வேலூர் மாவட்டத்தில் சிறப்பு சுருக்கத் திருத்தம் – 2027 வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

வேலூர், நவ.13-
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சிறப்பு சுருக்கத் திருத்தம் – 2027-க்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பி.எஸ். லீலா அலெக்ஸ் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.
இந்நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் மரு.து. சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பொ. குணசேகரன், வேலூர் கோட்டாட்சியர் ராம்குமார், குடியாத்தம் கோட்டாட்சியர் செந்தில்குமார், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி.) சி. மாறன், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், தேர்தல் வட்டாட்சியர் ரமேஷ், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், வேலூர் மாநகர மாவட்ட தலைவர் வாஹித் பாஷா, மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாவட்ட துணைத் தலைவர் பி.பி. சந்திரபிரகாஷ், தவெக நிர்வாகி நாகு உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.