வேலூர், நவ.13-
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட முக்கிய சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் விபத்து அபாயமும் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து
சாலைகளில் திரியும் மாடுகளைப் பிடிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி மாநகராட்சி மண்டலம் 2-க்கு உட்பட்ட ஆற்காடு சர்வீஸ் சாலை மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும் இடையூறாகத் திரிந்த 4 மாடுகளை மாநகராட்சி பணியாளர்கள் பிடித்தனர்.
மேலும் பொது இடங்களில் மாடுகளைத் திரியவிட்ட அவற்றின் உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ. 6,000 அபராதம் விதிக்கப்பட்டது.
பொதுமக்களுக்கும், வாகனப் போக்குவரத்திற்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் கால்நடைகளைச் சாலைகளில் திரியவிட்டால் அவை தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு உரிமையாளர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாநகராட்சி அலுவலர்கள் எச்சரித்துள்ளனர்.











Leave a Reply