாடு நடந்தது. இதையடுத்து அன்னதானம் நடந்தது. இந்த அன்னதானத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அச்சுதன் -அமுதா தம்பதியருடன் அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்கள், நெருங்கிய உறவினர்கள் வெகு விமரிசையாக செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் அச்சுதனுக்கு உதவியாக தெலுங்கானா நக்சலைட் தேடுதல் வேட்டை பிரிவு உதவி ஆய்வாளர் ரவி, அதிமுக முன்னாள் கவுன்சிலர் காட்பாடி செங்குட்டை குமார், தொழிலதிபர் நந்தகுமார் பேருதவி புரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
1
…
3
4
5
…
93
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.