கோவை மற்றும் நீலகிரி மலைப்பகுதிகளில் நிலவும் பருவநிலை மாற்றம் மற்றும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைவதைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களின் உயிர், உடைமைகள், பயிர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் சில முக்கிய முன்னெச்சரிக்கை கோரிக்கைகளை மேட்டுப்பாளையம் தாலுக்கா சிஐடியு (CITU) பொதுத் தொழிலாளர் சங்கம் சார்பாக மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து வலியுறுத்தியிருந்தோம்.
நம் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்களின் அடிப்படையில் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகம் நமக்கு அதிகாரப்பூர்வப் பதில் கடிதம் அனுப்பியுள்ளது.

மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்புகள்:
முன்னெச்சரிக்கை கூட்டங்கள்: தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தலைமையில் கடந்த 11.05.2026 மற்றும் 02.06.2026 ஆகிய தேதிகளில் அனைத்துத்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்: பருவமழை காலங்களில் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம், அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
துரித நடவடிக்கைகள்: மழைப் பொழிவு மற்றும் பேரிடர் பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில், உடனடியாக போர்க்கால அடிப்படையில் களமிறங்கி துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்துத்துறை அதிகாரிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை சார்ந்த கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் முக்கியத்துவம் அளித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ள தமிழக அரசிற்கும் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு
மேட்டுப்பாளையம் தாலுக்கா சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்கம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
- தோழமையுடன்,
S. பாஷா,










Leave a Reply