வேலூர், அக்.24-
வேலூர் மாவட்டம் – கே.வி.குப்பம் ஒன்றியம் – பி.என். பாளையம் ஊராட்சியில் 23.10.2026 – வெள்ளிக்கிழமை அன்று
வேலூர் மாவட்ட ஆட்சியர் P.S. லீலா அலெக்ஸ், சுகாதாரப் பணிகள் மற்றும் குடிநீர் விநியோகப் பணிகளை ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், ஊராட்சி அலுவலக எழுத்தர் ஜெஸ்டின் செல்வகுமார் ஊராட்சி அலுவலகத்திற்கு வரவில்லை. உயர் அதிகாரிகளின் தொலைபேசி அழைப்புகளுக்கும் பதிலளிக்கவில்லை .இவ்வாறு கூறப்படும் நிலையில், மாவட்ட ஆட்சியரின் ஆய்வு திடீரென ரத்து செய்யப்பட்டு, அடுத்ததாக லத்தேரி ஊராட்சியில் ஆய்வு மேற்கொள்ளச் சென்றதாகத் தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.
இதனால், மாவட்ட ஆட்சியரிடம் தங்களது குடிநீர், சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான குறைகளை நேரடியாகத் தெரிவிக்கலாம் என எதிர்பார்த்திருந்த பி.என். பாளையம் ஊராட்சி பொதுமக்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
பொதுமக்களின் கேள்விகள்:
மாவட்ட ஆட்சியரின் ஆய்வு ஏன் திடீரென ரத்து செய்யப்பட்டது?
ஊராட்சி அலுவலகப் பணியாளர் வருகை மற்றும் உயர் அதிகாரிகளின் அழைப்புகளுக்குப் பதிலளித்தல் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படுமா?
பி.என். பாளையம் ஊராட்சியில் ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்ட குடிநீர் மற்றும் சுகாதாரப் பணிகள் குறித்து மாவட்ட நிர்வாகம் எப்போது ஆய்வு மேற்கொள்ளும்?
பொதுமக்களின் குறைகளைக் கேட்டு தீர்வு காண மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமா?
பொதுமக்களின் கோரிக்கை:
மாவட்ட ஆட்சியர் அவர்கள் பி.என். பாளையம் ஊராட்சிக்கு மீண்டும் நேரில் வருகை தந்து, குடிநீர் விநியோகம், சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து நேரடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மேலும், ஆய்வு தடைப்பட்டதற்கான காரணத்தை விசாரித்து, உண்மை நிலையைப் பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு கிடைப்பதே முக்கியம்.
பி.என். பாளையம் ஊராட்சி பொதுமக்களின் சார்பாக கோரிக்கை விடுத்துள்ளனர் சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊராட்சி நடுநிலையாளர்கள். மாவட்ட ஆட்சியர் வருவதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு அந்த ஊராட்சி உள்ள தில்லுமுல்லுகள் வெட்ட வெளிச்சத்திற்கு வந்து விடும் என்று பயந்து ஊராட்சி எழுத்தர் வரவில்லையா? இல்லை வேறு ஏதாவது காரணமா? என்பதும் சிதம்பர ரகசியமாகவே இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் பி. என். பாளையம் ஊராட்சி எழுத்தர் மீது துறை ரீதியான நடவடிக்கையை விரைவில் எடுக்க வேண்டும். நடவடிக்கை என்ன எடுக்க போகிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் .










Leave a Reply