சேண்பாக்கத்தில் வேலூர் கொடுக்கும் கரங்கள் அறக்கட்டளை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்!

வேலூர், நவ.13-
வேலூர் மாவட்டம், காட்பாடி சட்டமன்றத் தொகுதி, சேண்பாக்கம் காந்தி சிலை, சமுதாயக் கூடம், கொடுக்கும் கரங்கள் அறக்கட்டளை மற்றும் சிஎம்சி கண் மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம், அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் ஜே.கே.ஆர். தமிழ்வாணன் தலைமையில் நடைபெற்றது.
இம்முகாமில் சிறப்பு அழைப்பாளராக காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். எம். சுதாகர், இலவச கண் சிகிச்சை முகாமைத் தொடங்கி வைத்துச் சிறப்பித்தார். சிஎம்சி கண் மருத்துவமனை மருத்துவரும், முகாம் ஒருங்கிணைப்பாளருமான ஹிட்லர் தலைமையில் கண் மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் நடைபெற்றது.

இதில் வேலூர் மாநகராட்சி 4வது மண்டல சுகாதார அலுவலர் முருகன் மற்றும் தூய்மை பணியாளர்கள், சி.எம்.சி. மருத்துவமனையின் கண் மருத்துவத் துறை சார்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், கொடுக்கும் கரங்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். இம்முகாமில் 500க்கு மேற்பட்ட சேண்பாக்கம் சுற்றியுள்ள பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்று பயனடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுமக்களின் கண் நலனைக் கருத்தில் கொண்டு இலவச மருத்துவ முகாமை ஏற்பாடு செய்த கொடுக்கும் கரங்கள் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் ஜே.கே.ஆர். தமிழ்வாணன் மற்றும் நிர்வாகத்தினரைப் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.