காஞ்சிபுரம் சட்டசபை தொகுதியின் வெற்றிக்கு பாடுபட்டவர் மாற்றுத் திறனாளியான மதன்குமார் ஆவார். இவரது கடின உழைப்பால் நான் 15 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். இந்த தகவலை எனக்கு அமைச்சர் தென்னரசு தான் தெரிவித்துள்ளார். இதை அறிந்த நான் மதன்குமாருக்கு காஞ்சிபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் பதவியை வழங்கினேன். எனது நேர்முக உதவியாளரார் பொறுப்பையும் வழங்கி உள்ளேன். இந்த பொதுக்கூட்ட மேடையில் வாலிபர் மதன்குமாரை முதல் வரிசையில் அமர வைத்து அழகு பார்க்க நினைத்தேன் அதுவும் நிறைவடைந்தது. கட்சியில் பாடுபடுபவர்களுக்கு பதவிகள் தானாக வந்து சேரும் என்பது மதன்குமார் ஒரு எடுத்துக்காட்டாகும்; ”இவ்வாறு வனத் துறை அமைச்சர்
ஆர்.வி.ரஞ்சித்குமார் பேசினார். கூட்டத்தில் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என, பலரும் கலந்து கொண்டனர்.













Leave a Reply