கோவை மாவட்டம்
மேட்டுப்பாளையம், நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்களின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) நிலுவைத் தொகையைச் செலுத்தக் கோரி, நகராட்சி அலுவலகத்தில் இன்று (06.07.2026) முக்கிய கூட்டு நடவடிக்கை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையர் மற்றும் காவல் துறை துணை கண்காணிப்பாளர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், C.I.T.U தொழிற்சங்கநிர்வாகிகள்
தோழர் ஷானவாஸ் .
சாமுவேல்.
முகமது அலி ஜின்னா.
ஹபிபுல்லா.
நாகராஜ்.
மற்றும் விடுதலை சிறுத்தைகள் துப்புரவுத் தொழிலாளர் மேம்பாட்டு தொழிற்சங்கம் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்:
ஒப்பந்த நிறுவனத்திற்கு இறுதி எச்சரிக்கை: கோவை EPF அலுவலக செயல்முறை ஆணையின்படி, தூய்மைப் பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதியைச் செலுத்த வேண்டிய ‘Tectus Infra pvt ltd’ நிறுவனம், இதுவரை அத்தொகையைச் செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளது.
எனவே, வரும் ஜூலை 08, 2026-ஆம் தேதிக்குள் அத்தொகையைச் செலுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரூ.48 லட்சம் நிலுவைத் தொகை வசூலிக்க நடவடிக்கை: ஒருவேளை ஒப்பந்த நிறுவனம் பேச்சுவார்த்தைக்கு உடன்படவோ அல்லது தொகையைச் செலுத்தவோ தவறினால்,
கோவை EPF அலுவலகத்தின் செயல்முறை ஆணை எண்: 607/2025-ன் படி, நிலுவையில் உள்ள மொத்தத் தொகையான ரூ. 48,16,642/- எதிர்வரும் 30.07.2026-க்குள் செலுத்த நகராட்சி நிர்வாகத்தின் மூலமாகவே உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இவ்விவகாரத்தில் தொழிலாளர்களின் நலன் காக்கப்படும் வகையில் எட்டப்பட்ட இந்த முக்கிய முடிவுகளின் அதிகாரப்பூர்வக் கூட்டு நடவடிக்கை ஆவணத்தில், மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையர் அவர்கள் கையொப்பமிட்டு உத்தரவிட்டுள்ளார். நகராட்சி நிர்வாகத்தின் இந்த உறுதியான நடவடிக்கையால் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள் தங்களது உரிமைகள் மீட்கப்படும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றனர்










Leave a Reply