வேலூர்,நவ.13-
வேலூரில் புதிய மாநகராட்சி அருகில் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையம் இயங்கி வருகிறது. இந்த சேவை மையமானது கடந்த மூன்று நாட்களாக செயலிழந்து முடங்கிப் போய் கிடக்கிறது. இதனால் வாடிக்கையாளர்கள் கடந்த மூன்று நாட்களாக நடையாய் நடந்து கொண்டுள்ளனர். பலரது செல்போன்கள் முகவரி மற்றும் ஆதார் கார்டு சரி பார்க்கும் பணி என்று சொல்லி இன்கமிங், அவுட்கோயிங் வசதிகளை நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் வாடிக்கையாளர்கள் சொல்லொனா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். வேலூரில் உள்ள வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு வாடிக்கையாளர்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். ஆனால் அவர்கள் கூறும் ஒரே பதில் சர்வர் டவுன் ஆதலால் இது என்றைக்கு சரியாகும் என்று எங்களுக்கே தெரியாது என்ற ரீதியில் பதில் சொல்லி வருகின்றனர். குறிப்பாக இந்த வாடிக்கையாளர் சேவை மையத்தில் பணிபுரிவோர் யாரும் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதாக தெரியவில்லை. அவர்களது உறவினர்களுக்கு சேவை செய்வது போல் தெரிகிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் நாங்கள் இவ்வளவுதான் வேலை செய்ய முடியும். அதற்கு மேல் வேண்டுமென்றால் நீங்கள் செய்து கொள்ளுங்கள் என்று வருவோர் போவோரை ஒருமையில் அழைத்து அவர்களுடைய சுயமரியாதையை கேலி, கிண்டல் செய்யும் வகையில் நடந்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தனது பணியை தனது இருக்கையில் அமர்ந்து செய்யாமல் இங்கு பணிபுரிவோர் நடந்து கொண்டே இருக்கின்றார்கள். குறிப்பாக அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமருவதே கிடையாது. ஏதோ கடமைக்கு ஐந்து நிமிடங்கள் கூட அமராமல் வாடிக்கையாளர்களை இழுத்தடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர் என்று சொன்னால் அதுதான் நிதர்சன உண்மை. இவ்வாறு பிஎஸ்என்எல் நிறுவனத்தின் செயல்பாடு மிகவும் பரிதாபத்திற்குரிய நிலையிலும் கேட்பவர்கள் யாருமில்லை என்ற ரீதியில் செயல்பட தொடங்கியுள்ளனர். பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு விரைந்து சேவை வழங்குமா? அல்லது இப்படி கிடப்பில் போட்டுவிட்டு வேடிக்கை பார்க்குமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.











Leave a Reply